3 சிறந்த மருத்துவ கீரைகள் – உடல்நலத்திற்கு கவசம்!

3 சிறந்த மருத்துவ கீரைகள் தேர்வு - Best Medicinal Greens for Health
  • 3 சிறந்த மருத்துவ கீரைகள் : உணவு முறைகளில் பல்வேறு வகையான இயற்கை உணவுகள் இருந்தாலும், இயற்கை தந்த அற்புதப் பரிசுகளில் ஒன்றாக அதிக மருத்துவ நன்மைகள் நிறைத்த கீரை வகைகள் இருக்கின்றன. 
  • இந்த ஆரோக்கியம் நிறைந்த கீரைகள் நம் உடலை வலுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றவாறு இந்தக் கீரை வகைகள் இருக்கின்றன. 
  • இதை எளிதில் சமைக்க முடியும் என்பதாலும் கூட கீரைகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். நம் நாட்டில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதும் பல்வேறு வகையான கீரை வகைகள் உள்ளன. 
  • குறிப்பாக தமிழ்நாட்டில் முருங்கைக் கீரை, பசலைக் கீரை, அகத்திக் கீரை, மணத்தக்காளிக் கீரை என்று எண்ணில் அடங்காத கீரை வகைகள் உள்ளன. 
  • ஒவ்வொரு கீரை வகைகளும் தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. கீரை எடுத்துக் கொள்வதால் உடலின் ஊட்டச்சத்து அதிகரித்து, தினமும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. அது மட்டுமில்லாமல், நம்முடைய வீட்டுத் தோட்டத்தில் கூட இந்தக் கீரைகளை வளர்க்கலாம்.
  • இன்றைய காலகட்டத்தில் அதிக செலவழித்து மருந்துகளை வாங்கி எடுத்து வருகிறோம். ஆனால், குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கீரைகள் விலை உயர்ந்த மருந்தாக இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டால் நாம் இதை விடமாட்டோம் அல்லவா? 
  • மருத்துவ கீரைகள் உடலுக்கு பல நன்மைகள் வழங்குகின்றன, அவற்றில் முக்கியமான 3 வகையான மூலிகை கீரைகள், அவற்றின் மருத்துவக் குணங்கள், கீரை பயன்கள், அவற்றால் நமக்கு கிடைக்கும் உடல் ஆரோக்கியம் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

3 சிறந்த மருத்துவ கீரைகள்

பசலைக் கீரை 

3 சிறந்த மருத்துவ கீரைகள் பசலைக் கீரையின் நன்மைகள் - Pasalai Keerai (Spinach) Health Benefits
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் A நிறைந்த பசலைக் கீரை.

பசலைக்கீரை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் கீரை வகைகளில் ஒன்றாகும். இதில் எண்ணில் அடங்காத மருத்துவப் பயன்கள் நிறைந்துள்ளன. 

A) தாவரவியல் பெயர்:

பசலைக் கீரையின் தாவரவியல் பெயர் ஸ்பினேசியா ஓலரேசியா (Spinacia Oleracea) என்பதாகும். இது பச்சையாகவும், சமைத்தும் உண்ணக்கூடிய மிகச்சிறந்த கீரை வகைகளில் ஒன்றாகும்.

B) வளரும் மண் வகைகள்:

பசலைக் கீரை வளர்வதற்கு அதிகம் உரம் தேவையில்லை. இது பல்வேறு மண் வகைகளிலும் வளரக்கூடியது. குறிப்பாக,

  • வண்டல் மண்.
  • கரிசல் மண்.
  • செம்மண்.
  • சரளை மண்.
  • மலை மண்.
  • பாலை மண்.

ஆகிய மண் வகைகளில் இது சிறப்பாக வளரும்.

i) இதய நோய்த் தடுப்பு:

  • பசலைக் கீரையை எடுத்துக் கொள்வதால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து, இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. 
  • அதனால் பசலைக்கீரையை சீராக எடுத்துக் கொள்வது நல்லதாகும். 
உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – 5 எளிய வழிகள்! உடல் எடையைக் குறைக்கும் டிப்ஸ் – 5 எளிய வழிகள் | Weight loss tips – 5 easy ways in Tamil

ii) நரம்பு வியாதி தடுப்பு: 

  • சில சமயங்களில் குழந்தைகளுக்கு நரம்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 
  • பசலைக் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக பைட்டோ நியூட்ரியண்ட்கள் (Phytonutrients) இந்த நரம்புப் பிரச்சனைகளைத் தடுக்க உதவுகின்றன. 

iii) பார்வைத் திறன் அதிகரிப்பு: 

  • பசலைக்கீரையில் பீட்டா கரோட்டீன் (Beta carotene) போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 
  • இவை கண்களில் ஏற்படும் பார்வைக் குறைபாடுகளைக் கட்டுப்படுத்தி கண்களைப் பாதுகாக்கும். 

iv) கொழுப்பைக் கரைக்கும் தன்மை: 

  • பசலைக் கீரையில் குளோரோஃபில் (Chlorophyll) அதிகமாக உள்ளது. 
  • இது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளைக் கரைத்து, உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

v) ரத்த ஓட்டம் அதிகரிப்பு: 

  • பசலைக் கீரையில் இரும்புச் சத்து (Iron) அதிகமாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் (Red Blood Cells) மற்றும் ஹீமோகுளோபின் (Hemoglobin) உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. 
  • இதனால் ரத்தக் குறைபாடு ஏற்படாமல் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். 
பளபளப்பான சருமம் – 5 வீட்டு நிவாரணங்கள் 2025 பளபளப்பான சருமம் பெற வீட்டு நிவாரணங்கள் | 2025 Glowing Skin Home Remedies in Tamil

vi) வாய்ப்புண் குணமாதல்: 

  • வயிற்றில் இருக்கும் புண்களால் வாய்ப்புண் ஏற்படும். 
  • அப்போது பசலைக் கீரையை எடுத்துக் கொண்டால் வாய்ப்புண்கள் விரைவில் குணமாகும். 

vii) புற்றுநோய் எதிர்ப்பு: 

  • பசலைக்கீரையில் ஃப்ளேவோனாய்டுகள் (Flavonoids) மற்றும் பைட்டோ நியுட்ரியன்ட்ஸ் (Phytonutrients) உள்ளன. 
  • இவை உடலில் உள்ள தேவையற்ற செல்களை அழித்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. 

viii) ரத்த அழுத்தக் கட்டுப்பாடு: 

  • பசலைக் கீரையில் மெக்னீசியம் (Magnesium) அதிகமாக உள்ளது. இது ரத்த அழுத்தத்தை நிலையாக வைத்திருக்க உதவுகிறது. 
  • உயர் ரத்த அழுத்தத்தைக் கொண்டவர்கள் இந்தப் பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். 

ix) குளிர்ச்சித் தன்மை: 

  • பசலைக் கீரை குளிர்ச்சித் தன்மையைக் கொண்டது. அதனால் உடல் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் பசலைக் கீரையை எடுத்துக் கொள்வது நல்லது. 
  • ஆனால் சளி, இருமல் உள்ளவர்கள் பசலைக் கீரையைக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

அரிசி எப்போது தவிர்க்க வேண்டும்? நிபுணர் அறிவுரை!

அரிசி எப்போது தவிர்க்க வேண்டும்? நிபுணர் அறிவுரை! அரிசி தவிர்க்க வேண்டிய நேரம் – Expert Nutritionist Tips

பசலைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்

சத்துக்கள்கிராம்அளவு
ஈரம் (Moisture)100g81.1
புரதம் (Protein)100g4.4
கொழுப்பு (Fat)100g0.8
தாதுப்பொருள் (Mineral)100g4.5
எரி சத்து100g62
சுண்ணாம்பு100g306
பாஸ்பரஸ் (Phosphorus)100g462
இரும்பு (Iron)100g8.9

மணத்தக்காளி கீரை 

மணத்தக்காளி கீரையின் மருத்துவ நன்மைகள் - Manathakkali Keerai Medicinal Uses
அமிலக்கசை மற்றும் வயிற்று புண் பிரச்சனைகளுக்கு சிறந்த கீரை

மணத்தக்காளி கீரை என்பது உடல் ஆரோக்கியத்திற்குப் பல பயன்களைத் தரும் ஒரு மூலிகைச் செடியாகும். இதை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நலம் நன்றாக இருக்கும். 

A) தாவரவியல் பெயர்: 

மணத்தக்காளி கீரையின் தாவரவியல் பெயர் சொலானம் நைக்ரம் (Solanum Nigrum) ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் இயற்கையாகவே வளரும் ஒரு முக்கிய மூலிகை ஆகும். 

B) வளரும் மண் வகைகள்: 

மணத்தக்காளி கீரை பல்வேறு நிலங்களில் வளர்கிறது. குறிப்பாக,

  • வண்டல் மண்
  • கரிசல் மண்
  • செம்மண்
  • சரளை மண்

ஆகிய மண் வகைகளில் வளரும்.

i) தொண்டைக் கட்டை நீக்குதல்:

  • பாடகர்கள், ஆசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள் போன்றவர்கள் நீண்ட நேரம் பேசுவதால் தொண்டையில் வறட்சி ஏற்பட்டு, புண், வீக்கம், தொண்டைக் கட்டு ஆகியவை ஏற்படக்கூடும். 
  • மணத்தக்காளி கீரையைப் பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிடுவதால் தொண்டை தொடர்பான பிரச்சனைகள் குறைந்து, குரலுக்கு அதிக ஆற்றலைத் தரும்.

ii) வயிற்றுப் புண்களுக்குத் தீர்வு: 

  • தவறான உணவுப் பழக்க வழக்கங்களாலும், காலம் தவறி உணவை சாப்பிடுவதாலும் வயிறு மற்றும் குடல் பகுதியில் புண்கள் ஏற்படுகின்றன. 
  • அந்த சமயத்தில் மணத்தக்காளி கீரையைக் குழம்பு, கூட்டு செய்து சாப்பிடுவதால் குடல் புண்கள் விரைவில் குணமாகும். அது மட்டுமில்லாமல், இது மலச்சிக்கல் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

iii) உணவுச் சத்துக்கள்:

  • மணத்தக்காளி கீரையில் வைட்டமின்கள் (Vitamins), இரும்புச்சத்து (Iron), பாஸ்பரஸ் (Phosphorus), கால்சியம் (Calcium) போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 
  • இதைக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் எடுத்துக்கொள்வதன் மூலம் உடல் பலத்தை அதிகரிக்கும். 

iv) சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து: 

  • உப்பு நிறைந்த உணவை அதிகம் உண்பதாலும், நீர்க் குறைவாலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும். 
  • அந்த நேரத்தில் மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீர் நன்றாக வெளியேறும். அது மட்டுமில்லாமல், இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும்.

v) கருத்தரித்தலுக்கு சிறந்த மருந்து: 

  • சில பெண்கள் திருமணத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் குழந்தை பெற முடியாமல் இருப்பார்கள். 
  • மணத்தக்காளி கீரையை வாரத்தில் 2 – 3 முறை உணவில் சேர்த்துக் கொண்டால், கருப்பை பலமாகி கருத்தரிக்கச் செய்யும்.  

vi) வாய்ப்புண், அல்சர்களுக்கு சிறந்த மருந்து: 

  • வாயில் புண்கள் ஏற்படும்போது மணத்தக்காளி இலைகளை வாயில் வைத்து அதன் சாறு வெளியேறும்படி மென்று சாப்பிட வேண்டும். 
  • அப்படிச் செய்யும்போது, 2 நாட்களில் வாய்ப்புண்கள் முழுவதுமாக குணமாகும். 
  • இது அல்சர், வாய்ப்புண், குடல் புண் ஆகியவற்றை குணப்படுத்தும் சிறந்த இயற்கை மருந்தாகும்.
சிறந்த Face Mask டிப்ஸ் – முகத்திற்கு சரியான தேர்வு! சிறந்த Face Mask டிப்ஸ் | Best Face Mask Tips for Glowing Skin

மணத்தக்காளி கீரையில் இருக்கும் சத்துக்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்

சத்துப்பொருட்கள்அளவு (100 கிராம்)
ஈரம் (Moisture)81.1 கிராம்
புரதம் (Protein)4.4 கிராம்
கொழுப்பு (Fat)0.8 கிராம்
தாதுப்பொருள் (Mineral)4.5 கிராம்
எரி சத்து (Energy)62 கிலோ கலோரி
சுண்ணாம்பு (Calcium)306 மில்லி கிராம்
பாஸ்பரஸ் (Phosphorus)462 மில்லி கிராம்
இரும்பு (Iron)8.9 மில்லி கிராம்

வல்லாரைக் கீரை

வல்லாரைக் கீரை மூளைக்கு நன்மை தரும் - Vallarai Keerai for Brain Power
நினைவாற்றல் மேம்பட வல்லாரைக் கீரை அற்புதமானது!

வல்லாரைக் கீரை ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகைக் கீரையாகும். இந்தக் கீரை பல கிராமப்புறங்களில் இயற்கையாகவே வளரும். இந்த வல்லாரைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றலை அதிகரிக்கும். அது மட்டுமில்லாமல், இது உடல் நலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

A) தாவரவியல் பெயர்:

வல்லாரைக் கீரையின் தாவரவியல் பெயர் சென்டெல்லா ஆசியாட்டிகா (Centella Asiatica) ஆகும். இது தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இயற்கையாக வளரும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடியாகும்.  

B) வளரும் மண் வகைகள்:

வல்லாரைச் செடி அதிகப்படியான நீர் தேங்கி நிற்காத இடத்திலும், இடிந்த மண் தரையிலும், வெதுவெதுப்பான நிலப்பரப்புகளிலும் வளரும்.

  • வண்டல் மண்
  • செம்மண்
  • கரிசல் மண்

ஆகிய மண் வகைகளில் நல்ல வளர்ச்சி காணப்படும்.

Walnut benefits : ஊறவைத்தது vs உலர்ந்தது – எது சிறந்தது? Walnut நன்மைகள் மற்றும் உடல்நலத்துக்கு சிறந்தது எது? | Soaked vs Dried Walnut Benefits in Tamil

i) மூளைக்குத் திறன் அளிக்கும் அற்புத மருந்து

  • வல்லாரைக் கீரையை மூளைக்கீரை என்றும் கூறுவர். காரணம், இது நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி கொண்டது. 
  • மாணவர்கள் தொடர்ந்து வல்லாரைக் கீரையைச் சட்னி, கூட்டு போன்று உணவுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும், இது அதிக நேரம் படிப்பவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சியைத் தரும். 

ii) வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும்:

  • வல்லாரை இலைகளை உலர்த்தி, பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அழியும். 
  • இது குழந்தைகளுக்கு நல்ல ஒரு மூலிகை மருந்தாகும். 

iii) ரத்த சோகையை நீக்கும்

ரத்த சோகை கீரை நன்மைகள் - Ratha Chokai (Red Amaranthus) Health Benefits
இரத்தச் சுழற்சி மற்றும் இரும்புச்சத்துக்கு சிறந்த ரத்த சோகை.
  • வல்லாரைக் கீரையில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது. இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் (Hemoglobin) எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 
  • ரத்த சோகைப் பிரச்சனையால் சோர்வாக இருக்கும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் ஆரோக்கியம் மேம்படும். 

iv) கண் நரம்புகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் மருந்து:

  • வல்லாரைக் கீரை கண் நரம்புகளைப் பலப்படுத்தும். 
  • கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், பார்வைக் குறைபாடு போன்ற பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. 

v) இருமல் மற்றும் தொண்டைக் கட்டுக்குத் தீர்வு: 

  • தொடர்ந்து இருமல், தொண்டை வீக்கம் ஆகிய பிரச்சனைகள் இருந்தால், வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். 
  • பாடகர்கள், பேச்சாளர்கள் போன்றவர்கள் இதை உணவில் எடுத்துக் கொண்டு வந்தால் தொண்டைக் கட்டு நீங்கும். 

vi) நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த தீர்வு:

  • வல்லாரைக் கீரை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தாகும். 
  • நீரிழிவு நோயாளிகள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 

vii) பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்தும்: 

  • வல்லாரை இலையின் பொடியை வைத்து பல் துலக்கினால், பற்களில் உள்ள கரை நீங்கி ஈறுகள் வலுவாகும். 
  • பற்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

viii) உடல் சூடு மற்றும் புற வியாதிகளை நீக்கும்:

  • வல்லாரை எண்ணெயை தலைக்குத் தேய்த்து வந்தால் உடல் சூடு, தலைவலி ஆகியவை குறையும். 
  • அது மட்டுமில்லாமல், வல்லாரை இலையை அரைத்து வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டினால் உள் காயம் குணமாகும்.

வல்லாரைக் கீரையில் இருக்கும் சத்துக்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம்

சத்துப்பொருட்கள்அளவு (100 கிராம்)
ஈரம் (Moisture)81.1 கிராம்
புரதம் (Protein)4.4 கிராம்
கொழுப்பு (Fat)0.8 கிராம்
தாதுப்பொருள் (Mineral)4.5 கிராம்
எரி சத்து (Energy)62 கலோரி
சுண்ணாம்பு (Calcium)306 மில்லி கிராம்
பாஸ்பரஸ் (Phosphorus)462 மில்லி கிராம்
இரும்பு (Iron)8.9 மில்லி கிராம்
நார்ச்சத்து (Fiber)1.8 கிராம்

3 சிறந்த மருத்துவ கீரைகள் – மருத்துவப் பயன்பாட்டு ஒப்பீடுகளைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்:

கீரைவகைபசலைக்கீரைமணத்தக்காளிகீரைவல்லாரைக்கீரை
தாவரவியல்பெயர்ஸ்பினேசியா ஓலரேசியா (Spinacia Oleracea)சொலானம் நைக்ரம் (Solanum Nigrum)சென்டெல்லா ஆசியாட்டிகா (Centella Asiatica)
வளரும்மண்வகைகள்பல வகையான மண்ணில் வளரும்வண்டல் மண், கரிசல் மண், செம்மண், சரளை மண்வண்டல் மண், செம்மண், கரிசல் மண், வெதுவெதுப்பான நிலப்பரப்புகளில் வளரும்
மருத்துவப்பயன்கள்இதய நோய்த் தடுப்பு, நரம்புப் பிரச்சனைகள், பார்வை மேம்பாடுதொண்டைக் கட்டை நீக்குதல், வயிற்றுப் புண்களைக் குணமாக்குதல்நினைவாற்றல் அதிகரிப்பு, கண் நரம்புகளை வலுப்படுத்துதல்
வயிற்றுப்புண்களுக்குத் தீர்வுபசலைக் கீரை வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும்மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும்வயிற்றுப் பூச்சிகளை அழிக்கப் பயன்படும்
இரும்புச்சத்துஅதிகமான இரும்புச் சத்து, ரத்த ஓட்ட மேம்பாடுஇரும்புச் சத்து நிறைந்தது, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்இரும்பு சத்து இருப்பதால் இது ரத்த சோகையை நீக்கும்
நரம்புஆரோக்கியம்பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் இருப்பதால், நரம்பு வியாதியைத் தடுக்கும் தொண்டை மற்றும் குரலுக்குப் பலன்கள்மூளைக்குத் திறன் அளிக்கும், நினைவாற்றலை அதிகரிக்கும்
கண்கள்பார்வைத் திறன் அதிகரிப்பு, கண்களில் ஏற்படும் குறைபாடுகள் தடுப்புகண் சத்தைப் பாதுகாக்கும், பார்வைப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவும்கண் நரம்புகளை வலுப்படுத்த உதவும்
வயிற்றுப்பூச்சிகள் – –வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்
தொண்டைப்பிரச்சனை
தொண்டைக் கட்டை நீக்கி, குரல் வளத்தை அதிகரிக்கும்தொண்டைப் பிரச்சனையைத் தீர்க்க உதவும்

இயற்கை உணவுகளில் இந்த 3 சிறந்த மருத்துவ கீரைகள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இது உடலை சீராக பராமரிக்க உதவுகிறது. இந்தக் கீரைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடியவை ஆகும். மேலும், அவற்றை நாம் எளிதில் வீட்டுத் தோட்டங்களிலேயே வளர்த்து தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால், இயற்கை தந்த இந்த அற்புதப் பரிசைப் பயன்படுத்திக் கொண்டு நாம் ஆரோக்கியமாக இருப்போம்!

அதிகாரப்பூர்வ தளம் – Ministry of AYUSH

வல்லுனர்களின் கருத்தை தெரிந்துகொள்ள – Dr. Axe

3 சிறந்த மருத்துவ கீரைகள் பற்றிய பொதுவான கேள்விகள் குறித்துப் பாப்போம் (FAQs)

1) பசலைக் கீரையின் பயன்கள் யாவை?
பசலைக் கீரை இதய நோய்களைத் தடுப்பது மட்டுமில்லாமல், இதில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

2) மணத்தக்காளி கீரையின் பயன்கள் யாவை?
மணத்தக்காளி கீரை வயிற்றுப் புண்களை குணப்படுத்துவதுடன், சிறுநீரகக் கற்களை கரைக்கவும் உதவுகிறது.

3) வல்லாரைக் கீரையின் பயன்கள் யாவை?
வல்லாரைக் கீரை நினைவாற்றலை மேம்படுத்தி மாணவர்களுக்கும், அதிக நேரம் படிப்பவர்களுக்கும்  புத்துணர்ச்சியை அளிக்கிறது.

Key Insights & Best Takeaways!

  • Pasalai Keerai (Spinach) is rich in iron, Vitamin A, and fiber, making it a natural remedy for fatigue, poor vision, and digestion problems.
  • Manathakkali Keerai (Black Nightshade) is a powerful healer for ulcers, liver issues, and acidity, offering cooling and detoxifying effects.
  • Vallarai Keerai (Brahmi Leaves) boosts brain function, memory, and concentration, widely used in Siddha and Ayurvedic practices.
  • Ratha Chokai (Red Amaranthus) is packed with iron and antioxidants, ideal for improving blood circulation and preventing anemia.
  • Including these greens in weekly meals can naturally prevent common health issues like anemia, digestive troubles, and cognitive decline.

Releated Posts

Early Meals முக வீக்கத்தைக் குறைக்குமா? உண்மை இதோ!

Early Meals : முகத்தில் ஏற்படும் வீக்கம் என்பது நம்மில் பலருக்கும் பொதுவான ஒரு பிரச்சினை. குறிப்பாக, காலையில் இந்த நிலை ஏற்படும். முந்தைய…

ByByVignesh MJun 25, 2025

Blood Sugar அதிகமாக உள்ளதா? இந்த 10 அறிகுறிகளைக் கவனிக்கவும்!

Blood Sugar : இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது, இந்தக் காலக்கட்டத்தில் பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினையாக உள்ளது. ஆனால், இந்த…

ByByVignesh MJun 24, 2025

அடிக்கடி வாய்ப்புண் வருகிறதா? சிறந்த இயற்கை தீர்வுகள் இதோ!

வாய்ப்புண் குணமாக இயற்கை வைத்தியங்கள் : சமீபகாலமாக பலரும் வாய்ப்புண் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்சனைக்கு உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியக் காரணமாகும்.…

ByByVignesh MJun 20, 2025

Belly Fat Loss Vegetables – தினமும் சாப்பிட வேண்டியவை!

Belly Fat Loss : உடல் எடையைக் குறைக்கவும், குறிப்பாக தொப்பையைக் குறைக்கவும் முயற்சிக்கும்போது, சரியான உணவு முறை மிகவும் முக்கியம் ஆகும். உடற்பயிற்சியுடன்…

ByByVignesh MJun 17, 2025

Hair Removal Masks 2025 – வீட்டிலேயே செய்யலாம்!

Hair Removal Masks : பெண்களின் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. இந்த முடியை நீக்க விலை உயர்ந்த…

ByByAmirthavarshini RJun 6, 2025

Walnut benefits : ஊறவைத்தது vs உலர்ந்தது – எது சிறந்தது?

Walnut benefits : பொதுவாக பாதாம், பிஸ்தா போன்ற மற்ற பருப்புகளை ஒப்பிடும்போது, வால்நட்டில் சில தனித்துவமான பண்புகளும், அதிகப்படியான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதை…

ByByAmirthavarshini RApr 18, 2025

நீரிழிவு நோய் உணவுமுறை – சிறந்த 7 நாள் திட்டம் 2025

நீரிழிவு நோய் உணவுமுறை : இன்றைய உணவு முறையால் பலர் நீரிழிவு நோயால் (Diabetes) பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு நோய் என்பது உடலில் இரத்த சர்க்கரை…

ByByAmirthavarshini RApr 15, 2025

7 Days Diet Plan – உடல் எடை குறைக்க தமிழ் டிப்ஸ் 2025!

7 Days Diet Plan : இன்றைய வேகமான உலகில் பலரும் வேலை, கல்வி மற்றும் தினசரி கடமைகளால் உடலைப் பற்றி கவனம் செலுத்த…

ByByAmirthavarshini RApr 14, 2025

கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்!

கோடைக்கால உணவுகள் : தற்போது கோடைக் காலம் வந்துவிட்டதால், பல மாநிலங்களில் இப்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்தக் காலகட்டத்தில், நம்…

ByByAmirthavarshini RApr 3, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *