• Home
  • வணிகம்
  • இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா?

இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா?

இந்திய பொருளாதாரம் 2025 – Indian Economy Future Growth

டிசம்பர் 30, 2024 அன்று நிதி அமைச்சகத்துடன் நடைபெற்ற பட்ஜெட்டிற்கான முன் ஆலோசனையின் போது, இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா? என்ற விவாதம் நடந்துள்ளது. நடுத்தர குடும்பத்தினர் தங்களது வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை அதிகரிப்பதற்காக தனிநபர் மீதான வருமான வரி விகிதங்களைக் குறைத்தல், எரிபொருள் மீதான கலால் வரியைக் குறைத்தல், நாட்டில் வேலை வாய்ப்பு மிகுந்த துறைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொழில்துறை அமைப்புகள் வலியுறுத்தி இருக்கின்றன. அது மட்டுமில்லாமல், MSME எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா?

இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா – Growth Chart Analysis 2025
அதிகரிக்கும் பொருளாதாரம் – வளர்ச்சி வரைபடம் மற்றும் விபரம்

துறைமுகங்களில் ஏற்படும் பிரச்சனைகள்: 

இந்தியாவின் துறைமுகங்களில் ஏற்படும் நெரிசல் காரணமாக பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் தாமதம் ஏற்படுகின்றது, இதனால், உற்பத்தி செயல்முறைகள் பாதிக்கப்பட்டு பொருட்களின் விலையும் உயர்கின்றது. மேலும், சுங்க அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் துறைமுகங்களில் பொருட்கள் நீண்ட நேரம் தங்கி இருக்கும் நிலை ஏற்படுகின்றது. இதனால் பொருட்களின் சேதம், களவாடல் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் இறக்குமதி கிட்டத்தட்ட 70 பில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. இது பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறையை 37.8 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளது. ஐரோப்பிய சந்தைக்கு ஏற்கனவே ஏற்றுமதி குறைந்து வரும் நிலையில், சீனாவால் பொருட்கள் கொடுக்கப்படும் என்ற அச்சம் நிலவியுள்ளது. 

இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க CII-யின் கருத்து

CII-யின் தலைவரான சஞ்சீவ் பூரி கூட்டத்தில் பங்கேற்ற போது, இந்திய பொருளாதாரம் நன்றாக செயல்படுகிறது என்றாலும் உலகளாவிய சவால்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்ற பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அவர், “இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் சீனாவால் பல பொருட்கள் இழுத்து விடப்படுகின்றது. இது அவசர நிலை, உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து போன்றவற்றைப் பாதிக்கின்றது. அது மட்டுமில்லாமல், இது பணவீகத்தையும் அதிகரிக்கின்றது.

இந்த சூழலில் இது குறித்து நாங்கள் பல பரிந்துரைகளை வழங்கியுள்ளோம். பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரியைக் குறைப்பதன் மூலம் நுகர்வோரின் கைகளில் அதிகம் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அளிக்கும்” என்று சஞ்சீவ் பூரி கூறியுள்ளார். மேலும், நுகர்வை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 20 லட்சம் வருமானத்திற்கு வரி விகிதங்களை சரி செய்தல் போன்ற நடவடிக்கைகள் தேவை என்றும், இது நுகர்வோரின் வருமானத்தை மேம்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

சுங்க வரி:

மூன்றடுக்கு சுங்க வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்று CII பரிந்துரைத்துள்ளது. இதில் உள்ளீடுகள் மீதான குறைந்த வரி, இடைநிலைப் பொருட்கள் மீதான அதிக வரி மற்றும் இறுதிப் பொருட்கள் மீதான அதிக வரி விதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

FICCI-யின் கருத்து:

BIS சான்றிதழுக்கான செயல்முறைகள் சிக்கலான செயல்முறையாகவும், நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. இதனால், இறக்குமதி செய்யப்படக்கூடிய பொருட்கள் வருவதற்குத் தாமதங்கள் ஏற்படுகின்றன. இந்த செயல்முறையை எளிமைப்படுத்த பிற நாடுகளுடன் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்று FICCI வலியுறுத்தியுள்ளது.

MSME-க்குக் கடன் அளித்தல்:

MSME-கள் கடன் பெறுவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. வங்கிகள் பெரும்பாலும் தனிப்பட்ட சொத்து விவரங்களைக் கேட்பதாகவும், அதிக வட்டி விகிதங்களை வசூலிப்பதாகவும் கூறியுள்ளது.

இதனால் இந்தியாவின் சிறுதொழில் துறையின் வளர்ச்சிகள் பாதிக்கப்படுகின்றது.

MSME-க்குக் கடன் வழங்குவதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரத் தரம் அதிகரிக்கும் என்று “அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி ஆப் இந்தியா(ASSOCHAM)” அமைப்பு கூறியுள்ளது.

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Experts analyze GDP, financial stability & future expectations.
  • Can India’s economy improve? This is a key question in 2025.
  • Pre-budget discussions highlight economic growth strategies.
  • Government reforms & investment plans play a crucial role.

அதிகாரப்பூர்வ தகவல் (Official Source) – இந்திய அரசின் பொருளாதார அறிக்கைகள்.

தொழில்துறை பகுப்பாய்வு (Industry Insights) – இந்திய வளர்ச்சி மற்றும் ஜிடிபி பற்றிய ஆய்வுகள்.

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox  

Releated Posts

SSC CHSL 2025 பதிவு தொடங்கியது – விண்ணப்பிக்கக் கடைசி தேதி இதோ

SSC CHSL 2025: மத்திய அரசின் கீழ் உள்ள பல பிரிவுகளில் கீழ்நிலை அலுவலகத் தேர்வான SSC CHSL 2025-க்கான ஆன்லைன் பதிவு தொடங்கிவிட்டது.…

ByByVignesh MJun 25, 2025

PM-Kisan பயனாளிகள் பட்டியல் 2025 – உங்கள் பெயர் உள்ளதா?

PM-Kisan 2025 : பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-KISAN) யோஜனா என்பது இந்திய அரசின் ஒரு முக்கியத் திட்டமாகும். இது தகுதியான…

ByByVignesh MJun 23, 2025

ITR ஆன்லைனில் தாக்கல் செய்வது எப்படி? Easy Step-by-Step Guide!

ITR : வருமான வரி தாக்கல் செய்வது என்பது இனி கடினமான பணியாக இருக்காது. ஏனென்றால், நீங்கள் ஒரு சம்பளதாரர் மற்றும் எளிய நிதி…

ByByVignesh MJun 22, 2025

ரூ.3,000-க்கு FASTag Annual Pass – செயல்படுத்துவது எப்படி?

FASTag Annual Pass : மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, FASTag பயன்பாட்டாளர்களுக்கு ஒரு புதிய வசதியை…

ByByAmirthavarshini RJun 22, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *