Motorola Edge 50 Android 15 Update வந்தாச்சா?

Motorola Edge 50 Android 15 அப்டேட் வந்தாச்சா? | Latest Motorola Mobile Software Update in Tamil
  • Motorola Edge 50 : பிரபல ஸ்மார்ட் ஃபோன் நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா (Motorola) நிறுவனம், தங்கள் ஸ்மார்ட் ஃபோன்களில் மக்களுக்குப் பல அப்டேட்களை வழங்கி வருகிறது. 
  • இந்நிலையில், இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் “மோட்டரோலா எட்ஜ் 50 நியோ” (Motorola Edge 50 Neo) ஃபோன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
  • இந்த மோட்டரோலா எட்ஜ் 50 நியோவுக்கான ஆண்ட்ராய்டு 15 அப்டேட் சுமார் 1.63ஜிபி weight-ஐக் கொண்டுள்ளது என்று Reddit-ல் பகிரப்பட்ட ஸ்கிரீன் ஷாட்டில் கூறப்பட்டுள்ளது. இதைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.

Motorola Edge 50 – புதிய அப்டேட்கள்

  • இதில் மென்மையான அனுபவத்திற்கான கிராபிக்ஸ் மேம்பாடு உள்ளது.
  • இது செயல்திறனை அதிகரிக்க விரைவான பதிலளிப்புத் திறனைக் கொண்டுள்ளது.
  • இதில் புதுப்பிக்கப்பட்ட பயன்பாட்டு அம்சங்கள் உள்ளன.

சிறப்பம்சங்கள்

சிப்செட் 

  • இந்த ஃபோன் MediaTek Dimensity 7300 சிப்செட்டுடன் வருகிறது. 

செயல்திறன்

  • இது அதிவேக செயல்திறன் மற்றும் மேம்பட்ட செயல்பாட்டை வழங்குகிறது. அதனால் கேமிங் மற்றும் மல்டிடாஸ்கிங் பயனர்கள் இதன் மூலம் அதிக திருப்தி அடைவார்கள்.
OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்! OPPO K13 5G வெளியீடு 2025 | New Oppo Smartphone Launch with Stunning Design and Features

டிஸ்பிளே

  • 6.4-இன்ச் pOLED டிஸ்பிளே மற்றும் 1.5K தீர்மானத்தைக் (Resolution) கொண்டுள்ளது.
  • இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இருப்பதால், திரையின் பரிமாற்றம் மிகவும் மென்மையாக இருக்கும்.
  • இதன் 3000 நிட்ஸ் பிரைட்னஸ், வெளிச்சமான சூழலிலும் திரையைத் தெளிவாகக் காட்டும்.
  • இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது.

கேமரா அமைப்பு

  • இதில் 50MP பிரைமரி கேமரா (OIS ஆதரவு) வசதி உள்ளது.
  • இதில் 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 10MP டெலிபோட்டோ லென்ஸ் (3x ஆப்டிகல் ஜூம்) உள்ளது.
  • இதன் 32MP செல்ஃபி கேமரா, தரமான செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.

பேட்டரி

  • இதன் 4310mAh பேட்டரி, நீண்டநாள் பயனுக்கு உதவும்.
  • இதில் 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

பாதுகாப்பு

  • தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்புக்கான “IP68 தரச் சான்றிதழைக்” கொண்டுள்ளது.  .
  • வலிமையான கட்டமைப்புக்கான “MIL-STD 810H சான்றிதழைக்” கொண்டுள்ளது.
OPPO Reno 13 Series – புதிய AI கேமரா மற்றும் அம்சங்கள்! OPPO Reno 13 Series புதிய AI கேமரா அம்சங்கள் | Latest Smartphone Features 2025

ஆடியோ

  • இதன் “டால்பி அட்மாஸ் ஆதரவு”, சிறந்த இசை அனுபவத்தைத் தருகிறது.

நிறங்கள்

  • பான்டோன்  நாட்டிக்கள் ப்ளூ (Pantone Nautical Blue). 
  • பான்டோன் லாட்டே (Pantone Latte).
  • பான்டோன் பொய்ன்ஸியானா (Pantone Poinciana).
  • பான்டோன் க்ரிசைல் (Pantone Grisaille).

விலை

  • இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ரூ. 20,999 விலையில் கிடைக்கிறது. 
  • உங்களுக்கு சிறந்த செயல்திறன், வலிமை மற்றும் உயர்தர கேமரா திறனுடன் ஆண்ட்ராய்டு 15 வசதி கொண்ட ஸ்மார்ட் ஃபோன் வேண்டுமென்றால், இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Walnut benefits : ஊறவைத்தது vs உலர்ந்தது – எது சிறந்தது? Walnut நன்மைகள் மற்றும் உடல்நலத்துக்கு சிறந்தது எது? | Soaked vs Dried Walnut Benefits in Tamil

மேலும் விவரங்களுக்கு – motorola.in

மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..

எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Key Insights & Best Takeaways

Motorola Edge 50 Neo Android 15 Update Released Motorola Edge 50 Neo gets the Android 15 OTA update. Check out the release date, new features, and rollout details.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *