“iPhone 16 Plus vs OnePlus 13” – எது சிறந்தது?

iPhone 16 Plus மற்றும் OnePlus 13 phone comparison – Best flagship 2025

iPhone 16 Plus vs OnePlus 13 : இன்றைய ஸ்மார்ட் ஃபோன் உலகில் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப நவீன தொழில்நுட்பங்களுடன் புதிய மாடல் மொபைல் ஃபோன்கள் வந்து கொண்டு இருக்கின்றன. தற்போது வந்திருக்கும் “iPhone 16 Plus மற்றும் OnePlus 13” ஆகிய பிரீமியம் ஸ்மார்ட் ஃபோன்கள் பலரின் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

ஆப்பிளின் பெயருக்கு ஏற்ப iPhone 16 Plus தரம் மற்றும் மென்மையான செயல்பாட்டை வழங்கும். அதே நேரத்தில், ஆண்ட்ராய்டு மொபைலான OnePlus 13 ஸ்மார்ட் ஃபோன்களில் நவீன கேமரா தொழில்நுட்பமும், அதிக செயல்திறனுடனும் இருக்கின்றது.

இந்த 2 வகை ஸ்மார்ட் ஃபோன்களும் பல அப்டேட்களுடன் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், எதைத் தேர்வு செய்வது என்பது மக்களுக்கு சற்று சிக்கலான காரியமாகத்தான் இருக்கும்.

ஏனென்றால், பொதுவாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கும்போது அதைக் குறைந்தபட்சம் 1 வருட காலமாவது வைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நினைப்பது வழக்கம்.

அதனால், மொபைல் ஃபோன்கள் வாங்குவதற்கு முன்பு சற்று யோசித்துதான் வாங்க வேண்டும். இந்தப் பதிவில் iPhone 16 Plus மற்றும் OnePlus 13 ஆகிய இரு ஃபோன்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், எது சிறந்த தேர்வு என்பது பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

  • தோற்றம் மற்றும் வடிவமைப்பு
  • டிஸ்ப்ளே
  • கேமரா
  • செயல்திறன் மற்றும் பேட்டரி
  • முடிவு

iPhone 16 Plus vs OnePlus 13

1) தோற்றம் மற்றும் வடிவமைப்பு

 iPhone 16 Plus

Apple iPhone 16 Plus official design front and back – 2025 model
iPhone 16 Plus – 2025 model with sleek design & advanced camera setup

இது மென்மையான அழகிய வடிவமைப்பில் இருக்கும். இந்த ஃபோனின் பின்புறம் Frosted glass இருப்பதால் பிடிப்பதற்கு மிருதுவாக இருக்கும். மேலும், இது மெல்லிய வடிவமைப்பில் இருப்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

OnePlus 13

OnePlus 13 official 2025 design with curved display and Hasselblad camera
OnePlus 13 – curved edge AMOLED display with premium build quality

இந்த ஃபோனின் பின்புறம் Faux vegan leather இருப்பதால் இது தனித்துவமான தன்மையைக் காட்டுகிறது. மேலும், இதில் “வாட்டர் ப்ரூப் ஃபெசிலிட்டி” இருப்பதால் இது IP69 சான்றிதழைப் பெற்றுள்ளது.

2) டிஸ்ப்ளே

iPhone 16 Plus:

இதில் 6.7 இன்ச் OLED திரை உள்ளது. ஆனால், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மட்டுமே உள்ளது. இதில் Always-On Display வசதி இருக்காது. மேலும், வீடியோக்கள் மற்றும் படங்களை சிறந்த நுட்பங்களுடன் பார்க்க முடியும்.

OnePlus 13:

இதில் 6.82 இன்ச் AMOLED திரை மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. ஸ்க்ரோல் மற்றும் விளையாட்டுகள் விளையாடுவதில் இது மிகச் சீரான அனுபவத்தை வழங்குகிறது. மேலும், இதில் Always-On Display உள்ளது.

OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்! OPPO K13 5G வெளியீடு 2025 | New Oppo Smartphone Launch with Stunning Design and Features
3) கேமரா

iPhone 16 Plus:

இதில் 48MP முதன்மை கேமரா + 12MP அல்ட்ராவைட் கேமரா வசதி உள்ளது. மேலும், வீடியோ எடுப்பில் iPhone கிளாரிட்டியாகவே இருக்கும்.

OnePlus 13:

இதில் 50MP முதன்மை கேமரா + 50MP அல்ட்ராவைட் + 50MP ஜூம் லென்ஸ் (3x ஒப்டிகல் ஜூம்) வசதி உள்ளது. இது படமெடுப்பில் பலவிதமான விருப்பங்களை வழங்குகின்றது.

4) செயல்திறன் மற்றும் பேட்டரி

iPhone 16 Plus:

இதில் A18 சிப்செட் இருப்பதால் மிகச் சீரான செயல்திறனை வழங்குகின்றது. இதன் பேட்டரி ஆயுள் நன்றாக இருந்தாலும், சார்ஜ் செய்யும் வேகம் குறைவாக உள்ளது.

OnePlus 13:

இதில் Snapdragon 8 Elite சிப்செட் இருப்பதால், வேகமான செயல்திறனுடனும், மிகவும் சக்திவாய்ந்ததாகவும் இருக்கும்.

மேலும், இதில் 6,000mAh பேட்டரி இருப்பதால் ஒரே நாளில் அதிக பயன்பாட்டை எளிதாக சமாளிக்கும். அது மட்டுமில்லாமல், சில நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்கை வழங்கும்.

2025 AI தொழில்நுட்பம் – மனித வாழ்க்கை புதிய வளர்ச்சி! 2025 AI தொழில்நுட்ப வளர்ச்சி – Impact of AI on Human Life
முடிவு

Android vs iOS என்று வரும்போது எது சிறந்தது என்று தெளிவாகச் சொல்ல முடியாது. ஏனென்றால், 2 வகைகளிலும் தனித்துவமான ஃபீச்சர்ஸ்கள் உள்ளன.

அதே நேரத்தில், இதைத் தேர்ந்தெடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்ததாகும். அதிக ஆற்றல், பேட்டரி ஆயுளை விரும்பினால் OnePlus 13-ஐத் தேர்வு செய்து கொள்ளலாம்.

அதே சமயம், iPhone அனுபவத்தை விரும்புவோர் iPhone 16 Plus-ஐத் தேர்ந்தெடுக்கலாம்.

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • iPhone 16 Plus features a premium flat-edge design, A18 Bionic chip, and an advanced dual/triple camera system with deep iOS integration.
  • OnePlus 13 comes with a curved AMOLED display, Snapdragon 8 Gen 4 processor, and Hasselblad-tuned camera setup for enhanced photography.
  • iPhone 16 Plus excels in software updates, ecosystem connectivity, and long-term reliability.
  • OnePlus 13 offers faster charging, high refresh rate display, and more customization with OxygenOS.

OnePlus 13 offical website – Click here..

iPhone 16 Plus – Click here..

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Releated Posts

BSNL ₹999 5G AirFiber – 100Mbps சிம் இல்லா இணைய சேவை அறிமுகம்!

BSNL ₹999 5G AirFiber : பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், தனது குவாண்டம் 5ஜி (Quantum 5G – Q-5G) சேவையை ஹைதராபாத்தில் (Hyderabad)…

ByByAmirthavarshini RJun 24, 2025

Poco F7 வெளியீடு 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!

Poco F7 : Poco நிறுவனம், தங்களின் புதிய ஸ்மார்ட்போனான Poco F7 இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவித்துள்ளது. இது போக்கோ F-சீரிஸ்…

ByByAmirthavarshini RJun 21, 2025

Vivo Y400 Pro 5G வெளியீடு – விலை மற்றும் அம்சங்கள்!

Vivo Y400 Pro 5G இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. Vivo நிறுவனம் தனது X சமூக வலைத்தளம் வழியாக இதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்,…

ByByVignesh MJun 13, 2025

Vivo Y19s Pro Launch 2025 – விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

Vivo Y19s Pro Launch : Vivo நிறுவனம் தனது புதிய 4G ஸ்மார்ட்போன் Vivo Y19s Pro மாடலை சில சர்வதேச சந்தைகளில்…

ByByAmirthavarshini RJun 4, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *