OnePlus Watch 3 அறிமுகம் : OnePlus நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்குத் தேவைப்படும் வகையில் பல புதிய அப்டேட்களை தனது கேட்ஜெட்களில் கொடுத்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகமான OnePlus வாட்ச் 2-வைத் தொடர்ந்து, அதன் அப்டேட்டட் வெர்ஷனான “OnePlus வாட்ச்- 3” விரைவில் வெளியாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் சிறப்பம்சங்கள் குறித்துப் பல தகவல்கள் பரவி வருகின்றன. அதன்படி, இந்தப் புதிய வாட்ச் “ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பல சிறப்பம்சங்களுடன்” உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
சிறப்பம்சங்கள் (தகவலின்படி)
1) ஆரோக்கிய அம்சங்கள்:
இந்த வாட்ச் ஆரோக்கியம் மற்றும் உடல்நலப் பராமரிப்புக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
OnePlus Watch 3

i) ஈசிஜி (ECG)
இது இதயத்தின் மின்சார செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்க உதவும். இதன் மூலம் இதயத் துடிப்பு பிழைகள் அல்லது மற்ற பிரச்சனைகளைத் துல்லியமாகக் கண்டறிய முடியும்.
ii) ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib)
இது இதயத்தில் முடிவற்ற துடிப்பு (irregular heartbeat) உள்ளது என்பதை அறிவிக்கிறது. இதன் மூலம் இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
iii) பிவிசி (PVCs)
இதயத்தின் துடிப்பு சீரற்றதாக இருந்தால் அதைக் குறிப்பிடும். மேலும், இதயத்தின் ஆரோக்கியத்தைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்க உதவும்.
OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்!
iv) இதயத் துடிப்பு அளவீடு
அதிகம் அல்லது குறைவாக இருக்கும் இதயத் துடிப்புகளை வரம்பு மீறும் முன் முன்னறிவிப்பை வழங்குகிறது.
2) உடல் வெப்பநிலை அளவீடு
மணிக்கட்டு வெப்பநிலை (Wrist Temperature) கண்காணிப்பு
OnePlus வாட்ச் 3-யை 5 நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தித் தூங்கினால், உங்களின் அடிப்படை உடல் வெப்பநிலையைத் தெரிந்து கொள்ளலாம். உங்கள் வெப்பநிலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், இது உடனடியாக எச்சரிக்கை வழங்குகிறது.
3) 60-நிமிட முழு உடல்நல சோதனை:
OnePlus வாட்ச் – 3, நேரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தி உடல்நலப் பரிசோதனையை செய்ய உதவுகிறது. இது “இதய ஆரோக்கியம், தூக்கத்தின் தரம் மற்றும் குறட்டை அளவீடு, இரத்த ஆக்சிஜன் அளவுகள் (SpO2), இரத்த நாளங்களின் நெகிழ்ச்சி (Elasticity of blood vessels), உடலின் உண்மையான வயது, தூக்கத்தின்போது அடையப்படும் முழு ஓய்வு நிலை” போன்றவற்றைப் பரிசோதிக்க உதவுகிறது.
Ather 450 Electric Scooter – அம்சங்கள் & விலை விவரம்!
4) டெக்னிக்கல் சிறப்பம்சங்கள்
i) சிபியூ (Processor)
இது ஸ்னாப்டிராகன் W5 ஜெனரல் 1 SoC மூலம் வேகமாக செயல்படுகிறது.
ii) ரேம் மற்றும் ஸ்டோரேஜ்
2GB ரேம் மற்றும் 32GB இன்டர்னல் ஸ்டோரேஜைக் கொண்டது. இதில் மெமரி மேலாண்மை (Memory Management) மிகச் சிறப்பாக இருக்கும்.
iii) பேட்டரி
இது 631mAh பேட்டரி உடன், நீண்ட நாள் சார்ஜிங் நிலையில் இருக்கும். மேலும், இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் பல நாட்கள் செயல்படும்.
5) ஓஹெல்த் ஆப்
இந்தப் புதிய வாட்ச் “ஓஹெல்த்” (OHealth) ஆப்பின் வழியாக முழுமையான சுகாதாரத் தகவல்களை வழங்குகிறது. இது சுகாதாரத் தகவல்களுக்கான தனி டேபையும் (Tab), சுகாதாரச் செயல்பாடுகளின் தெளிவான அறிக்கைகளையும், தொலைவிலிருந்து வாட்ச் அம்சங்களை சரிசெய்யும் இது உதவுகிறது.
(குறிப்பு: மேற்கண்ட செய்தி தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதைப் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ இணையதளங்களைக் கண்டறியவும்).
OnePlus Watch 3 – Click Here..
“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!”
Key Insights & Best Takeaways
The OnePlus Watch 3 brings a fresh upgrade with enhanced features and sleek design.
It offers improved battery life, health tracking, and smart connectivity options.
The smartwatch targets both fitness enthusiasts and tech lovers equally.
With competitive pricing, OnePlus aims to capture the smartwatch market strongly.
Overall, it’s a stylish and powerful choice for 2025 smartwatch buyers.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com