• Home
  • News Box
  • பிரதமர் மோடியை சந்தித்த பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ்!

பிரதமர் மோடியை சந்தித்த பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ்!

தில்ஜித் டோசன்ஜ் பிரதமர் மோடி சந்திப்பு புகைப்படம் – 2025 செய்திகள்
ஏன் இந்த சந்திப்பு?

“பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ் பிரதமர் மோடியை சந்தித்தார். “Famous Singer Diljit Dosanjh Met Prime Minister Modi.”

பிரதமர் நரேந்திர மோடியை, பிரபல பாடகரும், நடிகருமான தில்ஜித் டோசன்ஜைப் புத்தாண்டின் போது டெல்லியில் சந்தித்தார். அந்த சந்திப்பின்போது இருவரும் இசை, கலாச்சாரம் மற்றும் யோகா உட்பட இந்தியாவின் பல பரிமாணங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

இருவரும் தங்களின் X – வலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பாடகர் தில்ஜித் டோசன்ஜ் ?

PM Modi meets singer Diljit Dosanjh – தில்ஜித் பிரதமரை சந்தித்தார்
அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மற்றும் தில்ஜித் டோசன்ஜ் சந்திப்பு காட்சி

“தில்ஜித் டோசன்ஜ்” என்பவர் இந்தியப் பாடகர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் பெரும்பாலும் பஞ்சாபி மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

பஞ்சாபி இசையுலகில் ஒரு பிரபலமான பாடகர் ஆவார். இவர் தன்னுடைய தனித்துவமான குரல் மற்றும் நடிப்புத்திறன் மூலம் மக்களின் மனதைக் கவர்ந்துள்ளார். இவர் பல விருதுகளைக் குவித்துள்ளார்.

இசை சுற்றுப்பயணம்:

தற்போது இந்தியாவில் “தில்-லுமினாட்டி இந்தியா டூர், 2024” என்னும் சுற்றுப்பயணத்தை தில்ஜித் டோசன்ஜ் முடித்துள்ளார்.

இவர் பல்வேறு இடங்களில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளின் போது முக்கியமான சமூகப் பிரச்சனைகளை பற்றியும் பேசுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்! "Successful SIP முதலீடு – Wealth Growth & High Returns"

பிரதமர் பாராட்டு

பிரதமர், தில்ஜித் டோசன்ஜ் உடனான சந்திப்பின் போது, “ஹிந்துஸ்தானில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் இப்போது உலக அளவில் பிரபலமாகியுள்ளார். உங்கள் குடும்பத்தினர் உங்களுக்கு “தில்ஜித்”  என்று பெயரிட்டனர். பெயருக்கு ஏற்ப நீங்கள் மக்களின் இதயங்களை வென்று வருகிறீர்கள்” என்று கூறியுள்ளார். 

இதற்குப் பதிலளித்த தில்ஜித், “நாங்கள் இந்தியா முழுவதும் பயணம் செய்த போது மக்கள் “மேரா பாரத் மகான்” (எனது இந்தியா சிறந்தது) என்று ஏன் சொல்கிறார்கள் என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளேன்” என்று பதிலளித்துள்ளார். இதற்கு, பிரதமர் “இந்தியாவின் பரந்த தன்மைதான் அதன் பலம்” என்று இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பற்றிப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தில்ஜித் டோசன்ஜ் புகழாரம்

பிரதமரின் தனிப்பட்ட பயணத்தைப் பாராட்டிய தில்ஜித், “நான் உங்களின் பல நேர்காணலைப் பார்த்துள்ளேன். “பிரதமர்” பதவி என்பது ஒரு நாட்டில் மிகப்பெரிய பொறுப்பாகும். ஆனால், அதே நேரத்தில் நீங்கள் ஒரு தாய் மீது அன்பு செலுத்தும் மகனாகவும், ஒரு மனிதராகவும் உள்ளீர்கள்.

நீங்கள் தன்னுடைய தாயையும், புனித கங்கையையும் எப்போதும் நினைவில் வைத்திருப்பது என்னுடைய இதயத்தைத் தொட்டுவிட்டது. தன் தனிப்பட்ட வாழ்க்கையையும், பொது வாழ்க்கையையும் சமநிலைப்படுத்திக் கொண்டு வாழ்வது ஒரு அரிய செயலாகும்” என்று பிரதமருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

“காங்கிரஸ் மோசமான அரசியலைச் செய்கிறது – BJP” "காங்கிரஸ் அரசியல் விமர்சனம் – BJP கருத்து | Congress Political Criticism by BJP"

மேலும் தில்ஜித், “இது 2025-க்கான ஒரு அற்புதமான தொடக்கம். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும். இசை உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம்” என்று தன்னுடைய X – பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிரபல பாடகர் தில்ஜித் டோசன்ஜ் பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமரின் X -பதிவு

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள X – பதிவில், ” தில்ஜித் டோசன்ஜுடன் ஒரு சிறந்த சந்திப்பு. அவர் உண்மையிலேயே பன்முகத்தன்மை கொண்டவர்.

மேலும், திறமையையும் பாரம்பரியத்தையும் ஒன்றுசேர கொடுத்து வருகிறார். இசை, கலாச்சாரம் மற்றும் பலவற்றின் மூலம் நாங்கள் இணைந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox  

Key Insights & Best Takeaways!

Diljit Dosanjh Meets PM Modi – Fans React!
Popular singer Diljit Dosanjh met Prime Minister Modi, and the news quickly went viral online. The purpose of the meeting wasn’t revealed, but fans are excited and sharing the photos widely. The moment has sparked discussions across platforms.

Releated Posts

Bank Holidays List February 2025 – முழு விடுமுறை விவரம்!

Bank Holidays List : உங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள் இருக்குதா? அப்போ இதப் பத்தி தெரிஞ்சிக்கோங்க மக்களே! ஏனென்றால், பிப்ரவரி மாதத்தில் பண்டிகைகள்…

ByByTN News BoxJan 25, 2025

முடங்கும் தலைநகரம்! 200 விமானங்கள் தாமதம்?

முடங்கும் தலைநகரம் : டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனி நிலவி வருகின்றது, இதனால் விமானங்கள் மற்றும்…

ByByTN News BoxJan 3, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *