சிறந்த 5G பட்ஜெட் போன்கள் : இன்றைய தொழில்நுட்பத்தில் 5G தொழில்நுட்பம் 4G-யை விட பல மடங்கு அதிக இணைய இணைப்பை வழங்கி வருகிறது. உதாரணத்திற்கு வீடியோ பார்ப்பதற்கும், கேமிங் வசதிகளுக்கும், மிகப்பெரிய ஆப்களைப் (Apps) பதிவிறக்கம் செய்வதற்கும், எதிர்காலத்தின் அனைத்து புதிய சேவைகளுக்கும் 5G தொழில்நுட்பமே இருந்து வருகிறது.
அதனால், இப்போதே 5G மொபைலை வாங்கி விட்டால் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு வசதியாக இருக்கும். இப்போது நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் பகுதியில் 5G வசதி இல்லை என்றாலும், ஒரு 5G மொபைலை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்கும். எதிர்காலம் நோக்கி முன்னேற இப்போதே உங்களுக்குத் தேவையான விலை குறைவான 5ஜி ஸ்மார்ட்போன்கள் எது என்பதை தேர்ந்தெடுங்கள். (Best 5G Budget Smartphones).
உங்களுக்கு 5G ஸ்மார்ட் போன்களில் எதை வாங்கலாம் என்பதில் குழப்பம் உள்ளதா? இனி கவலை வேண்டாம்! நாங்கள் உங்களுக்கு சிறந்த 5G ஸ்மார்ட் போன்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்தப் பதிவில் 5 சிறந்த 5G ஸ்மார்ட் போன் மாடல்களின்,
- காட்சி (Display).
- சக்திவாய்ந்த செயலி (Processor).
- கேமரா வசதி (camera).
- பேட்டரி ஆயுள் (battery).
- விலை (Price).
- ஒப்பீட்டு அட்டவணை.
- FAQs.
ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
சிறந்த 5G பட்ஜெட் போன்கள்
Oppo A3X 5G

முக்கியக் குறிப்புகள்:
- காட்சி (Display): 6.67 இன்ச் தொடுதிரை (Touchscreen).
- செயலி (Processor): MediaTek Dimensity 6300 octa-core.
- கேமரா (Camera): 8MP (பின்புறம்) + 5MP (முன்புறம்).
- பேட்டரி (Battery): 5100mAh.
- RAM மற்றும் ஸ்டோரேஜ்: 4GB + 64GB; 4GB + 128GB.
சிறப்பம்சங்கள்
i) டிஸ்ப்ளே (Display):
- இது 6.67 இன்ச் தொடுதிரையைக் (Touchscreen) கொண்டுள்ளது.
- இதன் தீர்மானம் (Resolution) 720×1604 பிக்சல்ஸ் (HD+).
- இதன் ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate) 120Hz (வேகமான ஸ்கிரீன் மாற்றம்).
- இதன் பிக்சல் அடர்த்தி 264ppi (Pixels per inch) ஆகும்.
ii) பிராசஸர் (Processor):
- இது MediaTek Dimensity 6300 octa-core (8 கோர்களுடன்) செயலியைக் கொண்டுள்ளது.
- சாதாரண வேலைகளுக்கும், லேசான கேமிங் அனுபவங்களுக்கும் இது ஏற்றதாக இருக்கும்.
iii) மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (RAM & Storage):
- RAM: 4GB.
- ஸ்டோரேஜ்: 64GB, 128GB (இரண்டு வகைகளில் உள்ளன).
- ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS):
- இது Android 14 அடிப்படையில் ColorOS 14.0.1 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
iv) கேமரா (Camera):
- பின் (Rear) கேமரா: 8MP (f/2.0 aperture) கேமராவைக் கொண்டுள்ளது.
- முன்புற (Front) செல்ஃபி கேமரா: 5MP (f/2.2 aperture) கேமரா
- படப்பிடிப்புத் தரம்: அடிப்படை செல்போன் புகைப்படங்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
மகளிர் கிரிக்கெட் 2025 – இலங்கை அணியின் New ODI list!
v) பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging):
- திறன்: 5100mAh (அகற்ற முடியாத பேட்டரி) பேட்டரியைக் கொண்டுள்ளது.
- சார்ஜிங்: 45W வேகமான சார்ஜிங்கைக் (Fast Charging) கொண்டுள்ளது.
vi) கலர் விருப்பங்கள் (Colors):
- ஸ்பார்க்கிள் பிளாக் (Sparkle Black).
- ஸ்டாரி பர்பிள் (Starry Purple).
- ஸ்டார்லைட் வெள்ளை (Starlight White).
vii) சிம்கார்டு மற்றும் இணைப்பு (SIM & Connectivity):
- இரட்டை SIM (Nano-SIM + Nano-SIM).
- 5G மற்றும் 4G – இரண்டிலும் செயல்படும்.
- Wi-Fi 802.11 a/b/g/n/ac.
- Bluetooth v5.3
- USB Type-C.
- GPS, USB OTG.
viii) பரிமாணங்கள் மற்றும் எடை (Dimensions & Weight):
- உயரம்: 165.7 மிமீ
- அகலம்: 76.0 மிமீ
- தடிமன்: 7.7 மிமீ
- எடை: 187 கிராம்
ix) விலை (Price):
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 8,999/- (பிப்ரவரி 16, 2025 நிலவரப்படி).
யாருக்குச் சிறந்தது?
- 5G தொழில்நுட்பத்தை மலிவாக அனுபவிக்க விரும்புபவர்களுக்கும், தினசரி வேலைகளுக்கு மொபைல் தேடுபவர்களுக்கும், பெரிய பேட்டரி உடைய மொபைலை விரும்புவோருக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Oppo A3X 5G
- Official Specs: Oppo A3X 5G
- Expert Review: Oppo A3X 5G Review on GSMArena
- Related Link: Best Budget Smartphones 2025 – TN News Box
Redmi Note 11T 5G

முக்கியக் குறிப்புகள்
- காட்சி (Display): 6.6 இன்ச் (Touchscreen).
- செயலி (Processor): MediaTek Dimensity 810 (Octa-Core).
- கேமரா (Camera): 50MP (பின்புறம்) + 16MP (முன்புறம்).
- பேட்டரி (Battery): 5000mAh.
- RAM: 6GB, 8GB (இரண்டு மாறுபட்ட வகைகள்).
- ஸ்டோரேஜ்: 64GB, 128GB.
சிறப்பம்சங்கள்
i) டிஸ்ப்ளே (Display):
- இது 6.6 இன்ச் (Touchscreen) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
- இதன் தீர்மானம் (Resolution) 1080×2400 பிக்சல்ஸ் (Full HD+).
- இதன் ரெஃப்ரெஷ் ரேட் 90Hz (வழக்கமான போன்களை விட வேகமாக ஸ்க்ரோல் செய்யலாம்).
- இதன் பிக்சல் விகிதம் (Aspect Ratio) 20:9
- இது Gorilla Glass (ஸ்கிரீன் குறைபாடுகளைத் தடுக்க) பாதுகாப்பைக் கொண்டுள்ளது.
ii) செயலி (Processor):
- இது MediaTek Dimensity 810 (Octa-Core) செயலியைக் கொண்டுள்ளது.
- இது தினசரிப் பயன்பாடு மற்றும் மெதுவாக கேமிங் விளையாடுவோருக்கு சீரான செயல்திறனை வழங்குகிறது.
iii) மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (RAM & Storage):
- RAM: 6GB, 8GB (இரண்டு மாறுபட்ட வகைகளில் உள்ளது).
- ஸ்டோரேஜ்: 64GB, 128GB.
- கூடுதல் மெமரி: microSD கார்டு மூலம் 1TB (1000GB) வரை விரிவாக்கலாம்.
iv) ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS):
- இது Android 11 அடிப்படையில் MIUI 12.5 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
v) கேமரா (Camera):
- பின்புற (Rear) கேமரா:50MP முதன்மை கேமரா (f/1.8 aperture, Auto-focus) மற்றும் 8MP வியூ கேமரா (Ultra-wide, f/2.2 aperture).
- முன்புற (Front) செல்பி கேமரா: 16MP கேமரா (f/2.45 aperture, 1.0-micron pixel size).
- புகைப்படம் மற்றும் வீடியோ தரம்: Social Media மற்றும் தினசரிப் பயன்பாட்டிற்குத் தரமான புகைப்படத்தைத் தரும்.
OPPO K13 5G வெளியீடு 2025 : விலை மற்றும் அம்சங்கள்!
vi) பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging):
- திறன்: 5000mAh (அகற்ற முடியாத பேட்டரி).
- சார்ஜிங்: ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியைக் கொண்டுள்ளது.
vii) சிம்கார்டு மற்றும் இணைப்பு (SIM & Connectivity):
- இரட்டை SIM (Nano-SIM + Nano-SIM).
- 5G, 4G, 3G, Wi-Fi, Bluetooth v5.10, GPS, Infrared, USB Type-C.
viii) பரிமாணங்கள் மற்றும் எடை (Dimensions & Weight):
- உயரம்: 163.56 மிமீ
- அகலம்: 75.78 மிமீ
- தடிமன்: 8.75 மிமீ
- எடை: 195 கிராம்
ix) கலர் விருப்பங்கள் (Colors):
- அக்வாமரைன் நீலம் (Aquamarine Blue).
- மேட் கருப்பு (Matte Black).
- ஸ்டார்டஸ்ட் வெள்ளை (Stardust White).
x) விலை (Price):
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 9,970/- (பிப்ரவரி 16, 2025 நிலவரப்படி).
யாருக்குச் சிறந்தது?
- சிறந்த கேமரா மற்றும் பெரிய பேட்டரியைத் தேடும் பயனர்களுக்கும், 5G வசதியுடன் எதிர்காலத்திற்கேற்ப மொபைல் தேடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும், தரமான டிஸ்ப்ளே, வீடியோ பார்வைக்காக போன் தேடுபவர்களுக்கும் இந்த போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Redmi Note 11T 5G
- Official Specs: Redmi Note 11T 5G – Official Website
- Expert Review: Redmi Note 11T 5G Review – GSMArena
- Related Link: Best Budget Smartphones 2025 – TN News Box
Samsung Galaxy A16 5G

முக்கியக் குறிப்புகள்
- காட்சி (Display): 6.5 இன்ச் Super AMOLED.
- செயலி (Processor): MediaTek Dimensity 6300.
- கேமரா (Camera): 50MP (பின்புறம்) + 13MP (முன்புறம்).
- பேட்டரி (Battery): 5000mAh.
- RAM: 6GB, 8GB (இரண்டு மாறுபட்ட வகைகள்).
- ஸ்டோரேஜ்: 128GB, 256GB.
சிறப்பம்சங்கள்
i) டிஸ்ப்ளே (Display):
- இது 6.5 இன்ச் Super AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
- இதன் தீர்மானம் (Resolution) 1080×2340 பிக்சல்ஸ் (Full HD+).
- இதன் ரெஃப்ரெஷ் ரேட் 60Hz / 90Hz (உங்கள் விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்).
- அதிக வண்ணத்தன்மை (Chromaticity), தெளிவான படம், கண்ணுக்கு வசதியாகக் காண்பிக்கும் திரையைக் கொண்டுள்ளது.
ii) செயலி (Processor):
- இது MediaTek Dimensity 6300 செயலியைக் கொண்டுள்ளது.
- இது வேகமான செயல்திறனைக் கொண்டுள்ளது. மேலும், இது தினசரி பயன்பாட்டிற்கும், லேசான கேமிங்கிற்கும் ஏற்றதாக இருக்கும்.
iii) மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (RAM & Storage):
- RAM: 6GB, 8GB.
- ஸ்டோரேஜ்: 128GB, 256GB (புகைப்படங்கள், வீடியோக்கள் சேமிக்க எளிதாக இருக்கும்).
iv) ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS):
- Android 14.
- இதில் 6 ஆண்டுகள் OS பாதுகாப்பு (Security) அப்டேட்கள் உள்ளன.
v) கேமரா (Camera):
- பின்புற (Rear) டிரிபிள் (Triple) கேமரா அமைப்பு: 50MP முதன்மை கேமரா (குறைந்த வெளிச்சத்திலும் நல்ல புகைப்படங்களைத் தரும்). இதன் 5MP அல்ட்ரா வைட் கேமரா (Ultra wide camera) பெரிய கோணத்தில் புகைப்படம் எடுக்க உதவும். மேலும், இதன் 2MP மேக்ரோ கேமரா (Macro camera) நெருக்கமான பொருட்களின் படங்களைத் தெளிவாக எடுக்க உதவுகிறது.
- முன்புற (Front) செல்பி கேமரா: 13MP செல்பி கேமராவைக் (Selfie மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது) கொண்டுள்ளது.
Walnut benefits : ஊறவைத்தது vs உலர்ந்தது – எது சிறந்தது?
vi) பேட்டரி & சார்ஜிங் (Battery & Charging):
- திறன்: 5000mAh (நாள் முழுவதும் நீடிக்கும்).
- சார்ஜிங்: 25W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging).
vii) சிம்கார்டு மற்றும் இணைப்பு (SIM & Connectivity):
- இரட்டை SIM (Nano-SIM + Nano-SIM).
- 5G, 4G, Wi-Fi, Bluetooth, GPS, USB Type-C.
viii) கலர் விருப்பங்கள் (Colors):
- நீலக் கருப்பு (Blue Black).
- தங்க நிறம் (Gold).
- இளம் பச்சை (Light Green).
ix) விலை (Price):
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 14,990/- (Flipkart-ல் பிப்ரவரி 16, 2025 நிலவரப்படி).
யாருக்குச் சிறந்தது?
- 5G வசதியைத் தேடும் மாணவர்கள், இளையோர்களுக்கும், நல்ல கேமராவைத் தேடும் புகைப்பட ஆர்வலர்களுக்கும், நீண்ட பேட்டரி மற்றும் வசதியான திரையைத் தேடும் பயனர்களுக்கும் இந்தப் போன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Samsung Galaxy A16 5G
- Official Specs: Samsung Galaxy A16 5G – Official Website
- Expert Review: Samsung Galaxy A16 5G Review – GSMArena
Vivo V25 5G

முக்கியக் குறிப்புகள்
- காட்சி (Display): 6.44 இன்ச் டச் ஸ்கிரீன்.
- செயலி (Processor): MediaTek Dimensity 900 – ஆக்டா-கோர் (Octa-core) செயலி.
- கேமரா (Camera): 64MP (பின்புறம்) + 50MP (முன்புறம்).
- பேட்டரி (Battery): 4500mAh.
- RAM: 8GB, 12GB (இரண்டு மாறுபட்ட வகைகள்).
- ஸ்டோரேஜ்: 128GB, 256GB.
சிறப்பம்சங்கள்
i) டிஸ்ப்ளே (Display):
- இது 6.44 இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
- இதன் தீர்மானம் (Resolution) 1080×2404 பிக்சல்ஸ் (FHD+).
- இதன் ரெஃப்ரெஷ் ரேட் 90Hz (விரைவாக ஸ்கிரோல் (Scroll) செய்ய வசதியான திரை).
- அதிக வண்ணத்தன்மை (Chromaticity) மற்றும் கண்களுக்கு வசதியான திரையாக இருக்கும்.
ii) செயலி (Processor):
- இது MediaTek Dimensity 900 ஆக்டா-கோர் (Octa-core) செயலியைக் கொண்டுள்ளது.
- இது தினசரிப் பயன்பாடு, கேமிங், அப்பிளிகேஷன் ஆகியவற்றிற்கு வேகமான செயல்திறனை அளிக்கும்.
“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”
iii) RAM மற்றும் ஸ்டோரேஜ் (Memory & Storage):
- RAM: 8GB, 12GB.
- ஸ்டோரேஜ்: 128GB, 256GB (உங்களுக்குத் தேவையானபடி தேர்வு செய்து கொள்ளலாம்).
- மெமரி கார்டு மூலம் 1024GB (1TB) வரை அதிகரித்துக் கொள்ளலாம்.
iv) ஆப்பரேட்டிங் சிஸ்டம் (OS):
- Android 12 – புதிய வசதிகளுடன் வந்துள்ளது.
- Funtouch OS 12 – Vivo-வின் தனிப்பட்ட UI, எளிதாக உபயோகிக்க உதவுகிறது.
v) கேமரா (Camera):
- பின்புறம் (Rear) டிரிபிள் (Triple) கேமரா அமைப்பு: இதன்64MP முதன்மை கேமரா நல்ல, தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. மேலும், இதில் 8MP அல்ட்ரா வைட் கேமரா வசதி (பெரிய கோண புகைப்படம்) உள்ளது. அது மட்டுமில்லாமல், இதன் 2MP மேக்ரோ கேமரா நெருக்கமான பொருட்களையும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவுகிறது.
- முன்புற (Front) செல்பி கேமரா: இதன் 50MP செல்ஃபி கேமரா, உயர் தெளிவான செல்பிகளை (Selfie) எடுக்க உதவுகிறது.
vi) பேட்டரி மற்றும் சார்ஜிங் (Battery & Charging):
- திறன்: 4500mAh (நாள் முழுவதும் நீடிக்கும்).
- சார்ஜிங்: ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதியைக் கொண்டுள்ளது.
vii) சிம்கார்டு மற்றும் இணைப்பு (SIM & Connectivity):
- இரட்டை SIM (Dual SIM) வசதி உள்ளது.
- 5G, 4G, 3G, Wi-Fi, Bluetooth v5.20, USB Type-C.
viii) வண்ணங்கள் (Colours):
- நேர்த்தியான கருப்பு (Elegant Black).
- சர்ஃபிங் நீலம் (Surfing Blue).
ix) விலை (Price):
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 20,999/- (Flipkart-ல் பிப்ரவரி 16, 2025 நிலவரப்படி).
யாருக்குச் சிறந்தது?
- புகைப்படங்கள், செல்ஃபி எடுத்துப் பகிர்வதை விரும்புபவர்களுக்கும், 5G வசதியைத் தேடும் இளைஞர்களுக்கும், மெமரி மற்றும் வேகமான செயலியைத் தேடும் தொழில்நுட்பக் காதலர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Vivo V25 5G
- Official Specs: Vivo V25 5G – Official Website
- Expert Review: Vivo V25 5G Review – GSMArena
சிறந்த 5G பட்ஜெட் போன்கள் – Realme 14 Pro 5G

முக்கியக் குறிப்புகள்:
- காட்சி (Display):6.77 இன்ச் (பெரிய டச் ஸ்கிரீன்).
- செயலி (Processor): MediaTek Dimensity 7300.
- கேமரா (Camera): 50MP (பின்புறம்) + 16MP (முன்புறம்).
- பேட்டரி (Battery): 6000mAh.RAM: 8GB.
- ஸ்டோரேஜ்: 128GB, 256GB.
சிறப்பம்சங்கள்
i) டிஸ்ப்ளே (Display):
- இது 6.77 இன்ச் (பெரிய டச் ஸ்கிரீன்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.
- இதன் தீர்மானம் (Resolution) 1080×2392 பிக்சல்ஸ் (FHD+).
- இதன் ரெஃப்ரெஷ் ரேட் 120Hz (வேகமாக ஸ்கிரோல் செய்ய வசதியான திரையாக இருக்கும்).
- பெரிய திரை என்பதால் வீடியோ பார்ப்பதற்கும், கேமிங் விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும்.
ii) செயலி மற்றும் மெமரி (Processor & RAM):
- RAM: 8GB – பல செயலிகளை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்த வசதியாக இருக்கும்.
- ஸ்டோரேஜ்: 128GB, 256GB – தேவைக்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.
- Android 15
ஃபாசல் பீமா யோஜனா (PMFBY) – பயிர் காப்பீடு திட்டம்!
iii) பேட்டரி (Battery):
- திறன்: 6000mAh (நாளைக்கு மேலாக பேட்டரி நீடிக்கும்)
- சார்ஜிங்: 45W வேக சார்ஜிங் – குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும்.
iv) கேமரா (Camera):
- பின்புறம் (Rear Camera): 50MP முதன்மை கேமரா – நாள் மற்றும் இரவு நேரத்தில் தெளிவான புகைப்படத்தைத் தரும்.
- முன்புறம் (Front Camera): 16MP செல்ஃபி கேமரா – தெளிவான செல்ஃபி புகைப்படம் எடுக்கவும், வீடியோ காலிங் செய்யவும் உதவும்.
v) உடல் வடிவமைப்பு மற்றும் பாதுகாப்பு (Design & Build):
- அளவு: 162.80 x 74.90 x 7.60 மிமீ
- எடை: 179 கிராம் – கையில் எளிதாக பிடிக்கக்கூடியது.
- IP69 தரச் சான்றிதழ் – தண்ணீர் மற்றும் தூசுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும்.
vi) இணைப்பு (Connectivity):
- Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax.
- GPS.
- Bluetooth v5.40
- USB Type-C.
- 5G, 4G (Dual SIM).
vii) வண்ணங்கள் (Colours):
- முத்து வெள்ளை (Pearl White).
- ஜெய்ப்பூர் இளஞ்சிவப்பு (Jaipur Pink).
- சூட் கிரே (Suede Grey).
viii) விலை (Price):
- இந்தியாவில் ஆரம்ப விலை ரூ. 21,494/- (Flipkart-ல் பிப்ரவரி 16, 2025 நிலவரப்படி).
யாருக்குச் சிறந்தது?
- அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும், வீடியோ, கேமிங்கை விரும்புபவர்களுக்கும், நீண்ட பேட்டரி, 5G தேடும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
Realme 14 Pro 5G
- Official Specs: Realme 14 Pro 5G – Official Website
- Expert Review: Realme 14 Pro 5G Review – GSMArena
சிறந்த 5G பட்ஜெட் போன்கள் – ஒப்பீட்டு அட்டவணை
பிராண்ட் மற்றும் மாடல் | முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை |
ஒப்போ A3X 5G | 6.67″ HD+ (720×1604)120Hz டிஸ்ப்ளே MediaTek Dimensity 63008MP + 5MP கேமரா 5100mAh பேட்டரி 4GB RAM + 64GB/128GBவிலை: ரூ. 8,999/- |
ரெட்மி நோட் 11T 5G | 6.6″ FHD+ (1080×2400)90Hz டிஸ்ப்ளே MediaTek Dimensity 81050MP + 16MP கேமரா 5000mAh பேட்டரி 6GB/8GB RAM + 64GB/128GBவிலை: ரூ. 9,970/- |
சாம்சங் கேலக்ஸி A16 5G | 6.5″ Super AMOLED (1080×2340)60Hz/90Hz டிஸ்ப்ளே MediaTek Dimensity 630050MP + 13MP கேமரா 5000mAh பேட்டரி 6GB/8GB RAM + 128GB/256GB விலை: ரூ.14,990/- |
விவோ V25 5G | 6.44″ FHD+ (1080×2404)90Hz டிஸ்ப்ளே MediaTek Dimensity 90064MP + 50MP கேமரா4500mAh பேட்டரி 8GB/12GB RAM + 128GB/256GBவிலை: ரூ. 20,999/- |
ரியல்மி 14 ப்ரோ 5G | 6.77″ டிஸ்ப்ளே MediaTek Dimensity 730050MP + 16MP கேமரா 6000mAh பேட்டரி8GB RAM + 128GB/256GB விலை: ரூ. 21,499/- |
இந்த ஒவ்வொரு மாடலும் தனித்துவமான சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. உங்களின் தேவைகளுக்கு ஏற்ப சிறந்த 5G ஸ்மார்ட் போனை இந்தப் பதிவின் மூலம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
சிறந்த 5G பட்ஜெட் போன்கள் – FAQs
1) 5G ஸ்மார்ட் போன் வாங்குவது அவசியமா?
- 5G தொழில்நுட்பம் வேகமான இணையத்தை (Internet) வழங்குகிறது. இணையத்தில் வீடியோ பார்ப்பது, ஆன்லைன் கேமிங், பெரிய ஆப்களைப் பதிவிறக்குவது போன்றவற்றை வேகமாக செய்ய முடியும். அதனால் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 5G போன் வாங்குவது நல்ல தேர்வாக இருக்கும்.
2) 5G போனில் எல்லா இடங்களிலும் 5G நெட்வொர்க் சிக்னல் கிடைக்குமா?
- தற்போது பெரும்பாலான நகரங்களில் 5G சேவை கிடைக்கிறது. ஆனால் சில கிராமப்புற பகுதிகளில் 5G கிடைப்பது வரை 4G இணையத்தை நீங்கள் பயன்படுத்தலாம். அதற்குத் தகுந்த ஸ்மார்ட் போனை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
3) ரூ. 10,000-க்கு கீழ் நல்ல 5G போன் எது?
- ரூ.10,000-க்கு கீழ் வாங்குவதற்கு சிறந்த 5G போன்கள் Oppo A3X 5G (ரூ. 8,999/-) மற்றும் Redmi Note 11T 5G (ரூ. 9,970/-) ஆகியவை ஆகும்.
4) 5G போன்களில் 4G SIM பயன்படுத்த முடியுமா?
- ஆமாம், 5G போன்களில் 4G SIM-ஐ பயன்படுத்தலாம். 5G SIM கிடைக்கும்வரை 4G சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
5) சிறந்த பேட்டரிபாதுகாப்பிற்கு சிறந்த 5G போன் எது?
- அதிக பேட்டரி திறன் கொண்ட 5G போன் Realme 14 Pro 5G ஆகும். இது 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும், இதை நீண்ட நேரம் சார்ஜ் இல்லாமல் பயன்படுத்தலாம்.
மொபைல் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு – 10 பயனுள்ள டிப்ஸ்!
இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com
Key Insights & Best Takeaways
In 2025, budget 5G smartphones deliver exceptional value, combining high-speed connectivity, efficient performance, and impressive battery life. Devices like Realme 14 Pro 5G, Redmi Note 11T 5G, and Samsung Galaxy A16 5G offer 5G access without breaking the bank. These phones also pack AMOLED displays, solid camera setups, and future-ready processors. For users seeking affordable 5G phones, this list highlights the top choices under ₹20,000.