ஆகஸ்ட் மாத ராசிபலன் 2025 : ஆகஸ்ட் மாதம் 2025-யில் பல ராசிகளின் வாழ்கையில் முக்கியமான திருப்பங்கள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. சிலருக்கு அதிர்ஷ்டமும் வளர்ச்சியும் கிடைக்கும், மற்றவர்களுக்கு சவால்கள் ஏற்படக்கூடும்.
இந்தப் பதிவில்
ஆகியவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ஆகஸ்ட் மாத ராசிபலன் 2025
மேஷம்
இந்த மாதம் உங்களுக்குச் சாதகமான பலன்கள் அதிகமாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பயணம் செல்லும்போது மட்டும் கவனமாக இருங்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலக வேலைகளில் சில அலைச்சல்கள் இருந்தாலும், உங்கள் திறமையால் நல்ல பெயர் பெறுவீர்கள்.
குடும்பத்தில் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மேலும், மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
இந்த மாதம் உங்களுக்கு மிகவும் யோகமான மாதமாக இருக்கும். பணவரவு கூடும். சொத்து சம்பந்தமான காரியங்கள் நல்ல முறையில் முடியும்.
புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.
குடும்பப் பிரச்சனைகள் தீரும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வெளிநாட்டுப் படிப்புக்கான முயற்சிகள் பலன்களைத் தரும்.
Read also : மீன ராசி பலன் 2025 : சதுர்கிரக யோகத்தால் பண வரவு!
மிதுனம் – ஆகஸ்ட் மாத ராசிபலன் 2025
இந்த மாதம் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டு. புத்திசாலித்தனத்தால் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.
கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதால், மற்றவர்களிடம் மதிப்பு உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காண புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள்.
கடகம்
இந்த மாதம் நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பேச்சுத் திறமையால் சிறப்பாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள்.
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, ஒற்றுமை நிலவும். மாணவர்களுக்குப் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
Read also : 21 நாள் பரிகாரம் : இழந்த சொத்தை திரும்பப் பெறலாம்!
சிம்மம்
இந்த மாதம் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மைகள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு கூடும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை மாறி விற்பனை அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் அமைதி நிலவும். மாணவர்கள் சக மாணவர்களிடம் கவனமாகப் பழக வேண்டும்.
கன்னி – ஆகஸ்ட் மாத ராசிபலன் 2025
இந்த மாதம் தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல தகவல்கள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடம் கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவது நல்லது.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். மாணவர்கள் சக மாணவர்களிடம் பழகும்போது கவனமாக இருப்பது நல்லது.
துலாம்
இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு பெறலாம். குடும்பத்தில் சந்தோஷமான சூழல் நிலவும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள்.
விருச்சிகம்
இந்த மாதம் எதிர்பார்த்த நல்ல பலன்கள் கிடைக்கும். காரியத் தடைகள் விலகும். தொழில் வியாபாரத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நிதானம் தேவை.
மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு ஆர்வமாகப் படிப்பார்கள்.
Read also : எலுமிச்சை பரிகாரம் – வீட்டில் செய்ய வேண்டியது!
தனுசு
இந்த மாதம் உங்கள் பேச்சுத் திறமையால் காரியங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தியாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகளைப் பெறுவார்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் பலனளிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மகரம்
இந்த மாதம் உங்களுக்கு அனைத்தும் நல்லதாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். தொழில் வியாபாரத்தில் வியாபாரப் போட்டிகள் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த உயர்வைப் பெறுவார்கள்.
கும்பம்
இந்த மாதம் உங்கள் கவலைகள் நீங்கும். செய்யும் காரியங்களில் சில தடங்கல்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் சாதகமாக முடியும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைத்து முன்னேற்றம் அடைவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனத்துடன் ஈடுபடுவார்கள்.
Read also : குருப்பெயர்ச்சி பலன் 2025 – அதிர்ஷ்டமான 5 ராசிகள்!
மீனம் – ஆகஸ்ட் மாத ராசிபலன் 2025
இந்த மாதம் உங்கள் உடல்நலக் குறைபாடுகள் அகலும். மனதில் இருந்த கவலைகள் நீங்கும். பயணங்களின்போது கவனமாக இருப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. மாணவர்கள் படிப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
ஆகஸ்ட் மாத ராசிபலன் 2025 – FAQs
1) இந்த மாதத்தில் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும்? மேஷம், ரிஷபம், மிதுனம்,
கடகம், சிம்மம், கன்னி, துலாம், மகரம் ஆகிய ராசிகளுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
2) ஆகஸ்ட் மாதம் சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ள ராசிகள் எவை?
கும்பம், மீனம் போன்ற ராசிகள் சில அலைச்சல்களையும், தடைகளையும் சந்திக்க நேரிடும்.
3) இந்த மாதத்தில் மாணவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்ன?
அனைத்து ராசி மாணவர்களும் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், இதுபோன்ற சிறந்த தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Key Insights & Best Takeaways
This month (August 2025) brings significant growth and fortune for many signs, particularly Aries, Taurus, and Gemini, while others like Aquarius may face some challenges. Success across all signs hinges on patience and hard work, with an emphasis on effective communication and focus for students.