கனடாவில் உயரமான ராமர் சிலை திறப்பு விழா மிக விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
இந்தப் பதிவில்,
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கனடாவில் உயரமான ராமர் சிலை திறப்பு விழா
வட அமெரிக்காவின் மிக உயரமான ராமர் சிலை கனடாவின் டொரன்டோவில் உள்ள இந்து பாரம்பரிய மையத்தில் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கனடா அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் இந்தியத் துணைத் தூதர் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
மத்திய வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து, “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்லி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Read also : ஜல்லிக்கட்டிற்கு “UNESCO அங்கீகாரம்”
சிலையின் சிறப்பம்சங்கள்
இந்த சிலை ஆச்சார்யா சுரிந்தர் சர்மா சாஸ்திரி மற்றும் தொழிலதிபர் லஜ் பிராஷர் ஆகியோரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
இந்த சிலை டெல்லியில் உருவாக்கப்பட்டு, கனடாவில் உள்ளூர் கைவினைஞர்களால் அமைக்கப்பட்டது.
இது ஃபைபர் கிளாஸ் மற்றும் எஃகு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் பீடத்துடன் சேர்த்து சுமார் 58 அடி.
இந்த சிலை ஒரு நூற்றாண்டு காலம் நீடித்து நிற்கும் என்றும், மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசும் காற்றைக்கூட தாங்கும் திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரப் பெருமை
இந்த ராமர் சிலை அயோத்தியில் உள்ள ராமர் கோவில் திறப்பிலிருந்து உத்வேகம் பெற்றது.
இந்தச் சிலை, சமய நம்பிக்கையை மட்டும் குறிக்காமல், கலாச்சார நல்லிணக்கத்தையும், ஆன்மிக பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது.
டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கும் பயணிகள் விமானத்தில் இருந்தே இந்த பிரம்மாண்டமான ராமர் சிலையை காணலாம்.
இது கனடாவில் வசிக்கும் இந்தியர்களுக்குப் பெருமை சேர்க்கிறது.
சாணக்கிய நீதி

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
கனடாவில் உயரமான ராமர் சிலை திறப்பு – FAQs
1) கனடாவில் உயரமான ராமர் சிலை திறப்பு எந்த இடத்தில் நடைபெற்றது?
கனடாவின் டொரன்டோவில் உள்ள இந்து பாரம்பரிய மையத்தில் ராமர் சிலை திறப்பு நடைபெற்றது.
2) சிலையின் உயரம் எவ்வளவு?
பீடத்துடன் சேர்த்து சிலையின் மொத்த உயரம் சுமார் 58 அடி.
3) இந்தச் சிலை எதைக் கொண்டு உருவாக்கப்பட்டது?
இந்த ராமர் சிலை ஃபைபர் கிளாஸ் மற்றும் எஃகு கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Read also : நியூட்ரினோ ஆராய்ச்சி 2025 – முடிவுக்கு வருமா?
Key Insights & Best Takeaways
The inauguration of North America’s tallest Lord Ram statue in Toronto’s Hindu Heritage Centre marks a significant moment for the Indo-Canadian community. The 58-foot-tall idol, built with durable fiberglass and steel, was inspired by the Ayodhya Ram Temple and is a testament to cultural preservation. The event, attended by over 10,000 people and various political figures, highlights the community’s spiritual heritage and its growing presence in Canada.













