• Home
  • அரசியல்
  • விஜய் பரந்தூர் மக்கள் சந்திப்பு – முழு தகவல்!

விஜய் பரந்தூர் மக்கள் சந்திப்பு – முழு தகவல்!

பரந்தூர் மக்கள் சந்திப்பு Vijay Public Meeting Preparation

விஜய் பரந்தூர் மக்கள் சந்திப்பு : 2026-ஆம் ஆண்டு நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ள தவெக-வின் தலைவர் விஜய், அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜய், தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் அக்டோபர் 27, 2024 அன்று தன்னுடைய கட்சியின் முதல் மாநில மாநாட்டை தொடக்கி வைத்தார்.

அரசியல் அறிவிப்பிற்குப் பிறகு முதன் முறையாக மேடைக்கு வந்ததால், அவர் என்ன கொள்கைகளுடன் பேசப் போகிறார் என்று மக்கள் ஆர்வமோடு காத்திருந்தனர்.

விஜய் பரந்தூர் மக்கள் சந்திப்பு முக்கிய அறிவிப்பு

பரந்தூர் ரசிகர்கள் கூட்டம் Vijay Fans Gathering Parandur
பரந்தூரில் ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் விஜய்

அதற்கு ஏற்றவாறு நீட் தேர்வு, ஊழல், 2026 தேர்தல் இலக்கு, திமுக பாஜக கட்சிகளை விமர்சித்தது, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளிப்பது போன்ற பல விஷயங்களைப் பற்றிப் பேசினார்.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரிடமிருந்து விமர்சனம் வந்தது. “விஜய் மேடையில் பேசலாம், ஆனால் களத்தில் இறங்க முடியாது” என்பது போன்ற விமர்சனங்கள் வந்தன.

ஆனாலும், தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டிற்குப் பிறகு தமிழகத்தில் நடக்கும் சமூகப் பிரச்சினைகளைத் தனது அறிக்கைகள் மூலம் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், விஜய் தனது அறிக்கையின் மூலம்தான் கருத்துகளைச் சொல்லி வருகிறார் என்றும், மக்களிடம் நேரடியாகச் சென்று பேசவில்லை என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன.

தளபதி 69 – ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய் புதிய லுக் தளபதி 69: ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய் புதிய Look | Vijay in New Look from Jananayagan Shooting Spot

அதற்கு, அவர் கடைசி படத்தை முடித்த பிறகு மக்களை நேரில் சந்திக்கப் போவதாக தவெக கட்சியின் சார்பில் கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையில், வருகின்ற மார்ச் மாதம் முதல் மக்களைத் தொடர்ந்து நேரில் சந்திக்கப் போவதாகவும், இதன் முதல் கட்டமாக வருகின்ற ஜனவரி 19, 20 தேதிகளில் மக்களுடனான சந்திப்பை விஜய் பரந்தூரிலிருந்து தொடங்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த மாதம் 19 அல்லது 20-ஆம் தேதியில் பரந்தூர் விவசாயிகளைச் சந்தித்து பேசப்போவதாகவும், அதற்கான பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சி சார்பில் கட்சியின் பொருளாளரும், வழக்கறிஞருமான வெங்கட்ராமன் தொடர்பு கொண்டுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தவேக கட்சியின் முதல் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

“காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது – BJP” "காங்கிரஸ் அரசியல் விமர்சனம் – BJP கருத்து | Congress Political Criticism by BJP"

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Vijay is all set to meet his fans at Parandur through a grand public meeting event.
  • Huge crowd and massive fan excitement expected at the location.
  • Special arrangements are being made for a smooth and memorable fan gathering.
  • Updates, live coverage, and highlights will be shared from the event.
  • Vijay’s public meeting marks a major connection moment with his audience ahead of future plans.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Releated Posts

2026 தேர்தல் வியூகம்! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு?

2026 தேர்தல் வியூகம் : ஈரோடு கிழக்குத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த இவிகேஎஸ். இளங்கோவனின் மறைவுக்குப் பிறகு, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த…

ByByTN News BoxJan 12, 2025

ஆம் ஆத்மி கட்சி – யால் “பேரழிவு”! விமர்சித்த மோடி?

ஆம் ஆத்மி கட்சி அசோக் விகாரின் ராம்லீலா மைதானத்தில் இன்று (ஜனவரி 3, 2025) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு…

ByByTN News BoxJan 3, 2025

“காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது – BJP”

முன்னாள் பிரதமர் “காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது” : நாட்டின் முதல் சீக்கிய பிரதமரும், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பியாகவும் விளங்கிய “மன்மோகன் சிங்கின்”…

ByByTN News BoxDec 30, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *