உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? சிறந்த வழி – NMES

உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை கட்டுப்படுத்தும் NMES | NMES Device Fitness Alternative

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? உடல் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்கும் தசை வளர்ச்சி இன்றியமையாதது. வழக்கமான உடற்பயிற்சி, உணவு முறையைத் தாண்டி, இப்போது விஞ்ஞானிகள் ஒரு அற்புதமான வழியைக் கண்டறிந்துள்ளனர். அதுதான் NMES. இதன் முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? NMES Fitness Technology Tamil
உடல் வளர்ச்சிக்கும் தசை பலத்திற்கும் NMES சிறந்த தேர்வு!
NMES என்றால் என்ன?

NMES என்பது “நியூரோ மஸ்குலார் எலக்ட்ரிக்கல் ஸ்டிமுலேஷன்” ஆகும். தமிழில் இதை “நரம்பு தசை மின் தூண்டுதல்” என்று கூறுவர். இது மின்சார சக்தியைப் பயன்படுத்தி நம் தசைகளை சுருங்கச் செய்யும் ஆற்றலை உடையது.

பொதுவாக, நம் உடலில் உள்ள நரம்புகள் தசைகளுக்குச் செய்திகளை அனுப்பி அவற்றை சுருங்கச் செய்கின்றன. இப்போது NMES சாதனம் இதை செயற்கையான முறையில் செய்கின்றது.

இது நம் தோலில் ஒட்டப்படும் மின் முனைகளின் மூலம் மென்மையான மின்சார சமிக்கைகளைத் தசைகளுக்கு அனுப்பி, தசைகளை சுருங்கச் செய்கின்றது.

உடற்பயிற்சி சுதீப் பாஜ்பேயின் கூற்று

டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான “சுதீப் பாஜ்பேயி, Ph.D.” கூறியபோது, “இந்த சாதனங்கள் பயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல், இது அனைத்து இடங்களிலும் கிடைக்கும். ஆனால், எதிர்ப்புப் பயிற்சி (உதாரணம்: லிஃப்டிங்) செய்யும்போது இந்த மின்சாரத் தூண்டுதல்கள் தசைகள் சுருங்குவதற்கு உதவுமா என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

HMPV Virus India 2025 – இந்தியாவில் 2 பேர் பாதிப்பு! 2024-இல் சிறந்த மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள் (Best Robots of 2024 – Human-like)

உடற்பயிற்சி – புதிய கண்டுபிடிப்புகள்

“ஐரோப்பியன் ஜர்னல் ஆஃப் அப்ளைடு பிசியாலஜி” என்ற ஆய்வுகளில், “எதிர்ப்புப் பயிற்சியுடன் இந்த NMES-ஐ இணைத்துச் செய்தால் தசையின் வளர்ச்சியும், வலிமையும் அதிகரிக்கும்” என்று வெளியிட்டுள்ளது. பேராசிரியர் பாஜ்பேயும், அவரது குழுவும் நடத்திய பல பகுப்பாய்வுகளின் மூலம்  இந்த முடிவை மதிப்பாய்வு செய்தனர்.

மெட்டா பகுப்பாய்வு

“பல ஆய்வுகளின் முடிவுகளை ஒன்று சேர்த்து ஆராய்வதுதான் “மெட்டா பகுப்பாய்வாகும்”. இதன் மூலம் ஒவ்வொரு ஆய்வின் தனிப்பட்ட வரம்புகளை ஆராய்ந்து, துல்லியமான முடிவுகளை எடுக்க முடியும்” என்று பேராசிரியர் பாஜ்பேயி கூறியுள்ளார்.

ஆய்வு எப்படி செய்யப்பட்டது?

எதிர்ப்புப் பயிற்சிகளை (எ.கா – பெஞ்ச் பிரஸ், ஸ்க்வாட்ஸ்) செய்யும்போது NMES சாதனத்தைப் பயன்படுத்தியவர்களின் முடிவுகளுடன்  NMES சாதனத்தைப் பயன்படுத்தாதவர்களின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்தனர்.

கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்! கோடைக்கால உணவுகள்- Healthy & Cooling Foods – Best Hydrating Fruits & Drinks for Summer

2 முதல் 16 வாரங்கள் வரை இந்தப் பயிற்சி செய்யப்பட்டது. நீண்ட கால பயிற்சிக்குப் பிறகு சிறந்த முடிவுகள் கிடைத்தன.

NMES எவ்வாறு வேலை செய்கிறது?

பொதுவாக நமது மூளை நரம்புகள் தசைகளுக்குச் செய்திகளை அனுப்பி, தசைகளை சுருங்கச் செய்கிறது. இப்போது, இந்த NMES சாதனம் மூளையின் செய்தியைப் பின்பற்றி நரம்புகளுக்கு மின்சாரத் தூண்டுதல்களை அனுப்புகிறது.

இதனால் மூளையின் கட்டளை இல்லாமலேயே தசைகள் சுருங்குகின்றன. இதைத் “தன்னிச்சையாக தசை சுருங்குதல்” என்று கூறலாம். இது தசை வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன.

உடற்பயிற்சி – NMES தரும் நன்மைகள்

உடற்பயிற்சி என்பது உடலுக்கு மிகப்பெரிய மருந்தாகும். ஆனால், இன்றைய அவசரகால உலகில் பலர் வழக்கமான உடற்பயிற்சியை செய்ய விரும்புவதில்லை.

தற்போது, இந்த NMES கருவி, தசை வளர்ச்சியை அதிகரிப்பதன் மூலம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மேலும், இது தசைகள் வலுவாக இருக்கும் போது உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆற்றலை உடையது.

World Health Organizations – Click here..

7 Days Diet Plan – உடல் எடை குறைக்க தமிழ் டிப்ஸ் 2025!  7 Days Diet Plan – உடல் எடை குறைக்க சிறந்த தமிழ் டிப்ஸ் 2025 | Weight Loss Tips in Tamil

உடற்பயிற்சியின் மாற்று வழி NMES – FAQs

1) NMES என்றால் என்ன?

NMES என்பது “நரம்பு தசை மின் தூண்டுதல்” (நியூரோ மஸ்குலார் எலக்ட்ரிக்கல் ஸ்டிமுலேஷன்) ஆகும்.

2) NMES எவ்வாறு தசையை வளர்க்க உதவுகிறது?

இது மின்சாரச் சமிக்கைகள் மூலம் தசைகளுக்குத் தூண்டுதல் அளித்து, அவற்றைத் தன்னிச்சையாகச் சுருங்கச் செய்கிறது.

3) ஆய்வுகளின்படி NMES-ஐ எதனுடன் இணைத்துப் பயன்படுத்தினால் அதிக நன்மை?

எதிர்ப்புப் பயிற்சியுடன் (Resistance Training) NMES-ஐ இணைத்துச் செய்தால் தசை வளர்ச்சி மற்றும் வலிமை அதிகரிக்கும்.

Key Insights & Best Takeaways!

  • NMES (Neuromuscular Electrical Stimulation) is a modern solution for fitness without traditional exercise.
  • It helps stimulate muscles, improve strength, and maintain body tone.
  • NMES is ideal for people with no time for regular workouts due to a busy lifestyle.
  • Regular use of NMES devices can assist in muscle recovery, weight control, and enhanced circulation.
  • Always consult a healthcare professional before starting NMES therapy for safe and effective results.

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top