Realme 14 Pro and Pro+ 5G smartphones, இந்தியாவில் ஜனவரி, 2025-யில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதில் Base variant மற்றும் Pro+ variant என்ற 2 மாடல்கள் உள்ளன.
Realme நிறுவனம் அதன் ஸ்மார்ட் ஃபோன்களின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட் ஃபோன்களின் கேமரா, பேட்டரி மற்றும் சிப்செட் உள்ளிட்ட பல முக்கிய சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ளது.
முன்னதாகவே வெளியான தகவல்
ஒரு ஆலோசகர் (tipster) வெளியிட்ட பிரமோஷனல் போஸ்டர்கள் மூலமாக சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல்கள் ஸ்மார்ட் ஃபோன்களின் தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்னதாகவே வெளியாகியுள்ளன.
இதனால், இந்தப் புதிய மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் வெளியாவதற்கு முன்பாகவே மக்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வெளியிடப்படும் தேதி
“பேஸ் மாடல் மற்றும் பிளஸ் மாடல்” இந்தியாவில் ஜனவரி 16,2025 அன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று Realme நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Realme 14 Pro & Pro+ 5G

நிறங்கள்
இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் முன்பு அறிவிக்கப்பட்ட Pearl White மற்றும் Suede Grey ஆகிய நிறங்களில் கிடைக்கும் என்று Realme நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், Bikaner Purple மற்றும் Jaipur Pink என்ற 2 புதிய நிறங்களும் இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் என்று வெளியிட்டுள்ளது.
டிஸ்பிளே மற்றும் வடிவமைப்பு
இந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள் 1.5K குவாட்-கவுர்டு (quad-urved) டிஸ்பிளே மற்றும் 1.6mm தண்ணீரில் பரவிய சாரங்களைக் (bezels) கொண்டவை.
இந்த மாடல்கள் இவை சிறந்த பேஜல்கள் கொண்டவை என்று Realme நிறுவனம் கூறியுள்ளது. பேஜல்கள் என்பது ஒரு சாதனத்தின் டிஸ்ப்ளேவைச் சுற்றியுள்ள சுவர்களாகும்.
மேலும், இந்த ஸ்மார்ட் ஃபோன்களில் உலகின் முதல் மூன்று ஃபிளாஷ் யூனிட் (triple flash unit) இருப்பதால் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
OnePlus 13 & 13R: புதிய மொபைல்கள் அறிமுகம்!
குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள்
1) சிப்செட் மற்றும் சார்ஜிங் :
ஆலோசகர் பராஸ் குக்லானி (@passionategeekz) இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்பாகவே Realme 14 Pro 5G மற்றும் Realme 14 Pro+ 5G பற்றிய விளம்பர போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் படங்கள் மூலமாக அடிப்படை மாடல் MediaTek Dimensity 7300 Energy சிப் செட் மூலம் இயக்கப்படுவதாகவும், 45W Super VOOC சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், Plus மாடல் Snapdragon 7s Gen 3 SoC கொண்டிருக்கும் என்றும், அதில் 80W Super VOOC சார்ஜிங் ஆதரவு இருப்பதும் உறுதியாகியுள்ளது.
2) கேமரா மற்றும் சென்சார்கள்
Realme 14 Pro 5G
இதன் கேமரா 50-மெகாபிக்சலுடன் ஒரு முக்கிய சென்சாரைக் (Sony IMX882) கொண்டுள்ளது. மேலும், இதில் OIS (Optical Image Stabilization) தொழில்நுட்பம் இருப்பதால் படங்கள் மற்றும் வீடியோக்களின் குவாலிட்டி தெளிவாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல், இதில் f/1.8 என்ற அகலமான அபர்ச்சர் இருப்பதால் இதில் குறைந்த ஒளியிலும் சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும், 4k தரத்தில் வீடியோக்களையும் பதிவு செய்ய முடியும்.
Realme GT 7 & GT 8 Pro – வெளியீட்டு தேதி & அம்சங்கள்!
கூடுதலாக, 16 மெகாபிக்சல் திறனுடன் முன்னணி (front) கேமரா இருப்பதால் குவாலிட்டியான செல்ஃபிகளை எடுக்க முடியும்.
Realme 14 Pro+ 5G
இது 32-மேகாபிக்சல் முன்னணி (front) கேமராவாகும். இதில் 50-மேகாபிக்சல் முக்கிய பின்னணி (back) கேமரா, 50-மேகாபிக்சல் தெலிபோட்டோ (தூரமுள்ள பொருள்களை பக்கவாட்டில் பெரிதாக காட்டும்) கேமரா மற்றும் 112 – டிகிரி பரவலான காட்சியளிக்கும் அல்ட்ரா வைட் கேமரா ஆகியவை உள்ளன.
மேலும், இதில்:
- 3xஆப்டிக்கல்சூம்: புகைப்படத்தின் குவாலிட்டி குறையாமல் 3 மடங்கு நெருங்கிப் பார்க்க முடியும்.
- 6xலாஸ்-லெஸ்சூம்: தரம் குறையாமல் 6 மடங்கு சூம் செய்யலாம்.
- 120x டிஜிடல் சூம்: 120 மடங்கு தூரத்தையும் காட்டும் திறனைக் கொண்டது.
பேட்டரி மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கெபாசிட்டி
இரு சாதனங்களிலும் 6,000mAh பேட்டரிகள் உள்ளன. மேலும், இது IP66, IP68 மற்றும் IP69 தரவரிசைகளுடன் தண்ணீர் மற்றும் அழுக்கு எதிர்ப்புகளைக் கொண்டது.
Ghibli Image Scam Alert
விற்பனை செய்யப்படும் இடங்கள்
இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் இந்தியாவில் Flipkart மற்றும் Realme India e-store மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் இதனை பற்றிய விரங்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கமான https://www.realme.com/in/ – ல் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Key Insights & Best Takeaways
- Realme 14 Pro 5G Launch 2025 impresses with sleek design and performance upgrades.
- Comes with Snapdragon 7 Gen chipset, 120Hz AMOLED, and 67W fast charging.
- Realme Pro+ variant includes Sony IMX890 sensor, perfect for mobile photography lovers.
- Competitive pricing makes it one of the best mid-range 5G phones in India right now.