IT hub in Coimbatore – தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பு!

IT hub in Coimbatore – தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு

IT hub in Coimbatore – இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் தங்களின் படிப்பிற்குத் தகுந்த வேலையைத் தேடுவதற்குச் சென்னை போன்ற பகுதிக்கு தான் செல்கின்றனர்.

சிலர் குடும்ப சூழலின் காரணமாக வெளியூருக்குச் செல்ல முடியாமல் தங்கள் ஊர்களிலேயே தங்களின் படிப்பிற்குச் சம்பந்தமில்லாத வேலையைச் செய்து வருகின்றனர்.

இதைத் தடுக்கும் வகையில் சென்னையைத் தாண்டிய பிற இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலை வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களும், தொழில்நுட்ப பூங்காக்களை விரிவுபடுத்தவும் அரசாங்கம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சிகளில் அவர்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Day Umagine TN 2025 IT மாநாடு
Tamil Nadu IT Job இளைஞர்களுக்கான புதிய IT வேலைவாய்ப்பு – கோயம்புத்தூர்
IT துறையில் வேலைவாய்ப்பு – உங்கள் கனவு வேலை இன்று தொடங்கலாம்!

IT hub in Coimbatore

மாநில அரசின் முக்கியத் துறைகளில் ஒன்றான செயற்கை நுண்ணறிவுக்கான (AI)  பொது-தனியார் கூட்டாண்மை (Public-Private Partnership) மூலம் 2 மில்லியன் சதுர அடியில் ஐடி இடத்தைக் கோயம்புத்தூரில் தமிழக அரசு உருவாக்கி வருகின்றது என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் வியாழக்கிழமை நடந்த “Day Umagine TN 2025 IT” மாநாட்டில் தொடக்க உரையில் பேசியுள்ளார்.

முதல்வரின் உரையாடல்

முதல்வர் உரையாற்றியபோது, “ஐடி துறையை ஊக்குவிப்பதில் தமிழகம் எப்போதும் முன்னிலையில்தான் இருக்கின்றது. AI, blockchain, IoT மற்றும் எலக்ட்ரிக் வெஹிகிள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை முன்னேற்றுவதற்கு மாநில அரசு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து உலகளாவிய திறன் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகம் மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

வணிகம் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் எப்போதும் மற்றவர்களை விட ஒரு படி மேலேதான் நாம் இருக்கின்றோம்.

தொழில் வளர்ச்சியை ஒரே தலைநகரில் மட்டும் குவிக்கக் கூடாது. உண்மையான வளர்ச்சி என்பது விரிவானதாகவும், சீரானதாகவும் இருப்பது அவசியமாகும்.

இதனால்தான் சென்னை அல்லாது பிற நகரங்களில் உள்ள இளைஞர்களுக்கும் அவர்களின் வட்டாரத்தில் வேலை வாய்ப்புக்கான முன்னேற்றங்களைத் தமிழக அரசு உருவாக்கி வருகின்றது.

1999-ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி சென்னையில் “டைடல் பூங்காவை” அமைத்தார். இன்றைய அரசாங்கம் அடுத்தக் கட்டத்தை நோக்கிச் செல்கின்றது.

இப்போது கோயம்புத்தூர், சேலம், மதுரை, ஓசூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் போன்ற, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் எல்காட் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் மினி தொழில்நுட்பப் பூங்காக்களை நிறுவியுள்ளது.

பெண்கள் காப்பீட்டுத் திட்டம் – 5 கோடி வரை காப்பீடு! பெண்கள் காப்பீட்டுத் திட்டம் - Udyam Bima Policy மூலம் upto 5 crore insurance பெறும் திட்டம்

இன்றைய காலகட்டம் டிஜிட்டல் யுகமாக இருப்பதால் இனிமேல் அனைத்து மக்களுக்கும் டிஜிட்டல் நடைமுறைகள் எளிமையாகவும், அனைவருக்கும் கிடைக்கும் வகையிலும் இருக்க வேண்டும்.

அதே சமயத்தில், டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து அதன் பாதுகாப்பில் முக்கியத்துவத்தைத் தர வேண்டும்.

அதற்கேற்ப தொழில்நுட்பங்களை வடிவமைத்து வலுப்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தொழில்நுட்பத் துறை அமைச்சரின் உரையாடல்

“உலகம் முழுவதிலும் உள்ள மனித வளத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்பதே முதல்வர் மு. க. ஸ்டாலினின் கனவாகும்.

அரசின் “நான் முதல்வன்” திட்டத்தால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்” என்று மாநிலத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றியுள்ளார்.

“போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – இரட்டிப்பு லாபம்!” போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் – Double Profit Investment Scheme

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Massive IT Hub in Coimbatore:
    The Tamil Nadu government is developing a 2 million sq. ft. IT space in Coimbatore under a Public-Private Partnership (PPP) model focused on AI innovation.
  • Chief Minister’s Vision:
    CM M.K. Stalin emphasized Tamil Nadu’s leadership in emerging technologies like AI, blockchain, IoT, and EVs at the “Day Umagine TN 2025 IT” conference.
  • Balanced Growth Beyond Chennai:
    The government aims to decentralize development by creating tech parks in tier-2 and tier-3 cities like Salem, Madurai, Hosur, and Tirunelveli.
  • Digital Access for All:
    A strong push for making digital services accessible to every citizen, along with a priority on cybersecurity and responsible tech development.
  • Youth Empowerment Through ‘Naan Mudhalvan’:
    Thousands of students benefit from this flagship program aimed at skill development and employment readiness in the tech industry.

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *