ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை – என்ன நடந்தது?

ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை (Apple Hey Siri Issue)

ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை : கடந்த சில ஆண்டுகளாக “ஆப்பிள் ஐஃபோன்” என்று சொன்னாலே மக்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கின்றது. அந்த அளவிற்கு ஐஃபோன் பிரியத்தில் மக்கள் மூழ்கி இருக்கின்றனர். ஐஃபோன் நிறுவனமும் அதற்கு ஏற்றவாறு பல அப்டேட்களை செய்து மக்களைக் கவரும் வகையில் வியாபாரம் செய்து வருகின்றது.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் ஐஃபோனில் “சிரி” என்ற மென்பொருளைப் பயன்படுத்திப் பயனர்களின் தகவல்களை ஒட்டுக் கேட்பதாக வழக்கு தொடரப்பட்டது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சவாலாகிவிட்டது.

ஆப்பிள் நிறுவனத்தின் மேல் வழக்கு

ஆப்பிள் நிறுவனம் தனது மெய்நிகர் உதவியாளராணா “சிரியைப்” பயன்படுத்தி பயனர்களின் உரையாடல்கள் மற்றும் தகவல்களை உரிமையின்றிப் பதிவு செய்ததாகவும், அந்த டேட்டாக்களை விளம்பரதாரர்களுக்குப் பகிர்ந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் கலிஃபோர்னியாவில் உள்ள ஓக்லாண்டின் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 5 ஆண்டுகள் பழமையானதாகும். செப்டம்பர் 2014 முதல் 2021 வரை வைத்திருந்த ஆப்பிள் பயனர்களை இந்த வழக்கு பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆப்பிள் ஹே சிரி

ஹே சிரி iOS 17 பிழை (Hey Siri iOS 17 Bug)
iOS 17 update பின் ஹே சிரி செயலிழப்பு
ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை – வழக்கின் முக்கியமான குற்றச்சாட்டுகள்

ஆப்பிள் ஹே சிரி என்ற ஆர்வத்தைத் தூண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சிரி என்கின்ற மென்பொருள் ஆப்பிள் சாதனங்களில் நிகழும் உரையாடல்களைப் பதிவு செய்து வந்ததாக குற்றச்சாட்டு வந்துள்ளது.

இந்தப் பதிவுகள் குறிப்பாக பயனர்கள் ஆர்வம் கொண்ட பொருட்களின் சம்பந்தப்பட்ட விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை – ஆப்பிள் நிறுவனத்திற்கு அபராதம்
Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

ஆப்பிள் ஹே சிரி இந்த வழக்கை முடிப்பதற்கு $ 95 மில்லியன் அபராதம் செலுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த வழக்கு ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

சிரி பொருத்தப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்திய தகுதி உடைய பயனர்கள் $ 20 வரை நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 2014 முதல் 2021 வரை ஐஃபோனில் சிரி  பயன்படும் சாதனங்களை வைத்திருந்த பயனர்கள் இழப்பீடு கோரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஹே சிரி – நீதிமன்றத் தீர்ப்பு

மக்கள் இந்த வழக்கின் தீர்ப்பிற்காக அமெரிக்க மாவட்ட நீதிபதி “ஜெப்ரி வைட்டின்” ஒப்புதலுக்குக் காத்திருக்கின்றனர். இந்த வழக்கு பிப்ரவரி 14, 2025 அன்று விசாரணைக்கு வர இருக்கின்றது.

இந்தத் தீர்வு அங்கீகரிக்கப்பட்டால் அனைத்து பயனர்களும் தகுதியின் அடிப்படையில் இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தின் நிலை

ஆப்பிள் ஹே சிரி பிரச்சனை இதில் ஆப்பிள் நிறுவனம் எந்தத் தவறும் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், தன்னுடைய நிறுவனத்தின் தனி உரிமைப் பாதுகாப்பை நிலை நிறுத்தும் முயற்சிகளில் ஆப்பிள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.

இந்த வழக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தனி உரிமை அர்ப்பணிப்புக்கு ஒரு முக்கிய உதாரணமாகவும், நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியாகவும் மக்கள் மத்தியில் பார்க்கப்படுகின்றது.

மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து! வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox 

Key Insights & Best Takeaways!

Apple’s Hey Siri feature is facing glitches after the iOS 17 update, causing frustration for users.
Many reported issues like delayed responses, missed commands, and voice assistant errors.
This Apple Siri problem has triggered debates on AI performance and privacy.
Experts suggest software updates may fix the Siri bug, but user trust is shaken.
It highlights how AI glitches in smartphones can affect daily usability.

Comment Box

    Scroll to Top