குடிநீர் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது. நம் உடலின் பெரும் பகுதியை நிரப்பும் சுத்தமான குடிநீர் இன்றியமையாததாகும். பரபரப்பான உலகில் நாம் குடிநீரைச் சேமிக்கும் பாட்டில்களும், அவற்றைப் பயன்படுத்தும் காலமும் கிருமித் தொற்றைத் தவிர்க்க மிக முக்கியமாக உள்ளது. அசுத்தமற்ற நீரைப் பாதுகாக்க சரியான சேமிப்பு முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
குடிநீர் பாதுகாப்பு

குளிர்ச்சியான இடம்
- பொதுவாக, நல்ல குடிநீர் என்றால் அதற்கு ஒரு தரம் இருக்கிறது. அதிக வெப்பம் உள்ள இடத்தில் இருக்கும் குடிநீரில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு இருக்கிறது.
- அதுவே, நேராக சூரிய ஒளி படரும் இடத்தில் இருக்கும் குடிநீரில் பாசி படரவும் வாய்ப்பு இருக்கிறது.
- ஆனால், குளிர்ச்சியான இடத்தில் குடிநீர் வைக்கப்பட்டால் அதில் பாசிகள் வளர வாய்ப்பு குறைவாக இருக்கும்.
பாத்திரத்தில் வைக்கப்படும் குடிநீர்
- வீட்டில் ஒரு சாதாரண இடத்தில் குடிநீரைப் பாத்திரத்தில் வைத்துள்ளோம் என்றால், ஓரிரு நாட்களில் அதைக் காலி செய்து விடுவது நல்லதாகும்.
- அதைப் போல் வீட்டு ஃபிரிட்ஜில் வைக்கப்படும் நீரை ஒரு நான்கைந்து நாட்களில் பயன்படுத்தி விடுவது நல்லது.
- குடிநீர் வைத்திருக்கும் பாத்திரத்தை நன்றாக மூடி வைக்க வேண்டும். இல்லையென்றால் ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவுப்பொருட்கள் மூலம் பாத்திரத்தில் பூஞ்சைக் காளான் வளர வாய்ப்பு இருக்கிறது.
- அதிக நாட்களுக்குக் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என்று விரும்பினால், நன்றாக மூடப்பட்ட பெரிய பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும்.
- அத்தோடு, இந்தப் பாத்திரங்கள் குளிர்ந்த மற்றும் இருட்டான பகுதியில்தான் பாதுகாக்கப்பட வேண்டும்.
Latest Tamil Health Tips (23.12.2025)
| தலைப்பு | முழு விவரம் |
|---|---|
| மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்! | Click here… |
| உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள் | Click here… |
| 6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி! | Click here… |
| முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்! | Click here… |
சூரிய ஒளி
- சூரிய ஒளி நேராகப் படும் இடத்தில் குடிநீரை வைக்கக் கூடாது. அதே சமயத்தில், வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்திலும் வைக்கக் கூடாது.
- அப்போதுதான் நுண்ணுயிர்க் கிருமிகள் குடிநீரில் வளராமல் இருக்கும்.
அதிகாரப்பூர்வ குடிநீர் பாதுகாப்பு இணையதளம் இந்தியா - Click here..
பிளாஸ்டிக் பாட்டில்கள்
- பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கேன்களில் வைக்கப்படும் குடிநீரை வெப்பத்திலோ, சூரிய வெளிச்சத்திலோ அதிக நேரம் வைக்கும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள கண்ணுக்குத் தெரியாத ரசாயனப் பொருட்கள் சிதைந்து குடிநீரில் கலக்கும் வாய்ப்பு இருக்கிறது.
- அதனால், உயர்தரமான பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கேன்களில் தண்ணீரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லதாகும்.
குடிநீர் பாதுகாப்பு – வெப்ப சூழ்நிலை
- நீரை எத்தனை நாட்கள் சேமித்து வைத்துப் பருகலாம் : நம்முடைய வீட்டின் வெப்ப சூழ்நிலையில் 1 அல்லது 2 நாட்களுக்கு மட்டுமே குடிநீரைச் சேமித்து வைக்க முடியும்.
- அதற்கு மேல் குடிப்பது ஆரோக்கியமாக இருக்காது.
- பாட்டிலைத் திறந்து வைத்தால், அந்தத் தண்ணீர் நமது வீட்டில் இருக்கும் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை இழுத்துக்கொள்ளும். அதனால், குடிநீரின் சுவை மாறிவிடும்.
இந்தப் பதிவில்,
குடிநீர் பாதுகாப்பு – FAQs
1) குடிநீரை வீட்டில் எத்தனை நாட்களுக்குச் சேமித்து வைக்கலாம்?
ஓரிரு நாட்களில் அதைக் காலி செய்வது அல்லது பயன்படுத்தி விடுவது நல்லது.
2) ஃப்ரிட்ஜில் உள்ள குடிநீரை எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்?
ஃப்ரிட்ஜில் வைக்கப்படும் நீரை நான்கைந்து நாட்களில் பயன்படுத்தி விடுவது நல்லது.
3) குடிநீரை ஏன் அதிக வெப்பம் அல்லது சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கக் கூடாது?
அதிக வெப்பத்தில் பாக்டீரியாக்களும் , சூரிய ஒளியில் பாசியும் வளர வாய்ப்பு உள்ளது.
Key Insights & Best Takeaways!
- How long can you store drinking water safely?
- Best water storage methods for purity & health
- Safe drinking water tips & expert advice
- How to prevent contamination in stored water?
- Importance of clean water storage for health
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox











