• Home
  • இந்தியா
  • 18+ வயதினருக்கு Aadhar Card இனி கிடையாது! அசாம் அரசின் அதிரடி உத்தரவு!

18+ வயதினருக்கு Aadhar Card இனி கிடையாது! அசாம் அரசின் அதிரடி உத்தரவு!

18+ வயதினருக்கு Aadhar Card இனி கிடையாது - Assam Government new rule to stop Aadhaar for illegal immigrants!

அசாம் மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல்முறையாக Aadhar Card வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

அசாமில் Aadhar வழங்கும் புதிய கொள்கை

அசாம் மாநில அரசு, அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள், Aadhar அட்டை பெறுவதைத் தடுக்க ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.

முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோர் முதன்முறையாக ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்தால், அதை வழங்கப் போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

முடிவின் பின்னணி

வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியவர்கள் Aadhar அட்டை பெறுவதால், மாநில அரசு பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த சிக்கலைக் கட்டுப்படுத்த, முதலில் தேசிய மக்கள் பதிவேட்டில் (National Register of Citizen) பெயர் இருப்பவர்களுக்கு மட்டுமே ஆதார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Read also : ரூபாய் நோட்டு கிழிஞ்சிடுச்சா? பிரச்சனை இல்லை – RBI அறிவிப்பு! ரூபாய் நோட்டு கிழிந்தால் புதிய நோட்டு மாற்றலாம் - RBI புதிய விதிகள் 2025!

ஆனாலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் பெறுவதைத் தடுக்க முடியவில்லை. குறிப்பாக பார்பேட்டா, துப்ரி, மரிகாவன், நாகோன் போன்ற மாவட்டங்களில், மக்கள் தொகையைவிட ஆதார் அட்டை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததது இந்தப் பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தியது.

யார் யாருக்கு விதிவிலக்கு?

இந்தப் புதிய விதிமுறை அசாம் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தாது. பழங்குடி இனத்தவர்கள், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

அவர்களுக்கு வழக்கம் போல் Aadhar அட்டை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள பூர்வகுடி மக்கள் பாதிக்கப்படாமல், சட்டவிரோதக் குடியேற்றம் கட்டுப்படுத்தப்படும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சாணக்கிய நீதி

சாணக்கியர் கூறிய வாழ்க்கை நெறிகள் - Chanakya Needhi Quotes in Tamil

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!

எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!

Key Insights & Best Takeaways

In a decisive move to combat illegal immigration from Bangladesh, the Assam government has made a landmark decision to suspend the issuance of new Aadhaar cards to individuals over 18 who are applying for the first time. The crucial takeaway is that this policy, while aiming to fortify the state’s security and citizen registry, includes vital exemptions for indigenous tribes, Scheduled Castes, and tea garden workers, ensuring the protection of the state’s native population. This proactive step is designed to effectively address the disproportionately high number of Aadhaar cardholders in some districts, providing a powerful solution to a long-standing issue.

Read also : இந்தியக் குடியுரிமைக்கு ஆதார் மட்டும் போதாதா? முக்கிய ஆவணங்கள் Indian Citizenship Documents - ஆதார் மட்டும் போதாது! Passport, Birth Certificate, EPIC ஆகியவை குடியுரிமைக்கான முக்கிய ஆவணங்கள்!

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *