சிறந்த Face Mask டிப்ஸ் : முகங்களை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்குப் பல்வேறு வகையான முறைகளைப் பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் ஒன்றுதான் சருமத்திற்குப் போடும் “ஷீட் மாஸ்க்”. இந்த ஷீட் மாஸ்க்-கள் முகத்திற்குத் தேவையான ஹைட்றேசனைக் (Hydration) கொடுப்பது மட்டுமில்லாமல், சருமத்தில் இருக்கும் வயதான அறிகுறிகளைப் போக்கி மென்மையாக்கும். அது மட்டுமில்லாமல், இது 15 நிமிடங்களில் சருமத்தில் இருக்கும் பிரேக்அவுட்களைக் (முகப்பருக்கள், கருநிற தழும்புகள், வெண்நிற தழும்புகள் அல்லது சின்ன சின்ன அரிப்புகள்) குறைக்க உதவுகிறது.
சிறந்த Face Mask டிப்ஸ்

ஷீட் மாஸ்க்-கைத் தேர்ந்தெடுப்பதற்கான சில டிப்ஸ்
ஷீட் மாஸ்க் முகத்திற்குப் பல நன்மைகளைத் தந்தாலும், இது ஒரே மாதிரியாக உருவாக்கப்படுவதில்லை. ஷீட் மாஸ்க் ஒவ்வொரு முக சருமத்திற்கும் ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. ஷீட் மாஸ்க்-களில் உங்களின் சருமத்திற்கேற்ற பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்பவற்றைக் கவனித்து வாங்க வேண்டும். இந்த விவரத்தைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கு ஏற்ற சரியான ஷீட் மாஸ்க்-களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் வசதியாக இருக்கும். இந்தப் பதிவில் சரும வகைகள் பற்றியும், அவற்றிற்கான மாஸ்க்-கள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.
வறண்ட சருமம்
சருமத்தில் தேவையான ஈரப்பதம் இல்லாததால் வறண்ட சருமம் ஏற்படும். இதன் காரணமாக சருமம் அடர்த்தியாகக் காணப்படும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் “ஹைலூரோனிக் ஆசிட் (Hyaluronic acid) மற்றும் கிளிசரின் (Glycerin)” கொண்ட Face Mask-கைப் பயன்படுத்தலாம்.
- இதில் இயற்கையான ஈரப்பதத்தின் பண்பு உள்ளது.
- இதனால், உங்களின் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும்.
Goji Berries in Tamil – மருத்துவ உலகில் ஏற்படும் அற்புதம்!
கிளிசரின் (Glycerin)
- இது மிகுந்த ஈரப்பதம் உடைய பராமரிப்புப் பொருளாகும்.
- இது சருமத்தில் இருக்கும் நீர்ச்சத்தை பாதுகாக்கிறது.
வறண்ட சருமத்திற்காக ஹைலூரோனிக் ஆசிட் மற்றும் கிளிசரின் கொண்ட Face Mask-க்குகளை வாரம் 2-3 முறை பயன்படுத்தினால், உங்களின் சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எண்ணெய்ப் பசை சருமம்
முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் “எண்ணெய்ப் பசை நிறைந்த சருமம்” (Oily skin) என்று கூறுவர். இதை சரி செய்வதற்கு “சார்கோல் மாஸ்க்-கள் மற்றும் கிளே மாஸ்க்-களைப்” பயன்படுத்தலாம்.
சார்கோல் மாஸ்க் (Charcoal Mask)
- சார்கோல் ஒரு இயற்கையான “அப்சார்பன்ட்” (Absorbent) பொருளாகும்.
- இது சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெயை எடுத்துக்கொண்டு, முகத்தை சீராக மாற்ற உதவுகிறது.
- இது முகத்திற்குக் குளிர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
- இது முகத்தில் உள்ள துளைகளில் (Pores) இருக்கும் அழுக்கு, மாசு மற்றும் எண்ணெயை உறிஞ்சுகிறது.
உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா? சிறந்த வழி-NMES!
கிளே மாஸ்க்-கின் (Clay Mask)
- கிளே மாஸ்க்-கள், எண்ணெயை விரைவாக உறிஞ்சி, சருமத்தைப் பளிச்சென்று காட்டுகிறது.
- இது சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது.
- இது முகத்தின் எண்ணெய்ப் பசையை சமநிலைப்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும் வைக்க உதவுகிறது.
சென்சிடிவ் சருமம்
- உங்களுக்கு மிகவும் சென்சிடிவான சருமம் இருந்தால், கடுமையான பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.
- கற்றாழை, காலண்டுலா (மரிகோல்ட் பூ), கிரீன் டீ, கெமோமில் (மூலிகைச் செடி) கொண்ட ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்த வேண்டும். இது உங்களின் உணர்திறன் (sensitive) கொண்ட சருமத்திற்கு மென்மையை அளிக்கும்.
- அதைப் போல், வாசனைத் திரவியங்கள் கொண்ட ஷீட் மாஸ்க்-களை சருமத்திற்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லதாகும்.
முகப்பரு பாதிப்பு கொண்ட சருமம்
- உங்கள் முகம் முகப்பருக்களால் பாதிக்கப்பட்டிருந்தால், “சாலிசிலிக் ஆசிட் (Salicylic acid) மற்றும் டீ ட்ரீ ஆயிலைக் (Tea Tree)” கொண்ட ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்துவது நல்லதாகும். இந்தப் பொருட்கள் முகத்தில் உள்ள வீக்கத்தைத் தனித்து, சரும வெடிப்புகள் வராமல் தடுக்கின்றன.
- சருமத் துளைகள் அடைபடுவதைத் தடுப்பதற்கு ஹெவியான எண்ணெய்கள் மற்றும் செயற்கை வாசனைத் திரவியங்கள் கொண்ட ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதாகும்.
“கடன் வாங்குவது நல்லது!” – RBI அதிர்ச்சித் தகவல்
இதோ!
- உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான ஷீட் மாஸ்க்-களைத் தேர்வு செய்வதற்கும், சருமத்தில் ஏற்படும் அலர்ஜியைத் தடுப்பதற்கும், சருமத்தில் அல்லது கைகளின் சிறிய பகுதியில் “பேட்ச் டெஸ்ட்” செய்துகொள்வது நல்லதாகும்.
- வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்துவது நல்லது. அதிகமாகப் பயன்படுத்தினால் அதுவே சருமத்தைப் பாதிக்கக்கூடும்.
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com follow செய்யுங்கள்..
எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Quick English Recap – Key Insights & Best Takeaways!
- Choosing the right Face Mask depends on your skin type and specific needs.
- Natural face masks offer the best results for soft and glowing skin.
- Always cleanse your face properly before applying any face mask.
- Regular use of suitable face masks enhances skin brightness and health.
- Consistent skincare routine is key to achieving naturally radiant skin.