பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பதிவில்
ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பள்ளி மாணவர்களுக்கு மாதம் 2000 – திட்டத்தின் நோக்கம்
இந்தத் திட்டத்தின் பெயர் அன்பு கரங்கள் நிதி ஆதரவுத் திட்டம் ஆகும். மிகவும் ஏழ்மையான குடும்பங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தாமல் தொடர உதவுவதே இதன் முக்கிய நோக்கம்.
18 வயது வரை மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு கல்லூரிப் படிப்புக்கும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கும் தேவையான உதவிகளைச் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
Read also : இராஜேந்திர சோழரின் கங்கைப் படையெடுப்பு நாள்!
யார் விண்ணப்பிக்கலாம்?
- பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொருவர் கைவிட்டுச் சென்ற குழந்தைகள்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொருவர் உடல் அல்லது மனரீதியாகப் பாதிக்கப்பட்டவராக இருந்தால்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொருவர் சிறையில் இருந்தால்.
- ஒரு பெற்றோர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தத் திட்டத்தில் சேர, உங்கள் மாவட்டத்தில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
- குடும்ப அட்டையின் நகல்.
- குழந்தையின் ஆதார் அட்டை நகல்.
- குழந்தையின் வயதுச் சான்று (பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ் அல்லது மதிப்பெண் சான்றிதழ்) நகல்.
- குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல்.

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
FAQs
1) பள்ளி மாணவர்களுக்கு மாதம் 2000 திட்டத்தின் பெயர் என்ன?
இந்தத் திட்டத்தின் பெயர் “அன்பு கரங்கள்” நிதி ஆதரவுத் திட்டம் ஆகும்.
2) இந்தத் திட்டத்தின் கீழ் எவ்வளவு உதவித்தொகை வழங்கப்படும்?
18 வயது வரை மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும்.
3) பள்ளி மாணவர்களுக்கு மாதம் 2000 திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள்?
குடும்ப அட்டை நகல், குழந்தையின் ஆதார் அட்டை நகல், வயதுச் சான்று நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவை தேவைப்படும்.
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் - உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Read also : தீரன் சின்னமலை 220வது நினைவு நாள்!
Key Insights & Best Takeaways
The “Anbu Karangal” financial aid scheme by the Tamil Nadu government provides a monthly stipend of ₹2,000 to vulnerable children until they turn 18, ensuring they continue their schooling without dropping out. This initiative specifically targets children who have lost one or both parents and are in difficult circumstances, also promising further support for their higher education and skill development. To apply, eligible families must submit key documents like the child’s Aadhaar and bank passbook, along with other necessary certificates, at designated camps or government offices. The program is a commendable effort to protect and secure the future of marginalized youth through financial and educational support.