• Home
  • வணிகம்
  • “PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”

“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”

PPF முதலீடு – Long-term savings plan India, பாதுகாப்பான முதலீட்டு விருப்பம்
  • PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு : நீங்கள் நீண்ட காலத்திற்கான ஒரு சேமிப்புத் திட்டத்தைத் தேடுகிறீர்களா? உங்களுக்கான திட்டம் இதோ! “பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) அல்லது பிபிஎஃப்” என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு சேமிப்புத் திட்டம் ஆகும். 
  • இது வருமான வரி சலுகைகளுடன் நியாயமான வருமானத்தைத் தருகிறது. பிபிஎஃப் கணக்கு 1968-ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால்  கொண்டுவரப்பட்டது. 
  • பல முதலீட்டாளர்களிடம் இருந்து நீண்ட காலத்திற்கான சேமிப்புகளைத் திரட்டுவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்தத் திட்டம் மக்களுக்குப் பல நன்மைகளை அளிக்கிறது. இந்தப் பதிவில் பிபிஎஃப் கணக்கின் விவரங்கள் குறித்துப் பின்வருமாறு பார்ப்போம்.

பொது வருங்கால வைப்பு நிதி

PPF account benefits India, PPF கணக்கின் சிறப்புகள் மற்றும் வரி நன்மைகள்
PPF கணக்கின் நன்மைகள் மற்றும் பாதுகாப்பு!
  • PPF கணக்கில் டிசம்பர் 12, 2019 அன்று சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. காலத்திற்கு ஏற்றவாறு திட்டத்தின் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டு, மேலும் பயனளிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டம் எந்தவித நீதிமன்ற உத்தரவும் இல்லாமல் மூன்றாம் தரப்பினரின் ஆணையின் கீழ் கைப்பற்றப்படாது. மேலும், முதலீட்டாளர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனாலும் இந்தக் கணக்கு பாதுகாப்பாக இருக்கும். 
  • இது நீண்ட கால முதலீட்டிற்கான ஒரு சிறந்த தேர்வாகும். இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு நியாயமான வட்டியை வழங்குவதோடு, முதலீட்டாளர்களின் அசல் தொகையையும் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு ஏன் முக்கியம்? 

  • பிபிஎஃப் கணக்கு ஒரு ஆபத்து இல்லாத முதலீட்டுத் திட்டம் ஆகும். ஏனென்றால், இந்தத் திட்டம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு,  உத்தரவாதமான வருமானத்துடன் இந்தியாவில் முதலீட்டாளர்களின் நிதித் தேவைகளைப் பாதுகாக்கிறது.
  • இந்த பிபிஎஃப் கணக்கு, முதலீட்டு சந்தைக்கான ஏற்ற இறக்கங்களுக்கு ஆளாகாது. எனவே, இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களிடையே இந்தத் திட்டம் பிரபலமாக இருக்கிறது.
“போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – இரட்டிப்பு லாபம்!” போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – Double Profit Investment Scheme

Account Opening Rules & முக்கிய வழிகாட்டிகள் 

  • இந்தியக் குடியுரிமை பெற்ற நபர்கள் எந்த ஒரு  தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ, தபால் நிலையங்களிலோ அல்லது சில தனியார் வங்கிகளிலோ இந்தக் கணக்கைத் தொடங்கலாம். 
  • இந்தக் கணக்கைத் தனிநபரின் பெயரில் மட்டுமே தொடங்க முடியும்.
  • 18 வயதிற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்களை நாமினியாக வைத்து மைனர் அக்கவுண்டாக கணக்கைத் தொடங்கலாம். குழந்தைக்கு 18 வயது ஆன பிறகு, அந்தக் குழந்தைதான் கணக்கை இயக்க முடியும். 
  • வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் (NRI) புதிய பிபிஎஃப் கணக்கைத் தொடங்க முடியாது. ஆனால், அவர் இந்தியாவில் இருக்கும்போது பிபிஎஃப் கணக்கைத் தொடங்கியிருந்தால், அந்தக் கணக்கின் மொத்த காலம் (15 ஆண்டுகள்) முடியும் வரை செயல்படுத்த முடியும். ஆனால், அதற்குப் பிறகு 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியாது. இந்தியக் குடியுரிமை பெற்ற நபர்கள் மட்டுமே நீடித்துக் கொள்ளலாம்.

சிறப்பம்சங்கள்

  • பிபிஎஃப் கணக்கைக் குறைந்தபட்ச முதலீடாக ரூ.500 -லேயே தொடங்கலாம். 
  • ஒரு ஆண்டில் அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை முதலீடு செய்யலாம்.
  • முதலீடு ஒரே கட்டமாகவோ அல்லது 12 தவணைகளிலோ செலுத்தலாம்.
  • ஆனால், அதிகபட்சம் 12 தவணைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • PPF கணக்கு ஆரம்பித்த தினத்திலிருந்து 15 ஆண்டுகள் வரை கட்டாயமாக செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
“Motorola Edge 50 Update – Android 15 வந்தாசா?” Motorola Edge 50 Android 15 update வந்தாசா? Latest Moto OS update news

PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு முதலீட்டின் காலம்

  • PPF கணக்கின் மொத்த லாக்-இன் பீரியட் 15 ஆண்டுகள் ஆகும்.
  • 15 ஆண்டுகள் முடியும் வரை முதலீட்டை திரும்பப் பெற முடியாது.
  • ஆனால், 15 ஆண்டுகள் முடிந்தபின், 5 ஆண்டுகளுக்குக் கூடுதலாக நீட்டிக்க முடியும்.
  • இது நீண்டகால சேமிப்புத் திட்டமாக அமைந்திருக்கும்.

பாதுகாப்பு

  • அரசாங்கத்தின் ஆதரவு காரணமாக, இந்த PPF கணக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.
  • இந்த சேமிப்பு நிலையான வருமானத்தைத் தருகிறது.
  • 15 ஆண்டுகள் முடிவதற்குள், “கூட்டு வட்டி” அடிப்படையில் அதிக வருமானம் கிடைக்கும்.
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தபால் நிலையங்கள், சில தனியார் வங்கிகள் ஆகியவை இதை வழங்குகின்றன.

வருமான வரி சலுகைகள்

  • PPF கணக்கில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிவிலக்கு கிடைக்கும்.
  • “1961-ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ்”, ரூ.1,50,000 வரை வரிவிலக்கு பெறலாம்.
  • இந்தக் கணக்கின் முதன்மைத் தொகையும், அதற்குக் கிடைக்கும் வட்டியும் வரியிலிருந்து முழுமையாக விலக்கைப் பெறும்.

முதலீட்டிற்கு எதிரான கடன்

  • PPF கணக்கில் உள்ள பணத்தை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறலாம்.
  • கணக்குத் திறந்த 3-வது ஆண்டில் இருந்து 6-வது ஆண்டு வரை கடன் பெறலாம்.
  • மொத்த தொகையில் “25% வரை” மட்டுமே கடனாகப் பெற முடியும்.
  • கடனின் அதிகபட்ச காலம் 36 மாதங்கள் ஆகும்.
“வாட்ஸ்அப் மோசடி 2025 – தவிர்க்க வேண்டிய தவறுகள்!” "வாட்ஸ்அப் மோசடி எச்சரிக்கை – WhatsApp Scam Mistakes Tamil 2025"

வட்டி விகிதம்

  • PPF கணக்கின் வட்டி விகிதம், வங்கிக் கணக்குகள் அல்லது FD-களைவிட அதிகமாக இருக்கும்.
  • வட்டி விகிதங்கள் மத்திய அரசால் தீர்மானிக்கப்படும். 
  • இதன் வட்டி விகிதங்கள் ஒவ்வொரு காலாண்டிற்கும் மாற்றப்படும் என்பதால்,அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உறுதி செய்து கொள்வது நல்லதாகும்.

PPF கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள்

  • பான் கார்டு (PAN Card).
  • குடியிருப்பு முகவரி சான்று (Electricity Bill, Water Bill).
  • தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் (ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை).
  • KYC ஆவணங்கள் (பாஸ்போர்ட் போன்றவை).
  • நாமினி அறிவிப்புப் படிவம் – உங்களுக்குப் பிறகு யார் இந்த கணக்கை பாராட்டுவார் என்பதை நிர்ணயிக்க.
  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – தனிப்பட்ட தகவலுக்காக.

PPF Account Opening Process – வழிமுறைகள்

  • நீண்டகால பாதுகாப்பு – PPF கணக்கைத் தொடங்க விரும்பும் நபர், மத்திய அரசால் தீர்மானிக்கப்பட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்திருந்தால், அவர் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கலாம்.
  • இதை ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம். 
“5000 முதலீட்டில் 7.5 கோடி – 3 தோழிகளின் வெற்றி கதை”! "3 பெண்கள் வெற்றி கதை – ₹5000 முதலீட்டில் 7.5 கோடி"

ஆன்லைன் முறையில் அப்ளை செய்வதற்கான ஸ்டெப்ஸ்

  • விண்ணப்பம் செய்வதற்கு முதலில் உங்கள் வங்கி அல்லது தபால் நிலையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தைப் பார்வையிட வேண்டும். 
  • அதில் இருக்கும் பிபிஎஃப் கணக்கு துவங்கும் ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும். 
  • உங்களின் KYC தகவல்களைப் பயன்படுத்தி (பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவை) ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டும். 
  •  விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, உங்களின் பிபிஎஃப் கணக்கு திறக்கப்படும்.

ஆஃப்லைன் 

முறையில் அப்ளை செய்வதற்கான ஸ்டெப்ஸ்
  • ஸ்டேப் 1: ஆஃப்லைன் மூலம் PPF கணக்கைத் தொடங்குவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்திற்கோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளுக்கோ சென்று பிபிஎஃப் கணக்கிற்கான விண்ணப்பப் படிவத்தைப் பெற வேண்டும்.
  • ஸ்டேப் 2: விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து அதை சமர்ப்பிக்க வேண்டும். 
  • ஸ்டேப் 3: அத்தோடு மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் நகல்களை சேர்க்க வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு உங்களின் கணக்கு திறக்கப்படும்.
10ம் வகுப்பு அரசு வேலை – அஞ்சல் துறையில் வேலை! 10ம் வகுப்பு அரசு வேலை – Post Office Job Tamil 2025

அவசர நிலைகளில் பணத்தைத் திரும்பப் பெறுதல்

  • அவசரத் தேவைகள் வந்தால், பிபிஎஃப் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை மட்டுமே திரும்பப் பெற முடியும். ஆனால், இதற்கு கணக்கைத் தொடங்கிய 5 ஆண்டுகள் முடிந்த பின்பே கணக்கிலிருந்து பணத்தைப் பெற அனுமதி கிடைக்கும்.
  • கணக்கு தொடங்கிய 4-வது ஆண்டிலிருந்து ஒவ்வொரு நிதியாண்டிலும் பிபிஎஃப் கணக்கில் உள்ள மொத்த இருப்பில் 50% வரை பணத்தை மட்டுமே திரும்பப் பெறலாம். 
  • இந்த 50% வரம்பானது, கணக்கில் இருக்கும் பணத்தின் முழு தொகையைப் பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது.

முதிர்வுக்காலத்திற்கு முன் பணமாக்க முடியாது

  • PPF கணக்கில் முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையை (முதன்மை+வட்டி) 15 ஆண்டுகள் முடிவதற்குள் முழுமையாக திரும்பப் பெற முடியாது.
  • இது உங்களுக்கு நீண்டகால சேமிப்பை உறுதிசெய்ய உதவுகிறது.  

PPF திட்டம், முதலீட்டாளர்களின் நீண்ட கால நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதால், இது முழு பாதுகாப்பைத் தருகிறது. அதனால், நீண்ட கால முதலீட்டைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

பெண்கள் காப்பீட்டுத் திட்டம் – 5 கோடி வரை காப்பீடு! பெண்கள் காப்பீட்டுத் திட்டம் - Udyam Bima Policy மூலம் upto 5 crore insurance பெறும் திட்டம்

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..

எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Quick English Recap – Key Insights & Best Takeaways!

PPF Account is a safe long-term investment with tax benefits and high interest rates. Learn the eligibility, required documents, and step-by-step process to open a PPF account online and offline in India. Find out the latest rules, withdrawal limits, and benefits to maximize your savings!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *