நீங்க சாதாரணமா பேசிக்கொண்டிருக்கும்போதே மளிகை சாமான்களை ஆர்டர் செய்ய முடியுமா? நீங்கள் விரும்பும் பொருட்களை உங்களின் உரையாடலில் இருந்தே அறிந்து கொள்ளும் ஏஐ (AI) உதவியாளர், அப்படி நீங்கள் விரும்பி அதனை வாங்க நினைத்தால், உங்களுக்கு தேவையான பொருளின் விவரங்களை அளித்து, உங்களுக்கு பாதுகாப்பான பணபரிவர்த்தனைக்கும் உதவி செய்யும் புதிய Agentic AI! இந்த அருமையான புதிய செயல்முறை இந்தியாவில் தான் முதலில் அறிமுகமாகியுள்ளது! இந்தியாவின் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமானதிலிருந்து பணபரிவர்தனைகளை சுலபமாக்கி வருகிறது, இப்போது இந்த புதிய பணப் பரிவர்த்தனை விஷயம் இந்தியாவில் ChatGPT UPI Payment Shopping மூலமாக நடக்கத் தொடங்கியுள்ளது! இந்தியாவின் இந்த டிஜிட்டல் அப்டேட் உலகை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவிருக்கிறது.
ChatGPT UPI Payment Shopping – முன்னோட்டத் திட்டம்
இந்தியாவில், இந்த திட்டத்தை நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), நிறுவனமான ரேஸர்பே (Razor pay), மற்றும் ஓப்பன்ஏஐ (Open AI) ஆகிய இரண்டும் இணைந்து, சாட்ஜிபிடி (Chat GPT) மூலம் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஒரு முன்னோட்டத் திட்டத்தை (Pilot Project) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளன. Chat GPT பயன்படுத்தும் பயனர்கள் தாங்கள் விரும்பும் பொருட்களைத் தெரிவித்த உடன் அந்த பொருட்களின் பட்டியலை, Chat GPT வழங்கும், அதற்கான பணத்தைச் Chat GPT உரையாடல் தளத்திலேயே செலுத்தி அதனை பெறமுடியும் என்பதைச் சோதிப்பதே இதன் முக்கிய நோக்கம்.
AI மூலம் வேலை! ஒரே நேரத்தில் 1000 வேலை!
Agentic AI – Chat GPT இனி ஷாப்பிங் உதவியாளர்
‘ஏஜென்டிக் ஏஐ’ இந்தத் திட்டம் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் நோக்கம் என்னவென்றால், ஏஐ மென்பொருள் தனது பயனரின் உரையாடலைப் புரிந்துகொண்டு, குறைந்தபட்ச மனித உதவியுடன் பணிகளைச் செய்யக்கூடிய திறனைக் அடைவது.
ரேஸர்பே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் விளக்கம், இது Chat GPT பயனாளர்களின் ஏஐ உதவியாளர்களைச் சாதாரண தேடல் கருவியிலிருந்து முழுமையான ஷாப்பிங் துணையாக மாற்றியமைக்கும் ஒரு சிறந்த செயல்முறை என்று கூறியுள்ளார். Chat GPTயை பயன்படுத்தும் பயனாளர்கள் அதனுடன் உரையாடுவது மூலமாகவே தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்ய முடியும். உதாரணமாக, “எனக்கு ஸ்கைஷோ (skyshoo) – விலிருந்து ஒரு டாய்ஸ் வேண்டும் என்றால் பயனாளர் அந்த தேவையான பொருட்களை ஆர்டர் செய்ய உதவு” என்று கூறினால், உடனே Agentic AI தாமாகவே அந்த பொருட்களைப் பட்டியலிட்டு உங்களுக்கு வழங்கும், பின் நீங்கள் உறுதிப்படுத்திய பிறகு பணப் பரிவர்த்தனையை நிறைவு செய்யும்.
Reserve Pay அம்சம் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்
இந்தியாவில் தொடங்கிய இந்த முன்னோட்டத் திட்டத்தில் பணம் செலுத்தும் முறைக்கு, யுபிஐ-யின் புதிய அம்சமான ‘ரிசர்வ் பே’ (Reserve Pay) பயன்படுத்தப்படுகிறது. இது பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருட்களை விற்கும் ஒரு குறிப்பிட்ட வியாபாரிக்கு மட்டும் பண பரிவர்த்தனையை மேற்கொள்வதற்காக தங்கள் நிதியின் ஒரு பகுதியை ஒதுக்கி வைக்க உதவுகிறது. இதன் மூலம், பணப் பரிவர்த்தனையில் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடுதல் அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்கிறது. மேலும், பரிவர்த்தனைகள் எப்போதும் பயனரின் ஒப்புதலுக்கு (Approval) பின்னரே உறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
முதல் வணிகர் மற்றும் வங்கிகள்
இந்த முன்னோட்டச் செயல் முறையில் முதல் தளமாக இணைத்துள்ள டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஆன்லைன் மளிகைக் கடையான பிக்பாஸ்கெட் (Big basket) இணைந்துள்ளது. இதனால் டாடா பயனர்கள் Chat GPT உதவியுடன் பிக்பாஸ்கெட்டில் தங்களுக்கு தேவையான பொருட்டாக்களை ஆர்டர் செய்யலாம். இந்தத் திட்டத்திற்கு ஆக்சிஸ் வங்கி (Axis Bank) மற்றும் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) ஆகிய இரண்டு வங்கிகளும் வங்கிப் பங்காளிகளாகச் செயல்படுகின்றன. இந்த முன்னோட்ட திட்டம் வெற்றி அடையும்பட்சத்தில், AI மூலம் இயங்கும் பணப் பரிவர்த்தனைகள் மற்ற துறைகளுக்கும் விரிவடையும், இதனால் இந்தியாவின் டிஜிட்டல் வணிகத்தில் AI நண்பன் Agentic AI – ChatGPT UPI Payment Shopping ஒரு பெரிய புரட்சியை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2025 சிறந்த Budget Smartphones – Top picks under 10,000!
Agentic AI : ChatGPT UPI Payment Shopping – FAQs
AI Shopping என்றால் என்ன?
பதில்: AI Shopping என்பது artificial intelligence உதவியுடன் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கும் system. இதில் ChatGPT போன்ற AI assistant, உங்க தேவையை புரிந்து, product suggest பண்ணி, payment செய்யவும் உதவுகிறது.
Agentic AI : ChatGPT UPI Payment Shopping – எப்படி use பண்ணலாம்?
பதில்: பயனர்கள் ChatGPT chat window-லேயே products search பண்ணி, Reserve Pay UPI மூலம் payment complete பண்ணலாம். இது “Agentic AI” technology-யை பயன்படுத்துகிறது.
ChatGPT Payment safe ஆ இருக்குமா?
பதில்: ஆமாம், இது NPCI-யின் புதிய “Reserve Pay” system மூலம் பாதுகாப்பான transaction experience-ஐ கொடுக்கிறது.
ChatGPT UPI Payment Shopping India launch எப்போ நடந்தது?
பதில்: இந்த முன்னோட்ட திட்டம் 2025 அக்டோபர் 10ஆம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது, BigBasket, Axis Bank, Airtel Payments Bank ஆகியவை இதற்கு முதல் பங்குதாரர்கள்.
“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work
இந்தப் பதிவில்,
Quick English Recap – Key Insights & Best Takeaways!
ChatGPT UPI Payment Shopping: India has officially become the first country to launch ChatGPT-based UPI payments and AI shopping integration!
This pilot project by NPCI, Razorpay, and OpenAI marks the start of a new AI-powered financial revolution in the digital world.
Key Highlights:
- UPI in ChatGPT: Users can now chat, shop, and pay within ChatGPT using India’s UPI system.
- AI + Payments = Future: “Agentic AI” technology allows smoother, safer, and fully automated transactions.
- Partners in Action: NPCI (UPI), Razorpay (Fintech), and OpenAI (AI innovation) jointly make this global-first move.
- Reserve Pay System: Funds can be reserved securely before completing a transaction – a major safety upgrade.
- India Leads the AI Race: This initiative proves India’s dominance in fintech and AI innovation globally.
- Future Scope: Soon, similar AI-driven payments may extend to healthcare, education, and e-commerce platforms.
Best Takeaway:
India has unlocked a new era — where conversations turn into transactions!
With ChatGPT now handling real payments, the AI revolution is no longer the future — it’s already here.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள்! – tnnewsbox.com
YouTube channel – www.youtube.com/@TNNewsBox













