Goji Berries Natural Antibiotic in Tamil
Goji Berries in Tamil : இன்றைய காலகட்டத்தில் மக்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பல தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. மக்களுக்குப் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த வகை ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது விஞ்ஞானிகள் பசுமையான சுற்றுச்சூழலை ஆதரிக்கும் வகையில் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பதிவில்,
விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இயற்கை முறை நுண்ணுயிரி நாசினி!
(Goji Berries Natural Antibiotic) கோஜி பழங்களைப் (Goji Berries) பயன்படுத்தி நுண்ணுயிரி நாசினி வெள்ளி நானோகணுக்களைத் (Silver Nanoparticles) தயாரிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர்.
கண்டுபிடிப்பின் நோக்கம்?
Goji Berries in Tamil

கோஜி பழங்கள் ஒரு “சூப்பர் உணவு” (Superfood) என்று கூறப்படுகின்றது. ஏனென்றால், அவை உடலுக்குப் பல நன்மைகளை அளித்து வருகின்றன. இதில் இயற்கையாகவே நுண்ணுயிரி எதிர்ப்புப் பண்புகள் இருக்கின்றன. அதனால் இதைப் பயன்படுத்தி மருந்து மற்றும் சுகாதாரத் துறையில் பயன்படும் “நுண்ணுயிரி நாசினி நானோகணுக்களைப்”பசுமையான முறையில் உருவாக்கும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சி நடந்த இடம் மற்றும் அதன் முக்கியத்துவம்?
இந்த ஆராய்ச்சி ரோம் நகரின் சபியன்சா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கம்ரான் ஆலமுடன் (Kamran Alam) பாகிஸ்தானின் NED University & சவுதி அரேபியாவின் King Saud University, விஞ்ஞானிகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்தப் புதிய முறைமருந்து தயாரிப்பில் பயன்படும் ரசாயன முறைகளுக்கு ஒரு பசுமையான மாற்று வழியாக இருக்கும். மேலும், இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பைக் குறைப்பது மட்டுமில்லாமல், கோஜிபழத்தின் இயற்கையான நன்மைகளை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் உதவியாக இருக்கும்.
வெள்ளி நானோகணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றது?
“வெள்ளி நானோகணுக்கள் பாக்டீரியாக்களின் செல்களில் மறைக்கப்பட்ட அமைப்புகளை சேதப்படுத்தி Reactive Oxygen Species-ஐ உருவாக்குகின்றது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியைத்தடுக்க உதவுகின்றது” என்று கம்ரான் ஆலம் கூறியுள்ளார்.
Goji Berries in Tamil – பசுமையான தயாரிப்பு முறை
வெள்ளி நானோகணுக்களைப் பல ரசாயன முறைகளைக் கொண்டு உருவாக்க முடியும். ஆனால், தற்போது பசுமையான முறையில் தயாரிப்பதை விஞ்ஞானிகள் முக்கியமாகப் பார்க்கின்றனர். இதன் மூலம் விஷமில்லாத சுற்றுச்சூழலை உருவாக்க முடியும். மேலும், இது மனிதர்களின் உடலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். அது மட்டுமில்லாமல், அதிக ஆற்றலை இதன் மூலமாக சேமிக்க முடியும்.
கோஜி பழங்கள் எளிதாகக் கிடைக்கக்கூடியவை. மேலும், இதில் Bioactive Compounds அதிகமாக உள்ளன.
அது மட்டுமில்லாமல், இயற்கையாகவே குறைக்கும் (Reducing agent) மற்றும் நிலைப்படுத்தும் (Stabilizing agent) பொருட்களை இந்தப் பழங்கள் கொண்டுள்ளதால் தனியாக வேறு ரசாயனங்களை சேர்க்கத் தேவையில்லை.
நானோகணுக்கள் தயாரிக்கும் முறை
கோஜி பழங்களைப் பயன்படுத்தி வெள்ளி நானோகணுக்களைத் தயாரிக்கப் பழங்கள் உலர்த்தப்பட்டு, பொடியாக்கப்பட்டு, சாறு எடுக்கப்படுகின்றது.
சிறந்த ரோபோக்கள் 2024 – மனிதர்களை மிஞ்சும் AI
மேலும், இதில் வெள்ளிநைட்ரேட் (Silver Nitrate – AgNO3) சேர்க்கப்பட்டு, இந்தக் கலவை குறைக்கப்படுவதன் மூலம் நானோகணுக்கள் உருவாகின்றன.
நானோகணுக்களின் சோதனை
X-ray Diffraction, UV-Vis Spectroscopy, மற்றும் FT-IR Spectroscopy போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெள்ளி நாணோக்கனுக்கள் உருவாகியிருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், நானோகணுக்களை மைக்ரோஸ்கோப் மூலம் பார்வையிட்டனர். அது மட்டுமில்லாமல், “Staphylococcus aureus” என்ற கிராம் பாசிட்டிவ் பாக்டீரியா மீது நானோகணுக்களை செலுத்தி நுண்ணுயிரி நாசினியின் செயல்திறனை சோதித்தனர்.
எதிர்கால பயன்பாடுகள்
எதிர்காலத்தில் இந்த நானோகணுக்களின் செல்லுலார் டாக்ஸிசிட்டி (Cellular Toxicity) மற்றும் பயோ காம்பேக்ட்பிலிட்டி (Biocompatibility) பற்றிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு முக்கியப் பங்களிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்!
Key Insights & Best Takeaways:
- Goji berries are a rich source of antioxidants, vitamins, and minerals, offering numerous health benefits.
- Regular consumption of goji berries can boost immunity, improve skin health, and support eye health.
- This powerful fruit is known for its anti-aging properties and its role in improving overall wellness.
- Goji berries are also linked to improved blood sugar levels and may help in weight management.
மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox