IBPS Recruitment 2025 : 10000 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போ?

IBPS Recruitment 2025 - 10,000 காலியிடங்கள், விண்ணப்பிக்க Last Date details in Tamil Nadu!

இந்திய அரசு பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் (IBPS Recruitment) வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 10,277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழ்நாட்டிற்கு 894 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த வேலைக்குத் தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு முறைகள், சம்பளம், மற்றும் முக்கியமான தேதிகள் பற்றிய விவரங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.

IBPS பணிக்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு

இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், கணினி அறிவு கட்டாயம். அதற்கான சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அவசியம்.

விண்ணப்பதாரர்களின் வயது 01.08.2025 அன்று 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டியல் சாதி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகள், பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் சலுகை உண்டு.

Read also : SBI Bank Jobs – ரூ.46,000 சம்பளம்! 6589 காலியிடங்கள் SBI Bank Jobs 2025 - ரூ.46,000 சம்பளம், 6589 Vacancies, Clerk & Junior Associate Recruitment Details

தேர்வு முறை மற்றும் சம்பளம்

இந்த வேலைக்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும். முதலில் முதல்நிலைத் தேர்வு (Preliminary) 100 மதிப்பெண்களுக்கு ஆங்கிலம், திறனறிதல் மற்றும் கணிதம் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வு (Main) எழுதலாம். முதன்மைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், திறனறிதல், கணிதம், பொது மற்றும் நிதி அறிவு ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆரம்ப சம்பளம் சுமார் ரூ. 24,050 ஆக இருக்கும். அனுபவத்தின் அடிப்படையில் ரூ. 64,480 வரை உயரலாம்.

விண்ணப்ப விவரங்கள்

ஆர்வமுள்ளவர்கள் IBPSன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 850.

SC/ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 175. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 21, 2025 ஆகும். முதல்நிலைத் தேர்வு அக்டோபர் மாதத்திலும், முதன்மைத் தேர்வு நவம்பர் மாதத்திலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ தளம் : Click here…

சாணக்கிய நீதி

சாணக்கியர் கூறிய வாழ்க்கை நெறிகள் - Chanakya Needhi Quotes in Tamil

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!

எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!

Key Insights & Best Takeaways

This IBPS Clerk recruitment drive offers a significant opportunity with 10,277 vacancies nationwide, including 894 for Tamil Nadu. The eligibility criteria require a bachelor’s degree with computer literacy, and candidates must be between 20 and 28 years old, with age relaxations for reserved categories. The selection process involves a two-stage online examination (Preliminary and Main), and the salary ranges from ₹24,050 to ₹64,480. Interested candidates must apply online through the official website by the August 21, 2025 deadline.

Read also : 60000 சம்பளம்; மத்திய அரசு வேலை, டிகிரி போதும்! மத்திய அரசு வேலை : 60,000 சம்பளம் - டிகிரி போதும், Latest Government Vacancy in India!

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top