• Home
  • வணிகம்
  • ஜூலை 2025 முதல் புதிய பணச்சட்டங்கள் : UPI, Aadhaar, PAN மாற்றங்கள்!

ஜூலை 2025 முதல் புதிய பணச்சட்டங்கள் : UPI, Aadhaar, PAN மாற்றங்கள்!

ஜூலை 2025 Money Rules - புதிய UPI chargeback, Aadhaar PAN update, Tatkal ticket, GST return, HDFC card changes

ஜூலை 2025 Money Rules : ஜூலை 2025 முதல் இந்தியாவில் சில முக்கிய பணம் சம்பந்தப்பட்ட விதிமுறை மாற்றங்கள் நடக்கவிருக்கின்றன.

இது பொதுமக்கள் மத்தியிலும், தொழில்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால், இதைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். இதன் முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

ஜூலை 2025 Money Rules

UPI சார்ஜ்பேக் (UPI chargeback) விதிகள் மாற்றம்

தேசிய கட்டணக் கழகம் (NPCI), UPI பணம் மீட்பு முறையை எளிமைப்படுத்தியுள்ளது.

இப்போது, ஒருவர் பணத்தை திருப்பித் தரக் கோரும்போது அது மறுக்கப்பட்டாலும், வங்கிகள் அந்த கோரிக்கையை மீண்டும் நேரடியாக பரிசீலிக்க முடியும். இதற்காக NPCI-யின் அனுமதி தேவைப்படாது.

புதிய PAN கார்டுக்குஆதார் கட்டாயம்

ஜூலை 1, 2025 முதல், புதிய PAN கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயமாகும். இதுவரை பிற அடையாள அட்டைகள் போதும் என இருந்தது.

ஆனால், இனிமேல் ஆதார் அட்டையை சரிபார்த்தாலே பான் கார்டு பெற முடியும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

Read also : “2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!” 2025 புதிய விதிகள் – Indian Citizens Daily Life Changes

தட்கல் டிக்கெட் பதிவு விதிகள் (Tatkal ticket registration rules)

IRCTC தளத்தில் அல்லது மொபைல் செயலியில் தட்கல் ரயில் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது.

ஜூலை 15 முதல் OTP (ஒரே முறை கடவுச்சொல்) மூலம் டிக்கெட் பதிவு உறுதி செய்ய வேண்டும். ரிசர்வேஷன் கவுன்டர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

மேலும், தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, அனுமதிக்கப்பட்ட முகவர்களுக்கு முதல் 30 நிமிடங்கள் பதிவு செய்ய முடியாது.

AC வகை டிக்கெட்டுகள் காலை 10 மணி முதல் 10.30 மணி வரையும், சாதாரண வகை (Non – AC) டிக்கெட்டுகள் காலை 11 மணி முதல் 11.30 மணி வரையும் அவர்கள் பதிவு செய்ய அனுமதிக்கப்படாது.

GST தாக்கல் விதிகள்

ஜூலை 2025 முதல், GSTR-3B என்ற மாத மாதம் சமர்ப்பிக்க வேண்டிய ஜிஎஸ்டி படிவத்தை ஒருமுறை சமர்ப்பித்த பிறகு திருத்த முடியாது.

அதேபோல், ஒரு ஜிஎஸ்டி வரி அறிக்கையை (GST Bill) சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், 3 ஆண்டுகள் கடந்த பிறகு அதை மீண்டும் கொடுக்க முடியாது.

அதற்குப் பிறகு தாக்கல் செய்ய அரசு அனுமதிக்காது.

Read also : PM-Kisan பயனாளிகள் பட்டியல் 2025 – உங்கள் பெயர் உள்ளதா? PM-Kisan 2025 பயனாளிகள் பட்டியல் | Check your name online

HDFC கிரெடிட் கார்டு மாற்றங்கள்

ஜூலை 1 முதல், ரூ. 10,000-க்கும் மேற்பட்ட மாதச் செலவுகளுக்கும், ரூ. 50,000-க்கு மேல் யூட்டிலிட்டி பில் பேமெண்ட்கள் (Utility bill payments), ரெண்ட் (Rent), ஃப்யூயல் (Fuel), ஆன்லைன் கேமிங் (Online Gaming) போன்ற செலவுகளுக்கும் 1% கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், இந்தக் கட்டண வசூலிப்பிற்கும் ரூ. 4,999 என வரம்பு உள்ளது. மேலும், இனிமேல் ஆன்லைன் கேமிங்கில் வரும் ரிவார்டு பாயின்ட்கள் வழங்கப்படாது.

ஜூலை 2025 Money Rules – FAQs

1) புதிய பான் கார்டுக்கு ஆதார் எப்போது முதல் கட்டாயம்?

ஜூலை 1, 2025 முதல், புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயமாகும்.

2) தட்கல் டிக்கெட் முன்பதிவுக்குப் புதிய விதிமுறைகள் யாவை?

தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு மற்றும் OTP கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், முகவர்கள் முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு செய்ய முடியாது.

3) HDFC கிரெடிட் கார்டு கட்டணங்கள் எதில் மாற்றப்படுகின்றன?

மாதாந்திரச் செலவுகள், யூட்டிலிட்டி பில் பேமெண்ட்கள், ஆன்லைன் கேமிங், வாடகை, எரிபொருள் மற்றும் கல்விச் செலவுகள் போன்ற குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படும்.

You may also like : Home Loan 2025 – வீட்டுக் கடன் வாங்குவதற்கு சிறந்த tips! Home Loan 2025 முக்கிய டிப்ஸ் மற்றும் வீடு வாங்கும் வழிகாட்டி | Home Loan Tips in Tamil

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

Starting July 2025, India introduces significant financial changes, making Aadhaar mandatory for new PAN cards and Tatkal train ticket bookings, streamlining UPI chargeback processes by removing NPCI intervention, and implementing stricter GST return filing rules with non-editable forms and a three-year filing limit. HDFC Bank credit card users will also see new fees for high-value transactions and changes to reward point accrual, emphasizing the need for individuals and businesses to adapt to these digital and financial updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *