Today ராசிபலன் 07.06.2025 – துலாம் முதல் மீனம் வரை

இன்றைய ராசிபலன் | Today Rasi Palan June 7, 2025 for Thulam to Meenam

Today ராசிபலன் 07.06.2025 : இன்றைய ராசிபலன் (ஜூன் 7, 2025 – சனிக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை உள்ள 6 ராசிகளுக்கான தினசரி பலன்களும், இன்றைய தினத்தில் உங்களுக்கு ஏற்ற லக்கி எண்கள் மற்றும் நிறங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Today ராசிபலன் 07.06.2025

துலாம்

பொருள் விரயம் ஏற்படாமல் வங்கிக் கையிருப்பை உயர்த்தி, தீய செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.

உறவினர்கள் உடனான நெருங்கிய தொடர்பால் நன்மைகள் உண்டாகும். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனசஞ்சலம் உண்டாக வாய்ப்பு உள்ளது.

இதனால் வேலையில் கவனம் செலுத்த சிரமப்படுவீர்கள். பிள்ளைகளுடன் நெருக்கம் குறைந்து வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள்.

குன்றக்குடி முருகனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிக்கல்கள் மறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்ல நேரிடலாம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தூக்கம் கெட வாய்ப்பு உள்ளது.

அதிஷ்ட நிறங்கள் : பச்சை, இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.

அதிஷ்ட எண்கள் : 5, 1, 2, 9.

Read also : குருப்பெயர்ச்சி பலன் 2025 – அதிர்ஷ்டமான 5 ராசிகள்! குருப்பெயர்ச்சி பலன் 2025 - அதிர்ஷ்டம் தரும் ராசிகள் | Guru Peyarchi 2025 Lucky Zodiac Signs

விருச்சிகம் – Today ராசிபலன் 07.06.2025

வேலை செய்யும் இடத்தில் மதிப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. யாரையும் எளிதில் நம்பி பணத்தை செலவழிக்க வேண்டாம்.

உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்லைக் கேட்டு படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

மகாலட்சுமியை வழிபட்டால் பொருள் வரவு உண்டாகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செலவு அதிகரித்து பணம் கரையும்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கால் வலி ஏற்பட்டு கட்டுப்போட நேரிடும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தேவையான விஷயங்கள் தள்ளிப் போக நேரிடும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, சிவப்பு, கருப்பு, பச்சை.

அதிஷ்ட எண்கள் : 6, 9, 4, 3.

தனுசு

வியாபாரப் போட்டியாளர்களால் தொல்லைகள் வராமல் தொழிலில் பெரிய முன்னேற்றம் காண்பீர்கள். தொலைபேசியில் வரும் ஆன்லைன் வர்த்தகங்களை நம்ப வேண்டாம்.

உறவினர்கள் மத்தியில் உங்கள் பெயரை யார் கெடுக்க நினைத்தாலும் அது நிறைவேறாது. மனைவியின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு நிம்மதியைத் தரும். பிள்ளைகளால் பிரச்சனை வராது.

கற்பக விநாயகரை வணங்கினால் கவலைகள் நீங்கும். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பணவரவு அதிகரித்து வங்கி இருப்பு கூடும்.

பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் சந்திப்பு அமைந்து பழைய நினைவுகளில் மகிழ்வீர்கள். உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தலைவலியால் வேலையில் சிரமம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.

அதிர்ஷ்ட எண்கள் : 9, 3, 8, 5.

21 நாள் பரிகாரம் : இழந்த சொத்தை திரும்பப் பெறலாம்! இழந்த சொத்தை திரும்ப பெற 21 நாள் பரிகாரம் | 21 Day Remedy to Get Back Lost Wealth via Varahi Worship

மகரம்

இடையூறுகளைத் தாண்டி “என்ன நடந்தாலும் நடக்கட்டும்” என்ற மனநிலையில் வேலை செய்தால், செலவுகளுக்கேற்ற வருமானம் உங்களைத் தேடி வரும்.

உறவினர்கள் உங்கள் வீட்டு நிகழ்வுகளில் உரிமையோடு பங்கேற்று வியக்க வைப்பார்கள். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி உண்டாகும். ஆசிரியர்களும் அவர்களைப் பாராட்டுவார்கள்.

காலபைரவரை வழிபட்டால் எதிர்ப்புகள் நீங்கும். உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் விலகும்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடனைச் செலுத்தி வாக்கைக் காப்பாற்றுவார்கள். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் குறைந்து கடன்கள் கட்டுக்குள் வரும்.

அதிர்ஷ்ட எண்கள் : மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள் : 3, 7, 6, 1.

கும்பம் – Today ராசிபலன் 07.06.2025

கும்ப ராசிக்காரர்களுக்கு செல்வப்பேருக்கு அதிகரிக்கும். அதைச் சேமித்து வீட்டு மனை வாங்கப் பயன்படுத்துங்கள். மற்றவர் சண்டைகளின் தலையிட்டுட் தனிமைப்பட வேண்டாம்.

மனைவியின் வகையில் பண வரவு உண்டாகும். அவர் குடும்பச் செலவுகளை பார்த்துக் கொள்வார். பிள்ளைகள் கல்வியில் சிறந்து, பள்ளியில் நல்ல பெயர் எடுப்பார்கள்.

காளமேகப் பெருமாளை வழிபட்டால் கையிருப்பு அதிகரிக்கும். அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது.

சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சங்கடங்களில் இருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொறுப்போடு வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.

இன்று சந்திராஷ்டம நாள் என்பதால் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறங்கள் : கருநீலம், இளஞ்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள் : 8, 1, 2, 9.

Read also : மீன ராசி பலன் 2025 : சதுர்கிரக யோகத்தால் பண வரவு! மீன ராசி 2025 பலன் | சதுர்கிரக யோகத்தால் பண வரவு | Meena Rasi Saturn Blessings and Wealth Predictions

மீனம்

வியாபாரத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். இதனால் குடும்பத்தைப் பிரிந்திருக்க நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் குடும்பப் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டாம், அது பின்னால் சிக்கலாகலாம்.

உறவினர்கள் மதிப்பும் மரியாதையும் தருவார்கள். ஊரார் மத்தியில் செல்வாக்கு உயரும். மனைவி பிறந்த வீட்டிற்குச் செல்வார், அவரை சமாதானம் பேசி அழைத்து வர வேண்டும்.

பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடப்பார்கள். மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டால் சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நினைத்தது நடந்து நிம்மதி பிறக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பண லாபம் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலைச் சிரமம் குறைந்து சுறுசுறுப்பாவார்கள். இன்று சந்திராஷ்டம நாள் என்பதால் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிர்ஷ்ட எண்கள் : 3, 8, 5.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

Today’s horoscopes (June 7, 2025) for these six signs emphasize financial management like increasing bank balance and avoiding online fraud, alongside navigating family dynamics including spousal relationships and challenges with children. Career advancement is prominent, with some signs seeing progress while others face work-related stress or travel. Spiritual guidance (worshiping Murugan, Mahalakshmi, Ganesha, Shiva) is advised for overcoming hurdles, with specific lucky colors and numbers provided for each sign for overall well-being.

Releated Posts

பீரோ கண்ணாடி : அதிர்ஷ்டம் தருமா? திருஷ்டி வருமா?

பீரோ கண்ணாடி : கண்ணடி படுவது அல்லது திருஷ்டி தோஷம், நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது என்பது பெரியவர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட தீய…

ByByAmirthavarshini RJun 18, 2025

Today ராசிபலன் 12.06.2025 – மேஷம் முதல் மீனம் வரை

Today ராசிபலன் 12.06.2025 : இன்றைய ராசிபலன் (12.06.2025 – வியாழக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரிப் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில்…

ByByVignesh MJun 12, 2025

Today ராசிபலன் 11.06.2025 – மேஷம் முதல் மீனம் வரை

Today ராசிபலன் 11.06.2025 : இன்றைய ராசிபலன் (11.06.2025 – புதன்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரிப் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில்…

ByByVignesh MJun 11, 2025

Today ராசிபலன் 10.06.2025 – மேஷம் முதல் மீனம் வரை

Today ராசிபலன் 10.06.2025 : இன்றைய ராசிபலன் (10.06.2025 – செவ்வாய்க்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரிப் பலன்களைப் பற்றி இந்தப்…

ByByVignesh MJun 10, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *