தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 2,500க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப, கூட்டுறவு சங்கங்களின் ஆட்சேர்ப்பு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
கூட்டுறவு வாங்கி வேலைக்கான முக்கிய தகுதிகள்
கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அத்துடன், கூட்டுறவுப் பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி (Diploma in Cooperative Management) அல்லது உயர் கூட்டுறவுப் பயிற்சி (Higher Diploma in Cooperative Management) பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், கூட்டுறவுப் படிப்புகளில் பி.ஏ., எம்.ஏ. அல்லது எம்.காம். முடித்தவர்களுக்கு இப்பயிற்சியிலிருந்து விலக்கு உண்டு. விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம்
கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகத்தின் இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் https://drbtvr.in/ என்ற தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆனால், எஸ்சி, எஸ்டி, ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டுமே.
விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 29, 2025 ஆகும்.
Read also : LIC AAO Recruitment 2025 : 841 காலியிடங்கள் – டிகிரி இருந்தா போதும்!
தேர்வு முறை
கூட்டுறவு வங்கி வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு 200 வினாக்களைக் கொண்டதாக இருக்கும், அதில் கூட்டுறவு மேலாண்மை, பொது அறிவு, தமிழ் உள்ளிட்ட பாடங்கள் இடம் பெறும்.
எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் முறையே 85:15 என்ற விகிதத்தில் கணக்கிடப்படும். தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.23,640 முதல் ரூ.96,395 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
சாணக்கிய நீதி

பொறுமையும் புத்திசாலித்தனமும் சேர்ந்த வாழ்கை நெறிகளை போதிக்கும் சாணக்கிய நீதி கதைகள் விரைவில் வருகிறது…!
எந்த நேரத்தில் இந்த கதைகளை வெளியிடலாம்னு நீங்க சொல்றீங்களா?
உங்க விருப்பமான நேரத்தை கீழ கமெண்ட்ல சொல்லுங்க!
Key Insights & Best Takeaways
The recruitment drive by the Cooperative Societies Recruitment Board aims to fill over 2,500 assistant vacancies across Tamil Nadu cooperative banks. Key eligibility criteria include holding a bachelor’s degree and a cooperative training diploma, with an exemption for those with B.A., M.A., or M.Com. degrees in cooperative studies. The selection process involves a written exam and an interview, with a final date to apply of August 29, 2025. Successful candidates will receive a competitive salary ranging from ₹23,640 to ₹96,395 per month.
Read also : IBPS Recruitment 2025 : 10000 காலியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி தேதி
தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!
தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox










