“10 லட்சம் கல்விக்கடன் – மத்திய அரசு அறிவிப்பு!”

மத்திய அரசு கல்விக்கடன் அறிவிப்பு – 10 லட்சம் வரை உதவி 2025

மத்திய அரசின் சார்பில் பல திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அரசின் 10 லட்சம் கல்விக்கடன், இது மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாட்டின் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் மற்றும் படிப்பைத் தொடர முடியாமல் தவித்து வரும் மாணவர்கள் சிறந்த உயர்கல்வியைப் பெறும் வகையில் மத்திய அரசு “பிரதான் மந்திரி வித்யாலஷ்மி யோஜனா” என்னும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திட்டத்தைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

10 லட்சம் கல்விக்கடன்

“Govt Education Loan 10 Lakh – Apply Online”

10 லட்சம் கல்விக்கடன் – தகுதி மற்றும் விண்ணப்ப நடவடிக்கைகள் 2025
யார் யார் கல்விக்கடன் பெறலாம்? விண்ணப்பிக்கும் முறைகள் என்ன?

Pradhan Mantri Vidyalakshmi Yojana – 10 லட்சம் கல்விக்கடன்

நம் நாட்டில் பல மாணவர்கள் தங்கள் குடும்பத்தின் பொருளாதாரச் சுமைகளால் தங்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்ற முடியாமல் கல்வியை பாதியில் நிறுத்துவது, தவிர்த்து போன்ற நிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் கல்விக் கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு மாணவர்கள் எளிதாகக் கடன் பெற வழி வகுத்துள்ளது.

அது மட்டுமில்லாமல், நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் (QHEIs) சேர்க்கை பெறும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் கல்விக் கடனைப் பெறலாம். 

QHEIs

“குவாலிட்டி ஹையர் எஜுகேஷன் இன்ஸ்டிடியூஷன்ஸ்” (QHEIs) என்பது நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களாகும். இவை உயர்ந்த கல்வித் தரத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கு மாணவர்கள் சேர்க்கை பெறும் அந்தக் கல்லூரியின் NIRF தரவரிசை 1-200 வரை இருக்க வேண்டும்.

அது மட்டுமில்லாமல், மாநில அளவில் கல்லூரிகளின் தரவரிசை 200குல் இருக்க வேண்டும். மேலும், அந்த கல்வி நிறுவனம் அரசுக்குச் சொந்தமானதாக இருப்பது அவசியமாகும்.

இந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இருந்து உத்தரவாதம் அற்ற கல்விக் கடன்களைப் பெற முடியும்.

திட்டத்திற்கான தகுதி

இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு ஒரு மாணவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சம் அல்லது அதற்குக் குறைவான வருமானமாக இருக்க வேண்டும்.

ரூ. 10 லட்சம் வரையிலான கடனுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 75% கடன் தொகைக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதால், ரூ. 7.5 லட்சம் வரையிலான கடனை மத்திய அரசு சார்பில் பெற முடியும்.

மாணவர்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் கடன்களைப் பெற மத்திய அரசு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

பிரதான் மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா திட்டத்தை ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox  

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Govt-Backed Student Loan: Central government offers up to ₹10 lakh education loan for students.
  • Easy Online Application: Apply for an education loan online with simple steps.
  • Eligibility & Documents: Know the required eligibility criteria and necessary documents.
  • Interest Rates & Repayment: Learn about interest rates, EMI, and repayment options.
  • Best Opportunity for Students: A golden chance to secure financial aid for higher education.

Comment Box

    Scroll to Top