- Post Office முதலீட்டு திட்டம் : இன்றைய காலகட்டத்தில், மக்கள் தங்களின் சேமிப்பிற்கான சரியான இடத்தையும், பாதுகாப்பான இடத்தையும் தேடி வருகின்றனர். இந்தியா போஸ்ட், மக்களுக்காக பல சேமிப்புத் திட்டங்களையும், சலுகைகளையும் அளித்து வருகிறது.
- அந்த வரிசையில், அதிக வட்டி தரும் ஒரு போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றித் தெரியுமா? ஆம், அது சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் என்று சொல்லக்கூடிய முதியோர்களுக்கான பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும்.
- இது மக்களைக் கவரக்கூடிய அளவிற்கு வட்டி விகிதத்தையும், நிதிப் பாதுகாப்பையும், வரிச் சலுகைகளையும் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தை பற்றிய முழு விவரங்களை பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
Post Office முதலீட்டு திட்டம்
SCSS – சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்
- சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம் (SCSS) என்று சொல்லக்கூடிய மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், 2004-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- இது மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை அளிக்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்கள்
- வட்டி ஆண்டிற்கு 9.3% ஆக இருக்கும்.
- வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை (மார்ச் 31, ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31) வழங்கப்படும்.
- வட்டித் தொகை, அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் நேரடியாக சேர்க்கப்படும்.
முத்ரா யோஜனா தொழில் கடன் – 20L பெற எளிய வழிகள்!
கணக்கைத் திறப்பதற்கான வயது வரம்பு
- 60 வயது அல்லது அதற்கு மேல் உள்ளவர் இந்தக் கணக்கைத் திறக்கலாம்.
- 55-60 வயதிற்குள் இருப்பவர்கள் அல்லது VRS மூலம் ஓய்வு பெற்றவர்கள், அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு 1 மாதத்திற்குள் கணக்கைத் திறக்கலாம்.
- இவர்கள் ஓய்வூதியத் தொகையை மாற்றி இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.
முதலீட்டு வரம்பு
- கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதலீடு செய்ய வேண்டும்.
- அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை வைத்துக் கொள்ளலாம்.
- ஆனால், கட்டாயம் ரூ. 1,000 மடங்குகளாக முதலீடு செய்ய வேண்டும்.
Motorola Edge 50 Android 15 Update வந்தாச்சா?
கணக்கின் இயக்கம்
- ஒருவர் ஒரே நேரத்தில் பல கணக்குகளைத் திறக்கலாம்.
- கணக்குகளைத் தனிப்பட்ட முறையிலும், கணவன்-மனைவியுடன் கூட்டுக் கணக்காகவும் தொடங்கலாம்.
- கணக்கை ஒரு அஞ்சல் நிலையத்திலிருந்து மற்றொரு அஞ்சல் நிலையத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.
முதிர்வுக்காலம்
- கணக்கின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
- முதிர்வு காலம் முடிந்த பிறகு, 1 வருடத்திற்குள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து கணக்கை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
முதிர்வுக்கு முன் கணக்கை மூடுவதற்கான விதிமுறைகள்
கணக்கை முதிர்வுக்கு முன் மூட வேண்டும் என்றால்,
- 1 ஆண்டு பிறகு மூடினால்: வைப்புத்தொகையில் 1.5% கழிக்கப்படும்.
- 2 ஆண்டு பிறகு மூடினால்: வைப்புத்தொகையில் 1% மட்டுமே கழிக்கப்படும்.
“PPF முதலீடு நீண்டகால பாதுகாப்பு திட்டம்!”
வட்டியின் வரி சலுகை
- வட்டித் தொகை ரூ. 10,000-க்கு மேல் இருந்தால், அதற்கு TDS (Tax Deducted at Source) பிடிக்கப்படும்.
- இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80C-இன் கீழ் வரிச் சலுகைகள் கிடைக்கும்.
மேலும் சில முக்கிய அம்சங்கள்
- முதிர்ச்சியடைந்த பின் கணக்கை முடிவடையாமல் மூட முடியாது.
- ஒரு கணக்கில் “ரொக்கமாக ரூ. 1 லட்சத்திற்குள்” மட்டுமே முதலீடு செய்யலாம்.
- ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாகப் பணம் முதலீடு செய்ய வேண்டும் என்றால், காசோலை மட்டுமே அனுமதிக்கப்படும்.
- காசோலையின் தேதி, கணக்கு தொடங்கிய நாளாகக் கருதப்படும்.
சிறந்த பயனாளர்கள் யார்?
- 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள், சாதகமான வட்டி விகிதத்துடன் பாதுகாப்பான முதலீட்டைப் பெற விரும்புபவர்கள், இதைத் தேர்வு செய்யலாம்.
- மேலும், ஓய்வூதியத்திற்குப் பிறகு வட்டி வருமானத்தால் ஒரு நிம்மதியான வாழ்க்கையை எதிர்பார்க்கும் முதியோர்கள் இதைப் பயன்படுத்தலாம்.
Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள் நண்பர்களே..
மேலும் எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
அதிகாரப்பூர்வ இணையதளம் Government - இந்திய அஞ்சல் சேமிப்பு
Key Insights & Best Takeaways!
The High-Interest Post Office Scheme offers 9.3% annual interest, paid quarterly. It ensures safe and reliable investment for people above 60 years.
Eligible individuals are 60+ years old or 55+ with VRS retirement. The investment range is ₹1,000 to ₹15 lakhs, with a 5-year maturity and a 3-year extension option.
Early withdrawals incur a 1.5% penalty after 1 year and 1% after 2 years. This scheme qualifies for 80C tax benefits, and TDS applies for interest over ₹10,000.