• Home
  • வணிகம்
  • Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!

Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!

"Successful SIP முதலீடு – Wealth Growth & High Returns"

Successful SIP investments : இன்றைய காலகட்டத்தில் மக்கள் என்னதான் சம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருந்தாலும், வரவுக்கேற்ற செலவுகளும் சமமாக வந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதனால் மக்கள் பலர் தங்களின் எதிர்காலம் குறித்தும், தங்களின் அடுத்த தலைமுறையினரின் எதிர்காலம் குறித்தும் கருத்தில் கொண்டு பல சேமிப்புகளைச் செய்து வருகின்றனர்.

அதற்கேற்ப, அரசு சார்பில் பல சேமிப்புத் திட்டங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வரிசையில், மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மியூச்சுவல் ஃபண்டில் பெரும்பாலும் “எஸ்ஐபி”-யில் தான் மக்கள் முதலீடு செய்கின்றனர்.

ஆனால், இந்த எஸ்ஐபி-யை எப்போது தொடங்க வேண்டும் என்றும், எப்போது தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்ற கேள்வியும் பலரின் மத்தியில் இருந்து வருகின்றது.

Successful SIP investments சிறிய தொகை, அதிக லாபம்

"SIP நன்மைகள் – Compounding Power & Risk-Free Growth"

Also இதன் காரணமாக டாலரின் மதிப்பு உயர்ந்தது. அதே சமயம், ரூபாயின் மதிப்பும் சரிந்தது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியைக் குறைத்தது ரூபாய் மதிப்பு மட்டுமில்லாமல், இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தகத்திலும் எதிரொலித்தது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் ஐதாட் நிறுவனத்தின் துணைத் தலைவரான எம்.கே.பாலாஜி ஒரு பேட்டி அளித்துள்ளார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்ஐபி என்பது ஒரு காரணிதான்.

ஆனால், அதைவிட முக்கியமான பல விஷயங்கள் இருக்கின்றன என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

successful SIP investments :எஸ்ஐபி (Systematic Investment Plan) என்பதைத் “தொடர் முதலீட்டுத் திட்டம்” என்றும் கூறலாம். மியூச்சுவல் ஃபண்டானது பல நிறுவனங்களின் பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றை வாங்கி ஒரு தொகுப்பாக வைத்துக் கொள்வர்.

இந்தத் தொகுப்பில் ஒரு பகுதியை வாங்கிக் கொள்ளலாம். இதை “யூனிட்” என்று கூறுவர். மியூச்சுவல் ஃபண்டில் ஒரு திட்டம்தான் “எஸ்ஐபி”. எஸ்ஐபி மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தேர்வு செய்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து கொள்ளலாம்.

இது கிட்டத்தட்ட போஸ்ட் ஆபீஸ் திட்டத்தைப் போல இருக்கும்.

எஸ்ஐபி மூலம் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வதால் மார்க்கெட் குறைவாக இருக்கும் போது அதிக யூனிட்டுகளை வாங்கிக் கொண்டு, மார்க்கெட்  அதிகமாக இருக்கும் போது குறைவான யூனிட்களை வாங்கும் வாய்ப்புகளும் இருக்கின்றது.

இதை “ரூபீ காஸ்ட் ஏவரேஜ்”(rupee cost average)  என்று கூறுவர். இந்த எஸ்ஐபி திட்டத்தைப் பெரும்பாலும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதற்காகப் பயன்படுத்துவர்.

உதாரணமாக குழந்தைகளின் கல்வி, ஓய்வு வாழ்க்கை போன்றவற்றிற்கு எஸ்ஐபி மூலம் முதலீடு செய்யலாம். இது நீண்ட காலத்திற்கான நல்ல வருமானமாக இருக்கும்.

"Successful SIP investments சிறந்த முதலீட்டு திட்டங்கள் – Best Investment Plans 2025"
எஸ்ஐபி முதலீட்டை எப்போது தொடங்க வேண்டும்?

முதலீட்டை எப்போது தொடங்க வேண்டும் என்ற கேள்வி பலரின் மத்தியில் இருந்து வருகின்றது.

சிலர், ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடங்கினால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறுவர் ஆனால் இதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

ஏனென்றால், எஸ்ஐபி-யின் நோக்கமே தொடர்ச்சியான முதலீடுதான். பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து லாபத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆனால், இதில் துல்லியமாக எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைக் கூற முடியாது. எந்த தேதியில் தொடங்கினாலும் தொடர்ந்து முதலீடு செய்வதே முக்கியம்.

Successful SIP investments.

Role of a Fund Manager – ஃபண்ட் மேனேஜரின் பங்கு

முதலீடு செய்யும்போது, ஃபண்ட் மேனேஜரின் உதவியைப் பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமாகும். ஏனென்றால், ஒரு நல்ல ஃபண்ட் மேனேஜர் என்பவர், பங்குச்சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து முதலீட்டை சிறப்பாக நிர்வகிப்பார்.

மேலும், பெரிய நிறுவனங்கள்(Large-cap), நடுத்தர நிறுவனங்கள்(Mid-cap), சிறிய நிறுவனங்கள்(Small-cap) என்று நேரத்திற்கு ஏற்ப முதலீட்டை மாற்றுவர். 

Thematic Funds – தீம்மேட்டிக் ஃபண்டுகள்

சில தீம்மேட்டிக் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலமாக அதிக லாபம் கிடைக்கும் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் இந்த ஃபண்டுகள் எப்போது சரியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுகின்றது என்று எதிர்பார்க்கும்போது, அதை மையமாகக் கொண்டு தீம்மேட்டிக் ஃபண்டுகளும் தொடங்கப்படும்.

ஆனால், எதிர்பார்த்தபடி அந்தத் தொழில்நுட்பம் செயல்படவில்லை என்றால், இந்த ஃபண்டும் நன்றாக செயல்படாது.

அதனால், ஒரு முதலீட்டை சரியான நேரத்தில் தொடங்குவது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல் சரியான நேரத்தில் முதலீட்டை வெளியே எடுப்பதும் முக்கியமாகும்.

"Successful SIP investments நீண்ட கால முதலீடு – Long-Term Investment Advantages"

Successful SIP Investments – Small Amount, High Returns!

2008 முதல் 2013 வரை உள்ள காலகட்டத்தில் எஸ்ஐபி தொடங்கியவர்களுக்கு முதல் 5 ஆண்டுகளில் அதிக லாபம் கிடைக்கவில்லை. பின்பு, சந்தையின் வளர்ச்சியால் நல்ல வருமானம் கிடைத்தது.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வந்ததால், எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்தவர்கள் அதிக யூனிட்டுகளை வாங்கியிருப்பார்கள்.

இதனால் சந்தை சரியும்போது சிலருக்கு கவலையாகத்தான் இருந்திருக்கும். ஆனால், இது ஒரு பொதுவான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

எந்த தேதியில் முதலீடு செய்ய வேண்டும் என்பது முக்கியமில்லை. எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்.

அதைப் பொறுத்துதான் மக்களுக்கு வருமானம் கிடைக்கும். எனவே, அனைத்து தேதிகளும் சரியான தேதிகள்தான். அதனால், எப்போது வேண்டுமானாலும் மக்கள் எஸ்ஐபி திட்டத்தைத் தொடங்கலாம்.

“ஒரு துளிநீர் கடலையும் நிரப்பும்” என்பது போல, எஸ்ஐபி-யில் சின்ன சின்ன தொகையாக முதலீடு செய்வதன் மூலமாக அது பெரிய தொகையாக மாறி, வருங்காலத்தில் பெரும் நன்மைகளை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

அதிகாரப்பூர்வ வலைத்தள இணைப்பு: Mutual Funds Official Website

This post describes about சிறிய தொகை, அதிக லாபம்! Also check out our - “2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”

“Quick English Recap – Key Insights & Best Takeaways!

Learn how Successful SIP Investments help you grow wealth with small amounts & high returns. Explore SIP benefits, power of compounding, and best investment strategies for financial success!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *