Today ராசிபலன் 07.06.2025 – மேஷம் முதல் கன்னி வரை

இன்றைய ராசிபலன் | Daily Rasi Palan June 7, 2025 for Mesham to Kanni

Today ராசிபலன் : இன்றைய ராசிபலன் (ஜூன் 7, 2025 – சனிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை உள்ள 6 ராசிகளுக்கான தினசரி பலன்களும், இன்றைய தினத்தில் உங்களுக்கு ஏற்ற லக்கி எண்கள் மற்றும் நிறங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Today ராசிபலன்

மேஷம்

அரசு அதிகாரிகளிடம் கவனமாகப் பழகுவது நல்லது. உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். முருகப்பெருமானை வழிபடும்போது செய்கின்ற காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காதல் கைகூடும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள் : 9, 7, 6, 1.

Read also : மீன ராசி பலன் 2025 : சதுர்கிரக யோகத்தால் பண வரவு! மீன ராசி 2025 பலன் | சதுர்கிரக யோகத்தால் பண வரவு | Meena Rasi Saturn Blessings and Wealth Predictions

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் பண வரவை அதிகரிக்க புதிய வழிகளைத் தேட வேண்டும். குறிப்பாக, பங்குச்சந்தை வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மேலும், இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சொத்து விஷயங்களில் அண்ணன் தம்பிகளுடன் சண்டை வரலாம்.

பிள்ளைகளுடனான நெருக்கம் குறைந்து மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதிர்ஷ்ட லக்ஷ்மி-யை வழிபட்டால் ஐஸ்வர்யம் அதிகரிக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலையில் மதிப்பும் வருமானமும் உயரும்.

ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் ஆதாயமும் பண வரவும் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள் : 6, 1, 2, 9.

குருப்பெயர்ச்சி பலன் 2025 – அதிர்ஷ்டமான 5 ராசிகள்! குருப்பெயர்ச்சி பலன் 2025 - அதிர்ஷ்டம் தரும் ராசிகள் | Guru Peyarchi 2025 Lucky Zodiac Signs

மிதுனம்Today ராசிபலன்

உங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் வேலைகள் சிறந்து, வருமானம் அதிகரிக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி செய்து கேட்ட பணத்தை தயங்காமல் கொடுப்பார்கள்.

கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் சேர்ந்து குடும்ப நன்மைக்காக உழைப்பார்கள். பிள்ளைகள் தங்கள் வேலைகளை தாங்களே செய்து பெற்றோரைக் கஷ்டப்படுத்த மாட்டார்கள்.

மகாலிங்கேஸ்வரர் சுவாமியை வழிபட தன வரவு அதிகரிக்கும். மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் காரியத்தில் வெற்றி ஏற்பட்டு வியாபாரம் அதிகரிக்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைத்து மன நிம்மதி பெறுவார்கள். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மரியாதை அதிகரித்து மற்றவர்களால் பாராட்டப்படுவார்கள்.

அதிர்ஷ்ட நிறங்கள் : பச்சை, கருப்பு, மஞ்சள்.

அதிர்ஷ்ட எண்கள் : 5, 9, 4, 3.

கடகம்

கடுமையான முயற்சியால் காரிய வெற்றி பெற்று பெரும் நன்மை கிட்டும். வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

மேலும், சாலைகளில் செல்லும்போது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று உறவினர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

ஒருவரை ஒருவர் அரவணைத்துச் செல்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டு மேற்படிப்பிற்குத் திட்டமிடுவீர்கள்.

காலகஸ்திநாதரை வழிபட்டால் கவலைகள் நீங்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய வேலைக்குப் பொறுப்பேற்பார்கள்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்ப்புகள் மறைந்து நல்லது நடக்கும். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.

அதிஷ்ட எண்கள் : 2, 3, 8, 5.

சிம்மம்

எதிர்ப்புகளை உறுதியோடு சந்தித்தால், தொழிலில் உள்ள போட்டியாளர்களை வெல்வீர்கள். வியாபார நஷ்டம் வந்தாலும் சிறிய விஷயத்தில் கூட அலட்சியம் காட்டாமல் கவனமாக இருப்பது நல்லது.

உறவினர்களின் சலசலப்பைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது. மனைவியின் மனதை அறியாமல் தடுமாறி வீட்டிற்கு வர அச்சப்படுவீர்கள்.

பிள்ளைகளால் செலவுகள் அதிகரித்து நண்பர்களிடம் கடன் வாங்க நேரிடும். சிவபெருமானை வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலையில் மந்தமும் மன உளைச்சலும் உண்டாகும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் அதிகரித்து, உடல் அசதி ஏற்படும்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலைச் சுமையால் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.

அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு.

அதிர்ஷ்ட எண்கள் : 3, 7, 6, 1.

கன்னிToday ராசிபலன்

காதலியின் மனதை வெல்வதற்கு பொய் சொல்லாமல் அன்போடு பேசினால் உறவு நீடிக்கும். அரசியல்வாதி உதவியால் வியாபார லைசென்ஸ் கிடைக்கும். மனைவி குடும்பப் பொறுப்பை உணர்ந்து நடப்பார்.

மாமனார் மாமியார் அனைவரையும் அன்பாக நடத்துவார்கள். பிள்ளைகளால் எந்தப் பிரச்சனையும் வராது. விநாயகப் பெருமானை வழிபட்டால் வில்லங்கம் விலகும்.

உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பண வரவு அதிகரிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குப் பங்குச் சந்தை மூலம் லாபம் கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வேலையில் சிக்கல்கள் விலகிப் பதவி உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறங்கள் : இளஞ்சிவப்பு, சாம்பல், வெள்ளை.

அதிர்ஷ்ட எண்கள் : 1, 7, 6.

எலுமிச்சை பரிகாரம் – வீட்டில் செய்ய வேண்டியது! எலுமிச்சை பரிகாரம் செய்வது எப்படி? | Lemon Remedy for Dhrishti & Positive Energy in Home

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

Today’s horoscopes (June 7, 2025) offer tailored advice for each sign (Mesham to Kanni), emphasizing financial prudence (seeking new income, avoiding night travel) and family harmony (managing sibling disputes, understanding spouse). Career growth is highlighted with promotions and new opportunities for some, while others face workload stress or challenges requiring careful handling. The predictions also include spiritual guidance for resolving issues and specific lucky colors and numbers for each zodiac sign, aiming to guide individuals towards prosperity and well-being.

Releated Posts

பீரோ கண்ணாடி : அதிர்ஷ்டம் தருமா? திருஷ்டி வருமா?

பீரோ கண்ணாடி : கண்ணடி படுவது அல்லது திருஷ்டி தோஷம், நம்முடைய முன்னேற்றத்தைத் தடுக்கக்கூடிய சக்தி வாய்ந்தது என்பது பெரியவர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட தீய…

ByByAmirthavarshini RJun 18, 2025

Today ராசிபலன் 12.06.2025 – மேஷம் முதல் மீனம் வரை

Today ராசிபலன் 12.06.2025 : இன்றைய ராசிபலன் (12.06.2025 – வியாழக்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரிப் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில்…

ByByVignesh MJun 12, 2025

Today ராசிபலன் 11.06.2025 – மேஷம் முதல் மீனம் வரை

Today ராசிபலன் 11.06.2025 : இன்றைய ராசிபலன் (11.06.2025 – புதன்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரிப் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில்…

ByByVignesh MJun 11, 2025

Today ராசிபலன் 10.06.2025 – மேஷம் முதல் மீனம் வரை

Today ராசிபலன் 10.06.2025 : இன்றைய ராசிபலன் (10.06.2025 – செவ்வாய்க்கிழமை) மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான தினசரிப் பலன்களைப் பற்றி இந்தப்…

ByByVignesh MJun 10, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *