மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!

மூக்கில் Blackheads நீங்குவதற்கான இயற்கை வழிகள் | Natural Blackhead Removal Tips in Tamil

மூக்கில் Blackheads : இன்றைய காலகட்ட பெண்களுக்கு பெரிதும் தலைவலியாக இருப்பது மூக்கில் வரும் “பிளாக் ஹெட்ஸ்” தான். மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகளாக வருவதை “பிளாக் ஹெட்ஸ்” (Black Heads) என்று கூறுவோம்.

அதுவே, முக்கைச் சுற்றி வெள்ளையாக சொரசொரவென்று வருவதை ” ஒயிட் ஹெட்ஸ்” என்று கூறுவோம். இதனால் சருமத்தின் மென்மை பாதிக்கப்பட்டு, அந்த இடம் வித்தியாசமாகக் காணப்படும்.

சில பேர் ஒயிட் ஹெட்ஸைப் போக்குவதற்கு குளித்து முடித்ததும் காட்டன் ஈரத் துணியைக் கொண்டு மூக்கைத் தேய்ப்பர்.

ஆனால் அப்படிச் செய்யும்போது மூக்கைச் சுற்றி வரும் புள்ளிகள் போகாது.

சருமம் வறட்சியடைந்து உங்கள் மூக்கைச் சுற்றி சொரசொரப்பாக இருப்பதற்கு சருமத்தை நீங்கள் சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதுதான் முக்கிய காரணம்.

இன்றெல்லாம் இவற்றை நீக்குவதற்கும், முகத்தைப் பராமரிப்பதற்கும் பல காஸ்மெட்டிக் ஐட்டங்கள் வந்துவிட்டன.

ஆனால் நம் வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்துக் கொண்டே இந்த பிளாக் ஹெட்ஸைப் போக்கலாம் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்? ஆம், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே கரும்புள்ளிகளை நீக்கலாம். அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

இந்தப் பதிவில் “மூக்கில் Blackheads” removal-tips பற்றி விரிவாகப் பார்ப்போம்.

மூக்கில் Blackheads – Natural Home Remedies!

மூக்கில் பிளாக் ஹெட்ஸ் நீக்கும் இயற்கை டிப்ஸ் | Natural Blackhead Removal Home Remedies in Tamil
மூக்கில் பிளாக் ஹெட்ஸ்? சமையலறையில் உள்ள இயற்கை வைத்தியங்கள் இதோ!
வால்நட்கள் (Walnut)
  • ஒரு கைப்பிடி அளவு வால்நட்களைப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு, ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட் பொடியுடன் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
  • அதை முகத்தில் தடவி உலர வைத்த பின்பு தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்தால் மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீங்கும்.

மூக்கில் Blackheads நீங்க Tipsபச்சைப் பயறு

  • பச்சைப் பயறை அரைத்து, மாவு செய்து கொள்ள வேண்டும். பின்பு, அந்த மாவைக் கொண்டு தினமும் முகத்தைத் தேய்த்துக் கழுவி வர வேண்டும்.
  • இதன் மூலம் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.
உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? சிறந்த வழி-NMES! உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை கட்டுப்படுத்தும் NMES | NMES Device Fitness Alternative

கிரீன் டீ (Green Tea)

  • கிரீன் டீயின் சிறிய பையில் உள்ள பொடியை வைத்தும் கரும்புள்ளிகளை அகற்றலாம். அதற்கு, கிரீன் டீ பொடியைத் தேனுடன் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • அதை மூக்கில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் தடவிய இடத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்து வர மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் அகலும்.

வேர்க்கடலை 

  • வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்தக் கலவையை மூக்கின் மேல் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கிரப் செய்து கழுவ வேண்டும்.
  • இப்படிச் செய்தால், மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி மென்மையாக காணப்படும்.

ஓட்ஸ் பொடி மற்றும் பட்டை 

  • 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 1 டீஸ்பூன் பட்டைத் தூளைக் கலந்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு, அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, அதை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • இப்படிச் செய்யும்போது மூக்கில் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள் அகலும். பட்டை, சருமத் துளைகளை விரிவடையச் செய்து சுத்தம் செய்யும் ஆற்றலைக்  கொண்டது.
  • இதனால், மூக்கில் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள் நீங்கி பளபளவென்று காணப்படும்.
விஜய் பரந்தூர் மக்கள் சந்திப்பு – முழு தகவல்! பரந்தூர் மக்கள் சந்திப்பு Vijay Public Meeting Preparation

பேக்கிங் சோடா 

  • 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதை வெள்ளைப் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் வெள்ளைப் புள்ளிகள் நீங்கி சருமத் துளைகள் சுத்தமாகும்.

எலுமிச்சை 

  • எலுமிச்சையில் இருக்கும் “வைட்டமின் சி (Vitamin – C) மற்றும் ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha hydroxy acid)”, சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை நீக்கி, வெள்ளைப் புள்ளிகள் வருவதைத் தடுக்கிறது.
  • அதற்கு எலுமிச்சை சாறினைக் காட்டனில் நனைத்து, அதை வெள்ளைப் புள்ளிகள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு, அதைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வர வெள்ளைப் புள்ளிகள் நீங்கும்.

மூக்கில் Blackheads நீங்க Tips – மஞ்சள் மற்றும் வேப்பிலை

  • மஞ்சள் மற்றும் வேப்பிலையில் நோய் எதிர்ப்புப் பொருள் இருப்பதால் இது வெள்ளைப் புள்ளிகளை நீக்கும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • அத்தோடு மஞ்சள்தூள் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு அதைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மூக்கில் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள் நீங்கும்.
HMPV Virus India 2025 – இந்தியாவில் 2 பேர் பாதிப்பு! HMPV வைரஸ் இந்தியாவில் 2025 பரவல் – 2 பேர் பாதிப்பு

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..

எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Key Insights & Best Takeaways

Blackheads and whiteheads form due to clogged pores and excess oil. Natural remedies like walnut scrub, green tea, baking soda, and lemon juice help remove them. Regular skincare with natural ingredients keeps skin clear and smooth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *