NIH Brain Research 2025 – மூளை பற்றி அறிய தகவல்கள்!

NIH Brain Research 2025 Insights – மூளையியல் தகவல்கள்

NIH Brain Research 2025: மனித உடல் என்பது ஒரு “இயந்திரம்” போன்றது. இதில் பல கோடிக்கணக்கான செல்கள், தசைகள், நரம்புகள் ஆகியவை உள்ளன. உடம்பில் நடக்கும் செயல்பாடுகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு விஞ்ஞானம் நிச்சயமாக தேவைப்படுகின்றது. தற்போது தொழில்நுட்ப மேம்பாடுகளான பயோ டெக்னாலஜி, AI மற்றும் நவீன கருவிகளின் உதவியோடு மனித உடலின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சிகள் மூலமாக மனித உடலில் நடக்கும் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளவும், நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து குணப்படுத்தவும், புதிய சிகிச்சை முறைகளை உருவாக்கவும் முடியும். இது மனிதர்களின் ஆயுட்காலத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றது.

NIH-இன் ஆய்வு

தற்போது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் (NIH) மேற்கொண்ட புதிய ஆராய்ச்சியில்,  மனித மூளையில் உள்ள ஒவ்வொரு செல் வகையும் ஒரே விதமாக வயதாகாமல், ஒவ்வொரு வகையும் வெவ்வேறு விதமாக வயதடைவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் சில சிறிய செல்கள் (hormone-regulating cells), குறிப்பாக வயதான பிறகு ஏற்படும் மரபணு செயல்பாட்டில் (gene activity) அதிக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

NIH Brain Research 2025

Brain Neuron Research – மூளை நரம்பியல் அறிவியல் 2025
மூளை நரம்பியல் பற்றி வியக்கவைக்கும் விஞ்ஞான தகவல்கள்!

மேலும், சில செல்கள் மற்ற செல்களை விட மிக வேகமாக வயதடைவதோடு, வயதிற்குத் தொடர்பான மூளை கோளாறுகளுக்கு இது மிகவும் பாதிப்பானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் Nature என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

NIH இயக்குநரின் விளக்கம்

அல்சைமர் நோய் மற்றும் ஆபத்தைத் தரும் மூளைக் கோளாறுகளும் பெரும்பாலும் வயதானவர்களுக்குத் தொடர்புடையவை. மேலும், முதுமை என்பது இந்த வகை நோய்களுக்கு மிக முக்கியமான காரணமாக அமைகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அதேபோல் NIH நிறுவனத்தின் இயக்குனரான “ரிச்சர்ட் ஜே. ஹோட்ஸ், MD, ஜெரியாட்ரிக்ஸ் (முதுமை ஆராய்ச்சி)” இது குறித்துக் விளக்கம் அளித்துள்ளார். அவர், “இந்தப் புதிய வகை ஆராய்ச்சி மூளையின் செல்களில் முதுமையை ஏற்படுத்தும் தாக்கங்களை விரிவாக வழங்கியுள்ளது. இதன் மூலம் முதுமை காரணத்தால் ஏற்படும் மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அடையாளம் காண முடியும். மேலும், இது முதுமையால் மூளையில் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளின் கோணத்தை மாற்றக் கூடியதாகும். இதன் மூலம் முதுமை தொடர்பான மூளை நோய்களுக்குப் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

AI America vs China 2025 – மனிதரை விட புத்திசாலியாக? AI: America vs China in 2025 (மனிதரை விட AI)
ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்புகள்

1) மூளை பகுப்பாய்வு

இந்த ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் மேம்பட்ட மரபணு பகுப்பாய்வு கருவிகளைப் பயன்படுத்தி 2 மாதங்களான இளம் எலிகள் மற்றும் 18 மாதங்களான முதுமை எலிகளின் மூளையில் உள்ள  ஒவ்வொரு தனி செல்களையும் ஆய்வு செய்தனர். எலிகளின் மூளையின் 16 முக்கிய பகுதிகளில் உள்ள பலவிதமான உயிரணு வகைகளின் மரபணு செயல்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்தப் பகுதிகள் எலியின் மூளைப் பகுதியில் மொத்த அளவின் 35% ஆகும்.

2) நரம்பியல் மரபணு செயல்பாடுகளில் குறைவு

முந்தைய ஆய்வுகளைப் போலவே நரம்பியல் சுற்றுகளில் ஈடுபட்ட மரபணுக்களின்  செயல்பாடு குறைவது கண்டறியப்பட்டது.

இந்தக் குறைவு நியூரான்கள் மற்றும் கிளியல்(glial) செல்கள் (astrocytes & oligodendrocytes) ஆகியவற்றில் காணப்பட்டது.

3) நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி (inflammation) செயல்பாடுகளின் அதிகரிப்பு

முதுமை காரணமாக மூளையின் நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி  தொடர்பான மரபணுக்களின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றது.

சிறந்த ரோபோக்கள் 2024 – மனிதர்களை மிஞ்சும் AI 2024-இல் சிறந்த மனிதர்களை மிஞ்சும் ரோபோக்கள் (Best Robots of 2024 – Human-like)

மேலும், மூளைக்குச் செல்லும் ரத்த நாள (blood vessel) செல்களிலும் இதே போலவே அதிகரிப்பு காணப்பட்டது.

4) Surprising Brain information by NIH, முதுமையின் தாக்கம்

எந்த செல்கள் முதுமையின் தாக்கத்திற்கு அதிகமாக செயல்படுகிறது என்பதை இந்த ஆய்வில் கண்டறிய முடிந்தது.

எடுத்துக்காட்டாக, மூளையின் குறைந்தது 3 பகுதிகளில் புதிதாக உருவாகும் நியூரான்களின்  வளர்ச்சி முதுமை காரணமாக குறைவது தெரியவந்தது.

முதுமையால் அதிக தாக்கத்திற்கு உள்ளாகும் செல்கள்

3rd வென்ட்ரிகல் என்ற மூளையின் முக்கிய பகுதியைச் சுற்றியுள்ள செல்கள்தான் முதுமையால் அதிக தாக்கத்திற்கு உள்ளாகும் செல்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

மூளையில் செரீப்ரோ ஸ்பைனல் ஃப்லூயிட் (cerebro spinal fluid) எனப்படும் திரவத்தை ஹைபோதலாமஸ் (Hypothalamus) வழியாக செலுத்த உதவுகின்றது.

ஹைபோதலாமஸின் செயல்பாடு

இது உடலின் அடிப்படைத் தேவைகளான உடல் வெப்பநிலை, இதயத் துடிப்பு, தூக்கம், தாகம்,  பசி போன்ற ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றது.

வறட்டு இருமல் குணமாக 5 வீட்டுவைத்தியங்கள்! வறட்டு இருமல் குணமாக வீட்டு மருத்துவம் | Dry Cough Home Remedies in Tamil
விஞ்ஞானியின் கருத்து

NIH-இன் BRAIN Initiative இயக்குநரான ஜான் ந்காய், Ph.D., இந்த ஆராய்ச்சி பற்றிக் கூறியுள்ளார். அவர், “முந்தைய ஆராய்ச்சிகள் முதுமையின் தாக்கத்தை ஒரே ஒரு செல்லின் அடிப்படையில் ஆய்வு செய்தது.

ஆனால், NIH-இன் BRAIN Initiative மூலம்  உருவாக்கப்பட்ட புதுமையான மூளை வரைப்படக் கருவிகளைப் பயன்படுத்தி இப்போது முழுமையாக மூளை முதுமையைப் பற்றிய புதிய புரிதலைத் தந்துள்ளது.

இந்த ஆய்வு மூளையின் முதுமை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதையும், நரம்பியல் சிதைவுக் கோளாறுகள் (neurodegenerative diseases) சீரான முதுமை செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் ஆராய்ச்சி செய்வதற்கு பல வழிகளை வழங்கியுள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் முதுமையின் தாக்கத்தால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை  விளக்குவதற்கும், மனித ஆரோக்கியத்துடன் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.

Key Insights & Best Takeaways!

  • NIH Brain Research 2025 explores new dimensions of brain functionality and neuron activity.
  • Keywords like brain science, NIH study 2025, and neuroscience findings are trending in global searches.
  • 🇮🇳 India-based researchers are collaborating on this global study, boosting knowledge exchange.
  • These insights could redefine treatments for mental health, memory loss, and neurological disorders.
  • A must-read for those interested in the future of neuroscience and AI-driven brain analysis.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Official Website – National institute of Health

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *