HMPV Virus India
கொரோனாவில் இருந்து தப்பித்து விட்டோம் என்ற பெருமூச்சு விடுவதற்குள் சீனாவின் மற்றொரு வைரஸான “ஹியூமன் மெட்டா நிமோ வைரஸ்” (HMPV) மக்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் வைரஸ் பாதிப்பைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையில், 2 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பதிவில்,
HMPV Virus India பெங்களூரில் HMPV
பெங்களூரில் இன்று 2 குழந்தைகளுக்கு HMPV இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 3 மாதக் குழந்தை மற்றும் கர்நாடகாவில் உள்ள மருத்துவமனையில் குணமடைந்து வரும் 8 மாதக் குழந்தை இவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் பதிவாகியுள்ள முதல் 2 வழக்குகள் ஆகும்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் சமீபத்தில் எந்த வெளிநாட்டுப் பயணங்களும் செய்யவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி

“நாடு முழுவதும் சுவாச நோய்களைக் கண்காணிப்பதற்காக ICMR தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் சுவாசப் பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட வைரஸ் கிருமிகளுக்கான வழக்கமான கண்காணிப்புகள் நடத்தப்பட்டன.
இதன் மூலம் 2 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. HMPV ஏற்கனவே இந்தியா உட்பட உலகளாவிய நாடுகளில் இருக்கின்றது.
மேலும், HMPV-க்கு தொடர்புடைய சுவாச நோயாளர்களின் எண்ணிக்கைகளும் பதிவாகியுள்ளன” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
HMPV என்பது: சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ஒரு வைரஸ் ஆகும்.
இந்த வைரஸ் மூலம் அடிக்கடி சளி, சுவாசப் பிரச்சனை போன்ற அறிகுறிகள் காணப்படும். இது குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. மேலும், இது சுவாசப் பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.
“டயாலிசிஸ் உணவுமுறை 7நாள் வழிகாட்டி”
இந்த வைரஸ் தொற்று பெரும்பாலும் குளிர் காலத்தின் தொடக்கத்தில் பரவத் தொடங்கும் என்று கூறப்பதுகிறது.
கண்காணிப்பதற்கான அமைப்புகள்:
HMPV மற்றும் பிற சுவாசம் சம்பந்தப்பட்ட வைரஸ்களைக் கண்காணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சீனாவில் அதிகரித்த சுவாச நோய்கள் பற்றிய சமீப அறிக்கைகளும் கண்டெடுக்கப்பட்டன.
உலக சுகாதார அமைப்பு(WHO), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(NCDC), தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம்(ICMR) மற்றும் பிற சுகாதார அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஜனவரி 4. 2025 அன்று வைரஸின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக ஒரு கூட்டு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.
HMPV Virus India – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சீனாவில் உள்ள சுவாச நோய்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, HMPV தாக்கத்தைக் கண்காணிப்பதற்கான சுகாதார மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
“10 லட்சம் கல்விக்கடன் – மத்திய அரசு அறிவிப்பு!”
இன்ஃப்ளூயன்ஸா போன்ற பிற சுவாச நோய்களுடன் சந்தேகப்படும்படியாக இருக்கும் நோயாளிகளைத் தனிமைப் படுத்தவும், அவர்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவும் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம்(IHIP) மூலம் ILI மற்றும் SARI ஆகியவை மருத்துவமனைக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
Key Insights & Best Takeaways
The HMPV Virus India 2025 is gaining attention after 2 cases were confirmed, raising serious health concerns across the country. Experts fear this HMPV outbreak could lead to a crisis similar to COVID-19, making it essential to monitor the situation closely. Tracking the HMPV virus in India is crucial for early detection and preventing further spread. As with any virus outbreak, public awareness and timely precautionary steps will be vital to protect communities from this emerging health threat in 2025.