• Home
  • சினிமா
  • Suriya 45 : RJ Balaji இயக்கத்தில் புதிய படம் அறிவிப்பு!

Suriya 45 : RJ Balaji இயக்கத்தில் புதிய படம் அறிவிப்பு!

Suriya 45 புதிய படம் அறிவிப்பு | RJ Balaji இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம்

Suriya 45 : சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் சூர்யா 45.

நடிகர் சூர்யா சமீப காலமாக நடித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அந்தத் தோல்விகளை எல்லாம் மறக்கடிக்கும் வகையில் ஒரு தரமான படமாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

ரெட்ரோ திரைப்படத்தின் பின்னடைவு

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட போதும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Read also : Mr Zoo Keeper Release Date – CWC புகழின் முதல் படம்! Mr Zoo Keeper Release | CWC புகழ் நடிக்கும் முதல் திரைப்படம்

இந்தத் தோல்விக்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்த ரெட்ரோ திரைப்படம் கடந்த மே 1, 2025 அன்று வெளியானது.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான ரெட்ரோ, கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் சூர்யா ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கம் – Suriya 45

நடிகர் சூர்யா, முதன்முறையாக இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜியின் இயக்கத்தில் நடித்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா 45 என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்தப் படம் எந்த வகையான கதைக்களத்தைக் கொண்டிருக்கும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

Read also : கஜினி 2 படம் எப்போது? ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்! கஜினி 2 படம் எப்போது? | Ghajini 2 Release Update by AR Murugadoss | Tamil Cinema News

டைட்டில் டீசர் வெளியீடும், புதிய தலைப்பும் – Suriya 45

ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 20, 2025 அன்று சூர்யா 45 படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளதகாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்தப் படத்திற்கு கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக வேட்டைக்கருப்பு என்று தலைப்பு வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில், தற்போது கருப்பு என்று சுருக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கதைக்களம் மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம்

இந்தப் படத்தில் சூர்யா அய்யனாராக நடிப்பதாக முதலில் கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் ஒரு வழக்கறிஞராக அவதாரம் எடுத்து, சமகாலத்தில் நடக்கும் பிரச்சனைகளைச் சரி செய்யும் விதமாக ஆர்.ஜே. பாலாஜி படத்தின் கதைக்களத்தை அமைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், சிங்கம் படத்திற்குப் பிறகு, இந்தப் படத்தில் சூர்யாவை ஆர்.ஜே. பாலாஜி மிகவும் மாஸாகக் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read also : மூக்குத்தி அம்மன் 2 – படப்பிடிப்பு தொடங்கியது! மூக்குத்தி அம்மன் 2 First Look – Nayanthara as Goddess Returns

திரிஷாவுடன் ரீ-என்ட்ரி மற்றும் படக்குழு

Suriya 45 – இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகை திரிஷா, சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவிதா, அனகா மாயா ரவி, இந்திரன்ஸ், சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன. இந்தத் திரைப்படம் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சூர்யா தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways

Suriya 45, directed by R.J. Balaji, is generating high anticipation as Suriya’s comeback after recent film disappointments like Retro. The film’s title teaser is set to release on June 20, 2025, with the likely title “Karuppu.” Suriya reportedly plays a lawyer addressing contemporary issues, promising a “mass” role similar to his “Singam” character, and also features Trisha in a comeback role alongside him.

014k Likes
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *