- Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் : வீட்டில் உணவு குறைவாக இருக்கும்போதோ, சமையல் செய்ய நேரமில்லை என்றாலோ, சாப்பிடுவதற்கு வெளியே செல்ல முடியவில்லை என்றாலோ, அந்த நேரத்தில் நீங்கள் நினைத்த உணவு உங்கள் வீடு தேடி வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் Zomato.
- ஆம், அப்படி தற்போதைய காலகட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் Zomato. இந்த நிறுவனம் உணவகங்கள், மெனு, விலைகள் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்வதற்கான ஒரு பிளாட்பார்மை (Platform) உருவாக்கி உள்ளது.
- உணவுத் தொழில்நுட்பம் இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இந்தத் துறையில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் “Zomato” தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது.
- இதை உருவாக்கியவர்கள் தீபிந்தர் கோயல் மற்றும் பங்கஜ் சடா. இவர்களின் கனவு தற்போது கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேடலுக்கு ஒரு பதிலாக மாறிவிட்டது.
- உணவகங்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யும் வசதியைக் கொண்டுவந்து மக்களின் தேவைகளுக்கு மட்டுமில்லாமல், வியாபார வளர்ச்சிக்கும் ஒரு முக்கியப் பாதையை அமைத்துத் தந்துள்ளனர்.
- இதற்குப் பின்னணியில் உள்ள தீபிந்தர் கோயலின் வெற்றிக் கதை பல சவால்களையும், சுவாரசியங்களையும் கடந்து வந்துள்ளது. இந்தப் பதிவில் அவர் கடந்து வந்த பாதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் அவர்களின்,
- ஆரம்பகால வாழ்க்கை
- கோயலின் பொழுதுபோக்கு
- Zomato உருவான கதை
- Zomato-வின் உலகளாவிய வளர்ச்சி
- Zomato-வின் பங்குச் சந்தைக்கு வருகை
- Zomato-வின் வருமானமும், நிகர மதிப்பும்
- கோயலின் தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்
- Zomato பற்றிய 5 பொதுவான கேள்விகள் (FAQ)
ஆகியவற்றை இந்தப் பதிவில் வழங்கியுள்ளோம்.
ஆரம்பகால வாழ்க்கை

- Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் ஜனவரி 26, 1983-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் முக்த்சார் (Muktsar) என்னும் நகரில் பிறந்தார். இவர் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர்.
- இவர் சிறிய நகரத்தில் வளர்ந்தாலும், பள்ளிக்கூடத்தில் இருந்த போதே கணிதத்திலும், கணினித் தொழில்நுட்பத்திலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளார்.
- அவரின் கடின உழைப்பால் இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஒன்றான இந்தியத் தொழில்நுட்பக் கழகம், டெல்லியில் (IIT Delhi) சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
- அங்கு 2005-ம் ஆண்டு கணிதம் மற்றும் கணினி (Mathematics and Computing) துறையில் தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்ற அவர், தொழில்நுட்ப உலகில் ஒரு தனி இடத்தைப் பிடிக்க விரும்பினார்.
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல்
கோயலின் பொழுதுபோக்கு
- Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் ஒரு தொழில்நுட்ப நிபுணராக மட்டுமில்லாமல், கவிதை மற்றும் புத்தகங்களை விரும்பும் ஒரு புத்துணர்ச்சியான நபரும் ஆவார். அவருக்கு நூல்கள் வாசிப்பதில் தனி ஆர்வம் இருந்தது.
- இதன் காரணமாக Culture என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இந்நிலையில், அவர் தொழில் உலகில் மட்டுமில்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையிலும் பெரும் சாதனைகளைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Zomato உருவான கதை
- தீபிந்தர் கோயல், உணவில் ஆர்வம் கொண்ட நபராக இருந்தாலும், உணவை ஆர்டர் செய்வது எளிதான விஷயம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார்.
- அவர் இருந்த காலகட்டத்தில், உணவகங்களில் உணவை வாங்க பலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. அது மட்டுமில்லாமல், ஆன்லைன் உணவை ஆர்டர் செய்யும் முறையும் முழுமையாகவும், சரியாகவும் அமைந்திருக்கவில்லை.
அஞ்சல்துறை டிஜிட்டல் மாற்றம் – நிதியமைச்சர் சந்திப்பு!
- உணவின் தரம், தள்ளுபடி, மதிப்பீடுகள் போன்ற விவரங்களை அறிய முடியாததால், உணவகங்களைத் தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்து வந்தது.
A) Zomato யோசனை எப்படி வந்தது?
- Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல், தனது ஐஐடி டெல்லி பட்டப்படிப்பை முடித்த பிறகு, 2006-ஆம் ஆண்டு பெயின் & கம்பெனி (Bain & Company) என்னும் சர்வதேச ஆலோசனை நிறுவனத்தில் “சீனியர் அசோசியேட் கன்சல்டன்ட் (Senior Associate Consultant)” ஆகப் பணியமர்த்தப்பட்டார்.
- அங்கு வேலை செய்தபோது, அலுவலக ஊழியர்கள் உணவுக்காக மெனுக்களைத் தேடுவதில் சிரமபடுவதை கவனித்தார். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அவர் 2008-ஆம் ஆண்டு FoodieBay என்ற ஒரு இணையதளத்தை உருவாக்கினார்.
- இது பல்வேறு உணவகங்களின் மெனு, விலை, மதிப்பீடு, தள்ளுபடிகள் போன்ற தகவல்களை ஒரே இடத்தில் வழங்கியது. மக்களும் எளிதாக உணவகங்களைத் தேர்வு செய்து, தங்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்த முடிந்தது.
B) FoodieBay முதல் Zomato வரை:
2010-ஆம் ஆண்டு FoodieBay என்னும் பெயரை Zomato என மாற்றினார். அவர் உலகளாவிய அளவில் தன்னுடைய நிறுவனத்தைப் பிரபலப்படுத்த வேண்டும் என்பதால்தான் இந்தப் பெயரை மாற்றியுள்ளார்.
C) Zomato-வின் சிறப்பம்சங்கள்:

- உணவகங்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிவித்தல்.
- உணவு ஆர்டர் செய்ய எளிதான வழிமுறைகளைக் காட்டுதல்.
- உணவகங்களின் மதிப்பீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விமர்சனங்களைப் பகிரச் செய்தல்.
- டேபிள் முன்பதிவு மற்றும் உணவு டெலிவரி வசதிகளை ஏற்படுத்தித் தருதல்.
இவ்வாறு, தீபிந்தர் கோயல் தன்னுடைய ஆர்வத்தையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து Zomato என்ற ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி, உணவு ஆர்டர் செய்யும் முறையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார்.
Zomato-வின் உலகளாவிய வளர்ச்சி
Zomato இன்று இந்தியாவில் மட்டுமில்லாமல், உலக அளவிலான உணவு விநியோக சேவைகளை வழங்கி வளர்ந்து வருகிறது. இது வெறும் ஒரு ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் செயலியாக மட்டுமில்லாமல், பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வளர்ச்சி பெற்று வருகிறது. இதற்குக் காரணம், பல்வேறு முதலீட்டாளர்களின் ஆதரவும், தொடர்ச்சியான நிதி திரட்டும் முயற்சிகளும் ஆகும்.
A) முதலீட்டாளர்கள் மற்றும் முதலீடுகள்:
Zomato பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து நிதியைத் திரட்டியுள்ளது. இதன் முக்கிய முதலீட்டாளர்கள் பின்வருமாறு,
- Info Edge India.
- Sequoia Capital.
- Vy Capital.
- Temasek (சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனம்).
- Alibaba-வின் Ant Financial.
Ant Financial நிறுவனம் $200 மில்லியன் (20 கோடி டாலர்) முதலீடு செய்ததன் மூலம், Zomato-வின் மதிப்பு $1 பில்லியனைத் (100 கோடி டாலர்) தாண்டியது. இதனால், Zomato ஒரு “யூனிகார்ன்” (Unicorn) நிறுவனத்தின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
B) Zomato-வின் இந்திய அளவிலான வளர்ச்சி:
Zomato, தனது முதல் வெற்றியை டெல்லி என்சிஆர் (Delhi-NCR) பகுதியில் கண்டது. பிறகு, இது வேகமாக பிற நகரங்களுக்கு விரிவடைந்தது:
- பூனே (Pune).
- அகமதாபாத் (Ahmedabad).
- பெங்களூரு (Bengaluru).
- சென்னை (Chennai).
- ஹைதராபாத் (Hyderabad).
C) Zomato-வின் சர்வதேச வளர்ச்சி:

Zomato, இந்தியாவிற்கு வெளியே தனது சேவைகளை விரிவாக்கும் முயற்சியை 2012-ம் ஆண்டு தொடங்கியது. அதன் முதல் சர்வதேச சந்தைகள்:
- இலங்கை.
- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE).
- கட்டார் (Qatar).
- தென் ஆப்பிரிக்கா.
- UK.
- பிலிப்பைன்ஸ்.
2013-ம் ஆண்டு,
- நியூசிலாந்து.
- துருக்கி.
- பிரேசில்.
ஆகிய நாடுகளிலும் தனது சேவைகளை வழங்கத் தொடங்கியது.
“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”
D) Zomato-வின் பிரபலமான ஆப் (App):
Zomato வளர்ச்சியடையும் தருணத்தில், ஸ்மார்ட் போன்கள் மிகவும் பிரபலமானது. இதனைக் கவனித்து, Zomato தனது மொபைல் செயலியை (App) அறிமுகப்படுத்தியது. இது உணவு ஆர்டர் செய்வதை மிகவும் எளிதாக மாற்றியது.
E) பிற நாட்டிலுள்ள நிறுவனங்களை வாங்கிய Zomato:
Zomato வேகமாக வளர்ச்சியடையும்போது, பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்கியது. அவற்றில் முக்கியமானவை:
- 2014-ஆம் ஆண்டு – Gastronauci (போலந்து) மற்றும் Cibando (இத்தாலி) – உணவகத் தேடல் சேவைகள்.
- 2015-ஆம் ஆண்டு – NexTable (அமெரிக்கா) – பெரிய அளவிலான டேபிள் முன்பதிவு சேவை.
- 2015-ஆம் ஆண்டு – Urbanspoon (அமெரிக்கா) – உணவக டைரக்டரி ஆப்லிகேஷன் (Restaurant directory application). ஆனால், இது வெறும் 5 மாதங்களில் மூடப்பட்டது.
Zomato-வின் பங்குச் சந்தைக்கு வருகை

Zomato, இந்தியாவின் மிகப்பெரிய உணவுத் தொழில்நுட்ப (FoodTech) யூனிகார்ன் (Unicorn) நிறுவனம் ஆகியவை 2021-ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் (Stock Market) முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டது. இது இந்திய ஸ்டார்ட்-அப் (Start-up) உலகத்திற்கான மிகப்பெரிய சாதனையாக அமைந்தது.
A) Zomato-வின் முதன்முறையான பங்கு வெளியீடு:
- ஜூலை 14, 2021 அன்று, Zomato தனது துவக்க பொதுமக்கள் பங்கு வெளியீட்டைத் (Initial Public Offering – IPO) தொடங்கியது. அப்போது, இது ரூ. 9,375கோடி மதிப்புள்ள IPO ஆக இருந்தது.
- ஒரு பங்கின் விலை ரூ. 72 – ரூ. 76 ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பங்கின் அசல் மதிப்பு (Face Value) வெறும் ரூ.1 ஆக மட்டுமே இருந்தது
- ஜூலை 16, 2021 அன்று, IPO முடிவடைந்த போது, இது 35 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்களால் பதிவுசெய்யப்பட்டது. இதன் மூலம், முதலீட்டாளர்கள் Zomato-வில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை இது காட்டியது.
B) Zomato பங்குச் சந்தையில் நுழைந்த சாதனை:
- ஜூலை 23, 2021 அன்று Zomato, பங்குச் சந்தையில் (Stock Exchange) முதன்முறையாகப் பட்டியலிடப்பட்டது.
- அப்போது, Zomato-வின் சந்தை மதிப்பு (Market Valuation) $13.3 பில்லியனைக் (ரூ. 1 லட்சம் கோடி) கடந்தது.
- பங்குகளின் விலையிடு விலை (Issue Price) ரூ. 76 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
AI America vs China 2025 – மனிதரை விட புத்திசாலியாக?
இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு “முக்கியமான புதிய வாய்ப்புகளை” வழங்கும் என்பதைக் காட்டும் வகையில் முதல் சிறந்த உதாரணமாக Zomato IPO அமைந்தது.
C) புதிய உச்சத்தைத் தொட்ட Zomato பங்குகளின் விலை:
- நவம்பர் 16, 2021 அன்று, Zomato பங்கின் விலை ரூ. 169.10 ஆக உயர்ந்து, அதிகபட்ச வரலாற்று உயர்வை (All-time high) அடைந்தது.
- இது பங்குகளை ஆரம்ப விலையில் வாங்கிய முதலீட்டாளர்களுக்கு 120% லாபம் கொடுக்கும் வகையில் அமைந்தது.
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் – வருமானமும், நிகர மதிப்பும்
Zomato, ஒரு சிறிய ஸ்டார்ட்-அப்பாக இருந்து, இன்று இந்தியாவின் மிகப்பெரிய உணவு விநியோக (Food Delivery) மற்றும் உணவக மதிப்பீட்டு (Restaurant Review) நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி இதுவரை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது.
A) Zomato-வின் தொடக்க வருமானம் (2011 – 2015):
- 2011-12 நிதியாண்டில் (FY 2011-12), Zomato ரூ. 2.04 கோடி வருமானத்தைப் பெற்றது.
- 2012-13 நிதியாண்டில் (FY 2012-13), இந்த வருமானம் ரூ. 11.38 கோடியாக உயர்ந்தது.
- 2 ஆண்டுகளுக்குள் Zomato-வின் வருமானம் 5 மடங்காக அதிகரித்தது.
Zomato இணையதளத்தின் (Website) பார்வையாளர்களும் அதிக அளவில் அதிகரித்தனர்.
- மார்ச் 2012 – 2.5 மில்லியன் (25 லட்சம்) பயனர்கள்.
- 2014 – 62.5 மில்லியன் (6.25 கோடி) பயனர்கள்.
Zomato-வின் இணையதள பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 வருடங்களில் 25 மடங்கு உயர்ந்தது. இதனால், வருமானமும் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது.
- 2012-ஆம் ஆண்டு – ரூ. 30.06 கோடி வருமானம்.
- 2015-ஆம் ஆண்டு – ரூ. 96.7 கோடி வருமானம்.
- 3 ஆண்டுகளில் இதன் வருமானம் 3 மடங்காக உயர்ந்தது.
B) Zomato-வின் சமீப வளர்ச்சி (2025):

i) பயணிகளின் டிக்கெட்டிங் துறையில் விரிவாக்கம்:
$ 244.2 மில்லியன் (இந்திய ரூபாயில் சுமார் ரூ. 1,800 கோடி) மதிப்புடைய Paytm-ன் டிக்கெட் நியூ (ticketnew) மற்றும் இன்சைடர் (Insider) போன்ற டிக்கெட்டிங் துறைகளை, Zomato நிறுவனம் வாங்கியுள்ளது. இது, Zomatoவின் வருவாய் வளர்ச்சியில் முக்கியப் பங்கை வகிக்கிறது.
ii) மென்பொருள் மேம்பாடு:
Zomato, தனது செயலியில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி, பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் உணவு ஆர்டர் செய்வதில் எளிமையும், விரைவாக ஆர்டர் செய்யும் வசதியும் அதிகரித்துள்ளது.
iii) பொருளாதார முன்னேற்றம்:
2025-ஆம் ஆண்டு 29% வருவாய் வளர்ச்சி விகிதத்துடன் லாபகரமான நிலையை அடையத் திட்டமிட்டுள்ளது. இந்த வளர்ச்சி அதிகமான பயனர்களின் ஈடுபாடு மற்றும் ஆடர்களின் மூலம் பெறப்படும்.
தீபிந்தர் கோயலின் தனிப்பட்ட மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்
Zomato, 2021-ஆம் ஆண்டில் Start-up of the Year என்ற விருதைப் பெற்றது. சிறிய துவக்கத்தை வைத்துக்கொண்டு, உலகளாவிய உணவு விநியோக வணிகமாக மாற்றியதைப் பார்க்கும் போது, டீப்பீந்தர் கோயலின் உறுதியும், கடுமையான உழைப்பும் தெளிவாகத் தெரிகிறது. அவரின் நிலையான முயற்சிகளும், ஒத்துழைப்பும் Zomato-வை சிறந்த நிலைக்குக் கொண்டு வந்தது.
OnePlus 13 & 13R: புதிய மொபைல்கள் அறிமுகம்!
A) தனிப்பட்ட சாதனைகள்:
ஆண்டு | சாதனை |
2011 | ET Startup of the Year Award (India) |
2012 | Business Today Young Business Leader Award (India) |
2018 | IIT Delhi-இன் Distinguished Alumni Award (India) |
2019 | GQ Men of the Year Award (India) |
2020 | Fortune India 40 Under 40 List |
2024 | Shark Tank Season 3-இல் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார் |
B) Zomato-வின் முக்கிய மைல்கல்கள்:
ஆண்டு | நிகழ்வு |
2008 | Foodiebay என்று தொடங்கப்பட்டது. பின்னர் Zomato-ஆக மறுசீரமைக்கப்பட்டது |
2011 | ஆன்லைனில் ஆர்டர் செய்யும் தளத்தை அறிமுகப்படுத்தியது |
2014 | UAE-யில் சர்வதேச விரிவாக்கம் |
2015 | Food delivery startup-ல் Runner பட்டத்தை வாங்கியது |
2017 | இந்தியாவின் முதல் Unicorn startup (மூலம் $1 பில்லியன் மதிப்பீடு) ஆனது |
2019 | க்ரோஸரி (Grocery) விநியோக சேவையை அறிமுகப்படுத்தியது |
2021 | இந்திய பங்குச் சந்தையில் IPO (Initial Public Offering) வெளியிட்டது |
2023 | 23 நாடுகளில் சர்வதேச விரிவாக்கம் |
- Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் ஒரு தொழில் முனைவோராக மட்டுமில்லாமல், ஒரு நிறுவனத்தை உலக அளவில் கொண்டு சேர்த்த ஒரு சாதனையாளராக திகழ்கிறார்.
- ஒரு நல்ல தொழில் முனைவோராக மாறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல; குடும்பத்தின் சூழல்களும், எதிர்காலதை பற்றிய நினைவுகளும் எப்பொழுதும் ஒருவருக்குக் கவலைக்குரிய விஷயங்களாக இருக்கும்.
- ஆனால், இவர் தனது கனவைக் கைவிடாமல் தனது குறிக்கோளுக்காக தொடர்ந்து போராடி, இந்திய உணவு விநியோகத் துறைக்கே புதிய வடிவம் கொடுத்துள்ளார். இவருடைய உழைப்பு Zomato- க்கு இன்று பல விருதுகளைப் பெற்று தந்துள்ளது.
- குறிப்பாக, யூசர் சாய்ஸ் (User’s Choice) விருதுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. Zomato நிறுவனம் தனது பயனர்களின் திருப்தியை உறுதிப்படுத்தியுள்ளது.
- தற்போது, Zomato பிப்ரவரி 6, 2025 அன்று தனது பெயரை Eternal என்று மாற்றி புதிய லோகோவை அறிமுகப்படுத்தியது. இந்த மாற்றம் உணவு விநியோகம், Blinkit, District (நிகழ்வுகள்) மற்றும் Hyperpure (சமையலறைப் பொருட்கள்) போன்ற பல்வேறு துறைகளின் விரிவாக்கத்தைப் பிரதிபலிக்கிறது. Blinkit-உடன் இணைந்த பிறகு, அதன் வளர்ச்சியில் ஏற்பட்ட முக்கிய மாற்றம் தான் இந்தப் பெயர் மாற்றத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இவருடைய வாழ்க்கைக் கதை, பல இளைஞர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தைத் அளிக்கும்.
Official Specs: Zomato இந்திய இணையதளம்
Related Link: இந்தியப் பங்குச் சந்தை 2025 - TN NEWS BOX
Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் – FAQs
1) Zomato எப்படி வேலை செய்கிறது?
Zomato ஒரு ஆன்லைன் ஆர்டர் மற்றும் உணவு விநியோகத் தளம் ஆகும். இதில் நீங்கள் அருகிலுள்ள உணவகங்களை தேடி, மெனுவை பார்ப்பதோடு, நேரடியாக உணவை ஆர்டர் செய்து உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் உணவைப் பெற்றுக் கொள்ளலாம்.
2) Zomato-வில் உணவு ஆர்டர் செய்ய எவ்வளவு கட்டணம் இருக்கும்?
உணவகங்கள் நிர்ணயித்த உணவின் விலையைத் தவிர, சில நேரங்களில் டெலிவரி கட்டணம், அரசு வரி, மற்றும் குறிப்பிட்ட இடங்களில் சிறப்புப் பணியாளர்களுக்கான டிப் (Tip) போன்றவை கூடுதலாகச் சேர்க்கப்படலாம்.
3) Zomato-வில் என்ன வகையான உணவகங்கள் இருக்கும்?
Zomato-வில் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு வகையான உணவகங்களைக் காணலாம். இட்லி, தோசை முதல் பாஸ்தா, பர்கர் வரை பல்வேறு உணவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.
4) Zomato-வில் தள்ளுபடி (Discount) மற்றும் சலுகைகள் கிடைக்குமா?
ஆம், Zomato பல்வேறு சலுகைகள், கூப்பன்கள் மற்றும் Zomato Gold/Pro போன்ற சிறப்புச் சேவைகளை வழங்குகிறது. அவற்றின் மூலம் உணவின் விலையை குறைக்கலாம்.
5) Zomato-வில் பணத்தைத் திரும்பப் (Refund) பெற முடியுமா?
உணவு ஆர்டரில் ஏதாவது தவறு இருந்தால் (உணவு தவறாக வந்தது, பாதிக்கப்பட்டது, அல்லது காலதாமதம் ஆகியவை), Zomato வாடிக்கையாளர் சேவையுடன் (Customer care) தொடர்பு கொண்டு பணத்தைத் திரும்பப் பெறலாம், அல்லது மாற்றுத் தீர்வுகளைப் பெறலாம்.
“மேலும் இது போன்ற புதிய சிறந்த தகவல்களை பெற, tnnewsbox.com-ஐ இப்போதே subscribe செய்யுங்கள்!”
"ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் எங்களுக்கு கருத்துக்களின் மூலம் தெரியப்படுத்துங்கள்.
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways
Deepinder Goyal’s journey with Zomato highlights his innovative vision of addressing the market gap for easily accessible restaurant menus and reviews, which led to the creation of a platform revolutionizing food ordering and delivery services. His problem-solving approach, initially focused on providing reliable restaurant information, laid the foundation for Zomato’s global expansion. The company’s growth was fueled by strategic acquisitions and investments, culminating in its IPO in 2021. Goyal’s background in tech, combined with his dedication and hard work, played a crucial role in transforming Zomato from a startup into a unicorn, establishing it as a major player in the global food tech industry.