Norway Chess 2025 : கார்ல்சன் Champion, குகேஷ் தோல்வி

Norway Chess 2025 போட்டியில் கார்ல்சன் வெற்றி | Carlsen beats Gukesh in Norway Chess 2025

Norway Chess 2025 : நார்வே செஸ் சூப்பர் போட்டி முடிவடைந்துள்ளது. இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் மூன்றாவது இடத்தைப் பிடித்து இந்திய ரசிகர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளித்துள்ளார்.

குகேஷ் தோல்வி மற்றும் இடம்பிடிப்பு

இறுதிச் சுற்றில் குகேஷ், ஃபாபியானோ கருவானாவை எதிர்கொண்டார். நேரம் நெருக்கடி காரணமாக ஒரு முக்கியமான தவறைச் செய்ததால், குகேஷ் இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி அவருக்கு முதல் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பறித்தது. அவர் மொத்தமாக 14.5 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்தார். கருவானா 15.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

Read also : மகளிர் கிரிக்கெட் 2025 – இலங்கை அணியின் New ODI list! இலங்கை மகளிர் ஒடிஐ அணியின் பட்டியல் | Sri Lanka Women’s ODI Cricket Squad 2025

கார்ல்சன் சாம்பியன் பட்டம் – Norway Chess 2025

மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை வென்று, தனது 7-து நார்வே செஸ் பட்டத்தைப் பெற்றார். முன்னதாக, குகேஷ் கார்ல்சனை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, குகேஷ் உலக சாம்பியனாக இருக்கும் நிலையில், இந்த முறை நார்வே செஸ் பட்டத்தையும் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாதது இந்திய செஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மகளிர் பிரிவு முடிவுகள்

மகளிர் பிரிவில், உக்ரைனைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் 16.5 புள்ளிகளுடன் பட்டத்தை வென்றார். இறுதிச் சுற்றில் அவர் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி-யிடம் ஆர்மெகட்டான் டை-பிரேக்கில் தோற்றாலும், சாம்பியன் பட்டத்தை வென்றார். வைஷாலி 11 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தார். மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை கோனேரு ஹம்பி, ஜூ வென்ஜூனுக்கு எதிரான கிளாசிக்கல் போட்டியை டிரா செய்து, ஆர்மெகட்டானில் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் தொடரை நிறைவு செய்தார்.

புள்ளி வழங்கும் முறை

இந்தத் தொடரில், கிளாசிக்கல் விளையாட்டில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகள் வழங்கப்படும். ஒருவேளை போட்டி டிரா ஆனால், இரு வீரர்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும். அதன் பின்னர் ஆர்மெகட்டான் டை-பிரேக் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவருக்கு கூடுதலாக 0.5 புள்ளிகள் வழங்கப்படும்.

Ghibli Image Scam Alert – சைபர் க்ரைம் எச்சரிக்கை! Fake Ghibli படம் முறைகேடாக பயன்படுத்தப்படுகிறது | Ghibli Image Misuse in Cyber Crime Scam

Norway Chess 2025 – FAQs

1) நார்வே செஸ் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
மேக்னஸ் கார்ல்சன் 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

2) இந்திய கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ் எந்த இடத்தைப் பிடித்தார்?
டி. குகேஷ் 3வது இடத்தைப் பிடித்தார்.

3) மகளிர் பிரிவில் நார்வே செஸ் பட்டத்தை வென்றவர் யார்?
உக்ரைனைச் சேர்ந்த அன்னா முசிச்சுக் மகளிர் பிரிவில் பட்டத்தை வென்றார்.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

நியூட்ரினோ ஆராய்ச்சி 2025 – முடிவுக்கு வருமா? இந்தியா நியூட்ரினோ ஆராய்ச்சி 2025 நிலை (India Neutrino Research 2025 Status)

Key Insights & Best Takeaways

Norway Chess 2025Magnus Carlsen clinched his 7th Norway Chess title, showing his continued dominance. Indian Grandmaster D. Gukesh finished third after a crucial last-round loss, despite having beaten Carlsen earlier. The tournament also featured strong performances from Indian women chess players, R. Vaishali and Koneru Humpy. The unique scoring system added an interesting dynamic to the competition.

014k Likes
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *