கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்!

கோடைக்கால உணவுகள்- Healthy & Cooling Foods – Best Hydrating Fruits & Drinks for Summer

கோடைக்கால உணவுகள் : கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது உடல் நலனைப் பாதுகாப்பதும், நீர்ச்சத்தைத் தக்கவைப்பதும் அவசியமாகும். வெயில் காலத்தின்போது உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சிறந்த கோடைக்கால உணவு முறைகளை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்..

கோடைக்கால உணவுகள் என்பது வெப்பத்தின் கடுமையைத் தணிக்கும் பொதுவான உணவு வகைகளாகும். இதில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் உள்ளன. இவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் சூடு தனிவதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தண்ணீர் நம் உடலுக்கு அடிப்படைத் தேவையாகும். இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சீராக செயல்பட உதவுகிறது. கோடைக் காலத்தில் வியர்வை மூலம் அதிக அளவு நீர் வெளியேறுவதால், உடலில் நீர் இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். சரியான அளவில் தண்ணீர் குடிப்பதால், உடலின் வெப்பநிலை கட்டுக்குள் இருப்பதோடு, சருமம் வறண்டு போகாமல் இருக்கும்.

இதன் மூலம், சிறுநீரகங்கள் சரியாக செயல்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. எனவே, தண்ணீரை உடலுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்வது அவசியமாகும். வெயில் நேரத்தில் வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வது நல்லது. தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிப்பதன் மூலம், உடல் எப்போதும் நீர்ச்சத்துடன் இருக்கும்.

அது மட்டுமில்லாமல், போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் தலைவலி, சோர்வு போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். கோடைக் காலத்தில் மட்டுமில்லாமல், எல்லா காலங்களிலும் சரியான அளவு தண்ணீர் குடிப்பது, ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

கோடைக்காலம் சிறந்த Hydrating Fruit – Watermelon உடலுக்கு Refresh & Cool Effect
Watermelon – Best Summer Cooling Fruit! உடல் தாகம் குறைக்க & Hydration அதிகரிக்க சிறந்த தேர்வு.

கோடைக்கால உணவுகள் பட்டியலில் தர்பூசணி வெறும் நீர்ச்சத்து கொண்ட பழம் மட்டுமில்லாமல், இதில் வைட்டமின் – ஏ (Vitamin – A), வைட்டமின் – சி (Vitamin – C) மற்றும் பொட்டாசியம் (Potassium) போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

இவை ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள லைகோபின் (Lycopene) என்னும் ஆன்டிஆக்சிடென்ட் (Antioxidant), சருமத்தை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

இது குறைந்த கலோரி கொண்டிருப்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. மேலும், வெயில் காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கவும், உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் தர்பூசணியை அடிக்கடி எடுத்துக் கொள்வது மிகவும் நல்லதாகும். எனவே, தர்பூசணி வெயில் காலத்திற்கு ஏற்ற சிறந்த உணவாகும்.

சின்ன வெங்காயம் ஒரு சிறந்த இயற்கை மருத்துவப் பொருளாகும். இதில் கந்தகச் சத்துக்கள் (Sulphur compounds) அதிக அளவில் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், சின்ன வெங்காயம் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. கோடைக் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்சனைகளுக்கும் இது நல்ல தேர்வாகும்.

இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் (Antioxidants), உடலின் செல்களில் சேதம் ஏற்படுவதைத் தடுக்கின்றன. சின்ன வெங்காயத்தை சாம்பார், குழம்பு போன்ற பல்வேறு உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு சின்ன வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தாலே நிவாரணம் கிடைக்கும்.

எனவே, கோடைக் காலத்தில் உடலைக் குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள சின்ன வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாகும்.

கோடைக்கால உணவு - கோடைக்காலத்தில் உடல் Cool & Hydrated ஆக Best Veggie!
Cucumber – Summer Body Cooling & Hydration க்கு சிறந்த Natural Choice!

கோடைக்கால உணவுகள் பட்டியலில் வெள்ளரிக்காயில் வெறும் நீர்ச்சத்து மட்டுமில்லாமல், இதில் வைட்டமின் – கே (Vitamin – K), பொட்டாசியம் (Potassium) மற்றும் மெக்னீசியம் (Magnesium) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இவை உடலில் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

வெள்ளரிக்காயில் கலோரிகள் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். வெயில் காலத்தில் சருமம் வறண்டு போகும் வாய்ப்பு உள்ளது. அப்போது வெள்ளரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால், சருமம் ஈரப்பதமாகி பளபளப்பாகும்.

மேலும், வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவுவது சருமத்தை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும். கண்களைச் சுற்றி கருவளையம் இருந்தால், வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களில் வைப்பது நல்லது.

கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் சூட்டைத் தணித்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வெள்ளரிக்காய் ஒரு சிறந்த இயற்கைத் தீர்வாகும்.

தலைப்புமுழு விவரம்
மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!Click here…
உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள்Click here…
6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி!Click here…
முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்!Click here… 

தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் (Probiotic) உணவாகும். இதில் நம் குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. கோடைக் காலத்தில் ஏற்படும் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு தயிர் ஒரு சிறந்த நிவாரணியாகும்.

இதில் கால்சியம் (Calcium) சத்து அதிக அளவில் இருப்பதால், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நல்லது. தயிரை அப்படியே சாப்பிடலாம், அல்லது மோர், லஸ்ஸி போன்ற பானங்களாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

வெயில் காலத்தில் சருமம் சிவந்து போனாலோ, அல்லது எரிச்சல் ஏற்பட்டாலோ, தயிரைத் தடவினால் குளிர்ச்சி அளிக்கும். தயிர் உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

கோடைக் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க தயிர் ஒரு சிறந்த உணவுப் பொருளாகும்.

கோடைக்கால உணவுகள் -  Best Hydration & Electrolytes Provider
Coconut Water – உடலுக்கு Instant Energy & Minerals தரும் Nature’s Best Drink!

கோடைக்கால உணவுகள் பட்டியலில் இளநீர் ஒரு இயற்கையான எலக்ட்ரோலைட் (Electrolyte) பானம் ஆகும். வெயில் காலத்தில் வியர்வை மூலம் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகளை (Mineral salts) இது உடனடியாக ஈடு செய்ய உதவுகிறது.

இதில் சோடியம் (Sodium), பொட்டாசியம் (Potassium), கால்சியம் (Calcium) மற்றும் மெக்னீசியம் (Magnesium) போன்ற முக்கியமான தாதுக்கள் சரியான அளவில் உள்ளன. சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கும் இளநீர் மிகவும் நல்லது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த புத்துணர்ச்சி பானம் ஆகும். இளநீரை அப்படியே பருகுவது மிகவும் நல்லது.

குளிர்பானங்களைத் தவிர்த்து இளநீர் குடிப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். கோடைக் காலத்தில் ஏற்படும் உடல் சோர்வு, தலைச் சுற்றல் போன்ற பிரச்சனைகளுக்கு இளநீர் ஒரு உடனடி நிவாரணம் ஆகும்.

புதினா ஒரு சிறந்த மருத்துவ மூலிகை ஆகும். இதில் மென்தால் (Menthol) என்ற இயற்கையான பொருள் உள்ளதால், இது உடலுக்குக் குளிர்ச்சியான உணர்வை அளிக்கிறது. புதினா செரிமானத்திற்கு மிகவும் நல்லதாகும். மேலும், இது வயிற்று வலி, வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.

அது மட்டுமில்லாமல், இது குமட்டல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. புதினாவை துவையல் செய்தோ, அல்லது சட்னி செய்தோ சாப்பிடலாம். கிரீன் டீ (Green tea) தயாரிக்கும் போது சில புதினா இலைகளை சேர்த்தால், அது ஒரு புத்துணர்ச்சியான பானமாக இருக்கும்.

கோடைக் காலத்தில் மோர் அல்லது எலுமிச்சை சாறு தயாரிக்கும் போது புதினா இலைகளை நசுக்கி சேர்ப்பதால், அதன் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் அதிகரிக்கும்.

புதினாவிற்கு ஆன்ட்டி – பாக்டீரியல் (Anti -bacterial) மற்றும் ஆன்டி – இன்ஃப்ளமேட்டரி (Anti – inflammatory) பண்புகள் உள்ளதால், இது வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், சருமப் பிரச்சனைகளைக் குறைக்கவும் உதவுகிறது.

கோடைக் காலத்தில் உடலைக் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க புதினாவை பல்வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோடைக்கால உணவுகள் பட்டியலில் கற்றாழை உடல் வெப்பத்தைத் தணிப்பது மட்டுமில்லாமல், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பொருளாகும். இதில் உள்ள ஆன்ட்டி – ஆக்சிடன்ட்கள் (Anti – oxidants), உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.

கற்றாழைச் சாறு, செரிமான அமைப்பை சீராக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. மேலும், இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. வெயில் காலத்தில் சருமம் வறண்டு போவது, அல்லது சூரிய ஒளியால் பாதிப்படைவது பொதுவானதாகும்.

அப்போது கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவினால் சருமம் ஈரப்பதமாகி குளிர்ச்சியாகும். தீக்காயங்கள் மற்றும் வெயிலினால் ஏற்படும் சரும சிவப்பிற்கும் இது ஒரு சிறந்த நிவாரணி ஆகும். அது மட்டுமில்லாமல், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் கற்றாழை மிகவும் நல்லது.

இது முடி உதிர்வைத் தடுக்கவும், பொடுகைக் குறைக்கவும் உதவுகிறது. கற்றாழைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம், அல்லது மற்ற பழச்சாறுகளுடன் கலந்தும் பருகலாம். கோடைக் காலத்தில் உடலை ஆரோக்கியமாகவும், குளிர்ச்சியாகவும், சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்திருக்க கற்றாழை ஒரு சிறந்த தீர்வாகும்.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின்கள் (Vitamins), தாதுக்கள் (Minerals) மற்றும் நார்ச்சத்து (Fibre) ஆகியவை ஏராளமாக நிறைந்துள்ளன. கோடைக் காலத்தில் நாம் உண்ணும் உணவில் கீரை போன்ற காய்கறிகளை சேர்த்துக் கொள்வதால், உடலில் நீர் சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது.

புரோக்கோலியில் (Broccoli) உள்ள ஆன்டி – ஆக்சிடன்ட்கள் (Anti – oxidants), உடலைத் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிடம் (Free radicals) இருந்து பாதுகாக்க உதவுகின்றன. காலிஃப்ளவரில் (Cauliflower) உள்ள சல்பர் கலவைகள் (Sulphur compounds), நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.

மேலும், பச்சைக் காய்கறிகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். இவற்றை சமைத்தோ, அல்லது பச்சையாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

இது கோடைக் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்சனைகளைத் தவிர்க்கவும், உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. ஒவ்வொரு வகை பச்சைக் காய்கறிகளிலும் வெவ்வேறு வகையான சத்துக்கள் நிறைந்துள்ளதால், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

கோடைக்கால உணவுகள் பட்டியலில் மோர் ஒரு சிறந்த புரோபயாடிக் (Probiotic) பானமாகும். தயிரைக் கடைந்து எடுப்பதால் அதில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கும். அவை செரிமானத்தை எளிதாக்கி, வயிற்றில் ஏற்படும் அசோகர்யங்களைக் குறைக்க உதவுகின்றன. கோடைக் காலத்தில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டைப் போக்க மோர் ஒரு சிறந்த தீர்வாகும்.

இதில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மோரில் கால்சியம் (Calcium), பொட்டாசியம் (Potassium) போன்ற தாதுக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. அவை உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்டுகளை (Electrolyte) வழங்குகின்றன.

மேலும், இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவிகிறது. மோரில் சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லி அல்லது புதினாவை சேர்த்து அருந்தினால், அதன் சுவையும், மருத்துவக் குணங்களும் அதிகரிக்கும். வெயில் காலத்தில் மத்திய உணவு அல்லது இரவு உணவுக்குப் பிறகு மோர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

மற்ற குளிர்பானங்களுக்குப் பதிலாக மோர் குடிப்பது ஆரோக்கியமான பழக்கமாகும். கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தணித்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு மோர் ஒரு இயற்கையான தீர்வாகும்.

Citrus Fruits – கோடைக்காலத்தில் Vitamin C & Hydration அதிகரிக்கும் Healthy Fruits
Lemon, Orange, Sweet Lime – கோடைக்கால உடல் Immunity & Hydration க்கு சிறந்த Vitamin C Fruits!

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் – சி மட்டுமில்லாமல், ஆன்ட்டி – ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில் உள்ள வைட்டமின் – சி (Vitamin – C), நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதனால், கோடைக் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். சிட்ரஸ் பழங்களில் உள்ள ஆன்ட்டி – ஆக்சிடன்ட்கள் (Anti – oxidants), உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை (Free radicals) எதிர்த்து போராட உதவுகின்றன.

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அப்படியே சாப்பிடலாம், அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம். எலுமிச்சை சாற்றை தண்ணீரில் கலந்து குடிப்பதால், உடல் நீரேற்றமாக இருப்பதுடன் புத்துணர்ச்சியோடும் இருக்கும். சிட்ரஸ் பழங்களில் உள்ள நார்ச்சத்து (Fibre) செரிமானத்திற்கும் உதவுகிறது.

கோடைக் காலத்தில் ஏற்படும் சருமப் பிரச்சினைகளைத் தடுக்கவும், சருமத்தைப் பொலிவாக வைத்திருக்கவும் வைட்டமின் – சி உதவுகிறது. எனவே, கோடைக் காலத்தில் சிட்ரஸ் பழங்களை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இவை வெயிலின் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமில்லாமல், உடலுக்குத் தேவையான பல நன்மைகளையும் அளிக்கின்றன.

கோடைக்கால உணவுகள் பட்டியலில் அவகேடோ ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதில் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் (Monounsaturated fats) அதிக அளவில் உள்ளதால், இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

அவகேடோவில் வைட்டமின் – கே (Vitamin – K), வைட்டமின் – இ (Vitamin – E), வைட்டமின் – சி (Vitamin – C), பொட்டாசியம் (Potassium) மற்றும் ஃபோலேட் (Folate) போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மற்ற கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், உடலில் வெப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால், அவகேடோவில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், உடலை ஈரப்பதத்தோடு வைத்திருக்க உதவுகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து (Fibre), செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

அவகேடோவை சாலட்களில் சேர்த்துக் கொள்ளலாம், அல்லது சாண்ட்விச்களில் தடவி சாப்பிடலாம். இதன் மென்மையான அமைப்பு மற்றும் லேசான சுவை, பல்வேறு விதமான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வசதியாக இருக்கும்.

அது மட்டுமில்லாமல், இது சருமத்திற்குப் பொலிவான தோற்றத்தையும் அளிக்கும். கோடைக் காலத்தில் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நீர்ச்சத்தைப் பெறுவதற்கு அவகேடோ ஒரு சிறந்த தேர்வாகும்.

1) கோடைக்கால உணவுகள் பட்டியலில் உடல் சூட்டைக் குறைக்க முக்கியமானது எது? 

கோடையில் உடல் சூட்டைக் குறைக்க முக்கியமானது தண்ணீர் ஆகும்.

2) கோடைக்கால உணவுகள் பட்டியலில் எந்தப் பழத்தில் 90% நீர்ச்சத்து உள்ளது? 

தர்பூசணிபழத்தில் 90% நீர்ச்சத்து உள்ளது.  

3) சின்ன வெங்காயம் எதற்கு நல்லது? 

சின்ன வெங்காயம் உடலைக் குளிர்ச்சியாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நல்லது.

4) வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை? 

வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடல் சூடு குறையும், மலச்சிக்கல் போகும்.

5) தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் என்ன செய்யும்? 

தயிரில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவும்.

நம் உடலைப் பாதுகாப்பாக வைத்திருக்க இந்த 12 கோடைக்கால உணவுகள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றை உங்களின் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் சூடு தணிந்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

During summer, maintaining body temperature is crucial to avoid dehydration and heat-related issues. Consuming hydrating foods like watermelon, cucumber, and coconut water helps keep the body cool and refreshed. Curd and buttermilk support digestion and boost gut health, while mint and aloe vera provide cooling effects and improve immunity. Adding citrus fruits and green vegetables to your diet enhances hydration, energy levels, and overall well-being.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top