Redmi 14C 5G இந்திய வெளியீடு: சிறந்த 3 வேரியண்ட்கள்

Redmi 14C 5G இந்திய வெளியீடு சிறந்த வேரியண்ட்கள்

Redmi 14C 5G : Xiaomi நிறுவனத்தின் சப் பிராண்டான Redmi நிறுவனம் குறைந்த விலையில், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன்களை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில் வழங்கி வருகின்றது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் தங்களின் ஸ்மார்ட் ஃபோன் கனவை நினைவாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில், Redmi 14C 5G ஸ்மார்ட் ஃபோனை இந்தியாவில் 3 வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

  • 4GB RAM + 64GB ஸ்டோரேஜ்.
  • 4GB RAM + 128GB ஸ்டோரேஜ்.
  • 6GB RAM + 128GB ஸ்டோரேஜ்.

Redmi 14C 5G சிறப்பம்சங்கள்

பிராசசர்

இந்த வகை ஸ்மார்ட் ஃபோன்கள் Qualcomm Snapdragon 4 Gen 2 (SoC) 4nm தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதில் LPDDR4X RAM வசதியும் உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் வேகமான மற்றும் திறமையான செயல்பாடுகளை மொபைலுக்கு வழங்குகின்றது.

டிஸ்ப்ளே

இது 6.88 இன்ச் அளவில் 120Hz ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும் இதில் TUV ரைன்லேன்ட் சான்றிதழ் (TUV Rheinland certification) இருப்பதால் பயனாளர்களுக்குத் தீங்கு ஏற்படுத்தும் “ப்ளூ லைட்டைக்” குறைத்து, கண்களுக்குப் பாதுகாப்பைத் தருகின்றது. இதன் மூலம் நீண்ட நேரம் மொபைலைப் பயன்படுத்தினாலும் கண்கள் சோர்வடையாது. அது மட்டுமில்லாமல், இதில் 600 nits பீக் பிரைட்னஸ் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் வேகமும் உள்ளது.

OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்! OPPO K13 5G வெளியீடு 2025 | New Oppo Smartphone Launch with Stunning Design and Features

மெமரி எக்ஸ்பேன்சன்

6GB RAM கொண்ட மாடலில் கூடுதல் மெம்மரியைப் (Unused Storage) பயன்படுத்தி 12GB வரை விரிவாக்கிக் கொள்ளலாம்.

கேமரா

i) பின்புறம் ( Back camera): 50MP பிரைமரி கேமரா (f/1.8 aperture) வசதி உள்ளது.

ii) முன்புறம் (Front camera): 8MP செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது.

iii) புகைப்படம் மற்றும் வீடியோ தரத்தை மேம்படுத்தும் தரவுகளும் உள்ளன.

பேட்டரி

i) 5,160mAh பேட்டரி வசதியுடன் 21 நாட்கள் ஸ்டாண்ட்-பை மற்றும் 139 மணிநேர மியூசிக் ப்ளேபேக் நேரமும் உள்ளது.

ii) 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வச்சது உள்ளது.

iii) 33W சார்ஜர் பாக்ஸில் கிடைக்கும்.

இயக்க முறைமை

i) Android 14 அடிப்படையிலான HyperOS-ல் இயங்குகின்றது.

ii) 2 OS அப்டேட்ஸ் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் உள்ளன.

Also checkout – “iPhone 16 Plus vs OnePlus 13” – எது சிறந்தது?

கனெக்டிவிட்டி அம்சங்கள்

i) மைக்ரோ SD மூலம் 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

ii) IP52 ரேட்டிங்கைக் (தூசி மற்றும் தண்ணீர் எதிர்ப்பு) கொண்டுள்ளது.

iii) ப்ளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ் (GPS), 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் USB Type-C போர்ட் வசதிகள் உள்ளன.

விலை விவரங்கள்

இந்த வகை ஸ்மார்ட் ஃபோன்கள் மக்கள் எளிதில் வாங்கும் விலைகளில் கிடைக்கின்றன.

1) 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் – ரூ. 9,999

2) 4GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ. 10,999

3) 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் – ரூ. 11,999

விற்பனை விவரங்கள்

Redmi-ன் புதிய 3 வேரியண்ட் ஸ்மார்ட் ஃபோன்கள், Redmi 14C 5G மொபைல் ஃபோன்கள் Amazon, Flipkart, Mi.com போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் Xiaomi ஷோ ரூம்களில் ஜனவரி 10, 2025, மதியம் 12:00 PM முதல் கிடைத்து வருகின்றது.

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top