மூக்குத்தி அம்மன் 2 – படப்பிடிப்பு தொடங்கியது!

மூக்குத்தி அம்மன் 2 First Look – Nayanthara as Goddess Returns

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு : மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. முதல் பாகத்தின் வெற்றி, இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்துள்ளது. 

மூக்குத்தி அம்மன் முதல் பாகம்

2020-ஆம் ஆண்டு ஆர். ஜே. பாலாஜி மற்றும் என். ஜே. சரவணன் இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம், ஆன்மீகத்தை வணிகமாக்கும் போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில் கதைக்களம் அமைந்தது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார்-ல் (Disney + Hotstar) நேரடியாக வெளியான இந்தப் படம், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அஞ்சலக மாத வருவாய் திட்டம் MIS vs TD – எது சிறந்தது? அஞ்சலக மாத வருவாய் திட்டம் மற்றும் டைம் டெப்பாசிட் comaprison | Post Office MIS vs TD Best Scheme 2025

முதல் பாகத்தின் ஆன்மீகக் கருத்துக்களும், நயன்தாராவின் தெய்வீக நடிப்பும், ஆர். ஜே. பாலாஜியின் நகைச்சுவையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக வரவுள்ள  மூக்குத்தி அம்மன் – 2 திரைப்படம் மேலும் ஆழமான ஆன்மீகக் கருத்துக்களையும், சமூக செய்திகளையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Wales Films International) தயாரிப்பில், சுந்தர். சி இயக்கத்தில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் மூக்குத்தி அம்மன் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று (06.03.2025) பிரம்மாண்டமாகத் தொடங்கியது.

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நட்சத்திரங்களின் சங்கமம்

மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங் ஸ்பாட் – Temple set in Tamil Nadu
கோவையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அம்மன் கோவில் செட்

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிப் ஹாப் ஆதி இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும், ரெஜினா கசாண்ட்ரா, அபிராமி வெங்கடாசலம், இனியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

யோகி பாபு, துனியா விஜய், கருடா ராம், சிங்கம் புலி ஆகியோர் நகைச்சுவை மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் ரவி மோகன், நடிகைகள் குஷ்பூ, மீனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

முதல் காட்சியே நடிகை நயன்தாரா, அம்மன் வேடத்தில் நடிக்கும் காட்சியுடன் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. 

டேனிங் நீங்க சருமம் பொலிவாக – 5 சமையலறை டிப்ஸ்! டேனிங் நீக்கும் வீட்டு முறைகள் – Natural skin glow tips in Tamil

மூக்குத்தி அம்மன் 2 இயக்குநர் & கதைக்களம்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (Wales Films International) நிறுவனத்தின் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், தயாரிப்பு ரீதியாகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாகக்  கூறப்படுகிறது.

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்தப் படம், அதிகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாத் ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தப் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர். சி-யின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரூ.5000க்கு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் – பட்டியல்! ரூ.5000க்கு Best Budget Smartphones List 2025

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் பெற எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Key Insights & Best Takeaways!

  • Mookkuthi Amman 2 shooting has officially begun! Directed by RJ Balaji, this sequel is expected to blend spirituality and social themes with modern cinematic flair.
  • Nayanthara likely reprises her divine role, supported by a new cast lineup.
  • The shooting kickstarted near Coimbatore and Madurai, hinting at temple-rich locations.
  • Sequel promises a fresh storyline, vibrant visuals, and a thought-provoking message.
  • Huge fan excitement on social media – trending hashtags are already lighting up platforms.
  • Targeted release: Pongal 2026 or Summer 2026.
  • Expectations are high as the film aims to combine tradition with progressive themes once again.

Comment Box

    Scroll to Top