• Home
  • ஆரோக்கியம்
  • சிறு வயதில் வரும் நெஞ்சு வலிக்கு (Teenagers Chest Pain) மாரடைப்பு தான் காரணமா?நிபுணர்கள் கூறும் அறிகுறிகள்

சிறு வயதில் வரும் நெஞ்சு வலிக்கு (Teenagers Chest Pain) மாரடைப்பு தான் காரணமா?நிபுணர்கள் கூறும் அறிகுறிகள்

சிறுவயதில் நெஞ்சு வலி - மாரடைப்பு அறிகுறியா? Teenagers chest pain symptoms explained

Teenagers Chest Pain : டீனேஜ் பிள்ளைகளுக்கு நெஞ்சு வலி வந்தால் உடனே பயப்படத் தேவையில்லை. அதே சமயம், அலட்சியமும் கூடாது என்கிறார் டாக்டர் பதம்குமார். மா

ர்பு வலி வந்தவுடன் ஈசிஜி எடுத்து எல்லாம் சாதாரணமாக இருந்தாலும், இளைய வயதினருக்கு மார்பு வலி வருவதற்கான காரணம் என்ன, அது இதய நோயுடன் தொடர்புடையதா, அறிகுறிகள் மூலம் மார்பு வலியின் காரணத்தைக் கண்டறிய முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

டாக்டர் பதம்குமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இது குறித்து என்ன கூறியுள்ளார் என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

Teenagers Chest Pain

மார்பு வலிக்கான காரணங்கள்

மார்பு வலிக்கு இதயம், நுரையீரல் அல்லது செரிமான மண்டலப் பிரச்சினைகள் எனப் பல காரணங்கள் இருக்கலாம்.

சில சமயங்களில் இவை உயிருக்கு ஆபத்தானவையாகவும், சில சமயங்களில் ஆபத்தற்றவையாகவும் இருக்கலாம்.

மார்பு வலி வரும்போது அதனுடன் இதய நோய் தொடர்பான அறிகுறிகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

Read also : Root Canal & Heart Attack : இரண்டிற்கும் தொடர்பு உள்ளதா? Root Canal & Heart Attack connection explained by doctors - பல் தொற்று மற்றும் இதய நோய்க்கு உள்ள தொடர்பு : நிபுணர்கள் விளக்கம்

இளைய வயதினருக்கு நெஞ்சு வலி வர முக்கியக் காரணம்

நெஞ்சு வலி பலருக்கும் வரலாம். அவை லேசான வலியாகவோ அல்லது நெஞ்சைப் பிழிவது போன்றோ இருக்கலாம். இவை அனைத்தும் மாரடைப்பின் அறிகுறிகள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

டாக்டர் பதம்குமார் கூறும் முக்கியக் காரணம் காஸ்டோகான்ட்ரைட்டிஸ் (Costochondritis) ஆகும். இது விலா எலும்பை மார்பெலும்புடன் இணைக்கும் குருத்தெலும்பில் ஏற்படும் வீக்கம்.

இந்த வலி இடது பக்க நெஞ்சுப் பகுதியில் வரும். சில சமயங்களில் மாரடைப்பு போல தோள்பட்டைக்கும் லேசாகப் பரவலாம். இந்த நெஞ்சுவலியை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் டாக்டர் பதம்குமார் விளக்கியுள்ளார்.

நெஞ்சு இறுக்கம் : எப்படி வேறுபடுத்துவது?

இதய நோய் அல்லது மாரடைப்பால் நெஞ்சு வலி வரும்போது, வலி இருக்கும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் கை வைத்து அழுத்தினால் மட்டும் வலி இருக்காது. எல்லா இடங்களிலும் வலி உணர்வு இருக்கும்.

ஆனால் இந்த காஸ்டோகான்ட்ரைட்டிஸ் பிரச்சனை இருந்தால், எந்த இடத்தில் வலி தீவிரமாக இருக்கிறதோ அந்த இடத்தில் அழுத்தினால் வலி தாங்க முடியாமல் துடித்து விடுவார்கள்.

சிலர் நெஞ்சு அழுத்துவது போல் உள்ளது என்று அலறுவார்கள், பிறகு ஈசிஜி எடுத்துப் பார்த்தால் எந்த பாதிப்பும் இருக்காது. இது இதய பாதிப்பு தொடர்பான வலி அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நெஞ்சு வலி தொடர்ந்து இருந்தால் என்ன காரணம்?

மாரடைப்பு அல்லது இதய நோய் தொடர்பான பாதிப்பாக இருந்தால், அந்த வலி படிப்படியாக வேகமாக அதிகரிக்கும். அதே போன்று அவை தொடர்ந்து நீண்ட நேரம் இருக்காது. உடனடியாக சிகிச்சை தேவைப்படும் அறிகுறியை உணர்த்தும்.

ஆனால் காஸ்டோகான்ட்ரைட்டிஸ் பிரச்சனையால் வலி வந்தால் நாள் முழுவதும் அந்த வலி தொடர்ந்து 1 – 2 வாரங்கள் வரை இருக்கும். அதனால் வலி தொடர்ந்து இருந்தால் அது மாரடைப்பு அல்லது இதய நோய் அறிகுறியாக இருக்காது.

Read also : Goji Berries in Tamil – மருத்துவ உலகில் ஏற்படும் அற்புதம்! Goji Berries in Tamil – Powerful Health Benefits & Medicinal Value

நெஞ்சு வலியுடன் வரக்கூடிய மற்ற அறிகுறிகள்?

நெஞ்சு வலி இதய நோயாக இருந்தால் அது மூச்சுத்திணறல் ஏற்படுத்தும், இதயத்துடிப்பு வேகமாக இருக்கும், அதிகமாக வியர்க்கும்.

ஆனால் காஸ்டோகான்ட்ரைட்டிஸ் இருந்தால் எந்த அறிகுறியும் இருக்காது. இவர்களுக்கு வலி மட்டுமே இருக்கும். அசௌகரியமான அறிகுறிகள் எதுவும் இருக்காது என்கிறார் டாக்டர் பதம்குமார்.

இந்நிலையில் மாரடைப்பு வந்துவிட்டது என்ற பதட்டம் தேவையில்லை.

யாருக்கெல்லாம் நெஞ்சு வலி வரலாம்?

  • உடற்பயிற்சி செய்யும் டீனேஜ் வயதினருக்கு நெஞ்சு வலி வரலாம்.
  • ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகள் நெஞ்சு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
  • குழந்தைகளுக்கு நெஞ்செரிச்சல், எதுக்களிப்புகூட நெஞ்சுவலிக்கு காரணமாக இருக்கலாம்.
  • சில நேரங்களில் இதயப் பிரச்சனைகளை உணர்த்தும் அறிகுறிகளாகவும் அவை இருக்கலாம்.
  • பிறக்கும்போதே இதய நோய் இருக்கலாம். அவை வளர்ந்த பிறகு அறிகுறி வெளிப்படுத்தி இருக்கலாம்.
  • இதயம் சரியாக வேலை செய்யாத கார்டியோமையோபதியாக இருக்கலாம்.
  • கிருமிகள் தொற்று வீரியமாகி இதயத்தில் வீக்கம் வரலாம்.

எனவே, உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.

(பின் குறிப்பு : நெஞ்சு வலி வந்தால் நீங்களே சுயமாக முடிவுக்கு வராமல் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனை செய்துகொள்வதும், அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் பாதுகாப்பானது.)

Read also : அரிசி எப்போது தவிர்க்க வேண்டும்? நிபுணர் அறிவுரை! அரிசி தவிர்க்க வேண்டிய நேரம் – Expert Nutritionist Tips

Teenagers Chest Pain – FAQs

1) டீனேஜர்களுக்கு நெஞ்சு வலி வந்தால் உடனே மாரடைப்பு தான் காரணமா?

இல்லை, டாக்டர் பதம்குமார் கூற்றுப்படி, பல நேரங்களில் இது மாரடைப்பாக இருக்காது. ஆனால், இதில் அலட்சியமும் கூடாது.

2) இளைய வயதினருக்கு நெஞ்சு வலி வர முக்கியக் காரணம் என்ன?

காஸ்டோகான்ட்ரைட்டிஸ் (Costochondritis) எனப்படும் விலா எலும்பு குருத்தெலும்பு வீக்கமே முக்கியக் காரணம் ஆகும்.

3) நெஞ்சு வலி தொடர்ந்து 1-2 வாரங்கள் இருந்தால் அது மாரடைப்பா?

இல்லை, காஸ்டோகான்ட்ரைட்டிஸ் வலியாக இருந்தால் அது 1-2 வாரங்கள் நீடிக்கும். ஆனால், மாரடைப்பு வலி நீண்ட நேரம் இருக்காது.

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox 

Key Insights & Best Takeaways

Teenagers’ chest pain is frequently caused by Costochondritis, an inflammation of rib cartilage, rather than a heart attack. Unlike cardiac pain, Costochondritis pain often worsens with movement and can last for weeks, while heart-related pain is usually sharp, brief, and accompanied by other symptoms like shortness of breath. Though maintaining heart health through healthy habits is vital, any persistent or concerning chest pain in teens warrants a medical consultation for proper diagnosis.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *