“முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்!”

இயற்கையான முறையில் முடி வளர்ச்சி - Natural Hair Growth Techniques
  • முடி அடர்த்தியாக வளர: பொதுவாக அழகான, ஆரோக்கியமான கூந்தலைப் பெற வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும்.
  • அதற்காக சிலர் விலை உயர்ந்த எண்ணெய்கள், ஷாம்பூக்கள், ஹேர் ட்ரீட்மென்ட்களைப் பயன்படுத்தி முடி வளர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வர். ஆனால், அதிலும் பெரும்பாலும் மாற்றத்தைக் காண முடியாது. 
  • காரணம், நம் கூந்தலின் உண்மையான ஆரோக்கியம் வெளியில் போடும் பொருட்களை வைத்துக் கிடையாது; உள்ளே உட்கொள்ளும் உணவுகளை வைத்துதான் நம்முடைய முடி வளர்ச்சி இருக்கும். 
  • நம்முடைய கூந்தல்தான் நம்மைப் பற்றிய பல விஷயங்களைச் சொல்லும். அது ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால் நம்முடைய உடல்நலம் நல்ல நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டும். அதுவே வறண்ட கூந்தல், அதிக முடி உதிர்வு போன்றவை தவறான உணவு முறை மற்றும் உடல் சுகாதாரக் கோளாறுகள் இருப்பதைக் குறிக்கும். 
  • அதனால், முடி அடர்த்தியாக வளர எந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் நல்லது என்று நம்மில் பல பேருக்குக் கேள்வியாக இருக்கும். நம்முடைய தினசரி உணவில் மாற்றம் கொண்டு வந்தாலே கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 
  • ஆம், நம் வீட்டில் இருக்கக்கூடிய உணவு முறைகளைப் பின்பற்றி வந்தாலே உடலுக்கும், முடிக்கும் நல்ல போஷாக்கு கிடைக்கும். நீங்கள் உங்கள் கூந்தலை வலுவாகவும், மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற விரும்புகிறீர்களா? 
  • உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள். 

ஆகிய முடி அடர்த்தியாக வளர தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்களை விரிவாக வழங்கியுள்ளோம். அதைப் பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

முடி அடர்த்தியாக வளர சிறந்த உணவுகள்

முடி வளர்ச்சிக்கு முட்டை ஹேர் மாஸ்க் - Egg Hair Mask for Hair Growth
முட்டையின் புரதச்சத்து முடி வளர்ச்சிக்கு மிகச் சிறந்தது!

1) முட்டை

முடி அடர்த்தியாக வளர பல்வேறு வகையான எண்ணெய்கள், ஷாம்புகள், ஹேர் மாஸ்க்குகள் ஆகிய பல பொருட்களைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், உண்மையான ஆரோக்கியம் என்பது நம் உடலுக்குள் இருந்து தான் வருகிறது. அதற்கு முக்கியமான பெஸ்ட் உணவுகளில் ஒன்று முட்டை. முட்டையில் புரோட்டீன் (Protein), பயோட்டின் (Biotin), வைட்டமின்கள் (Vitamin) ஆகிய பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

i) புரோட்டீன் (Protein)

முடியின் முக்கிய வளர்ச்சியூட்டும் சத்தாக இருப்பது புரோட்டீன்.  

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் இருப்பதால் அது முடியின் வேர்களைப் பலப்படுத்தி, வளர்ச்சியைத் தூண்டுகிறது. இதனால் முடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

ii) பயோட்டின் (Biotin – Vitamin B7)

முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமான வைட்டமின்களில்  பயோட்டினும் ஒன்றாகும். 

ஏனென்றால், இது முடி உடைவதைத் தடுப்பது மட்டுமில்லாமல், கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கிறது.

iii) வைட்டமின் A (Vitamin A):

நம்முடைய தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும் தன்மை உள்ளது. இது  முடியை ஈரப்பதத்தோடு வைத்துக்கொண்டு  உலர்வதைத்  தடுக்கும். 

வைட்டமின் A  இயற்கையான எண்ணெய் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இதனால் முடி மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். 

iv) வைட்டமின் D (Vitamin D)

முடியின் வேர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் புதிய முடி வளரும். 

வைட்டமின் D முடியின் வேர்களைத் தூண்டி, புதிதாக முடி வளர்வதை அதிகரிக்கிறது. 

v) ஃபோலேட் (Folate – Vitamin B9):  

தலைப்பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல், முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஃபோலேட் வழங்குகிறது. 

இது கூந்தலின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

vi) துத்தநாகம் (Zinc):

முடியின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் துத்தநாகம் மிகவும் முக்கியமாக இருக்கிறது.

முடி செல்கள் பழுதடையாமல், ஆரோக்கியமாக புதுப்பிக்க துத்தநாகம் உதவுகிறது.

7 Days Diet Plan – உடல் எடை குறைக்க தமிழ் டிப்ஸ் 2025! நீரிழிவு நோயாளிகளுக்கான 7 நாள் உணவுத்திட்டம் | 7-Day Diet Plan for Diabetic Patients in Tamil

vii) செலினியம் (Selenium)

முடி அடர்த்தியாக வளர தேவையான மற்றும் முக்கியமான ஊட்டச்சத்துகளை செலினியம் அனுப்புகிறது.

இது தலைமுடியின் சக்தியை அதிகரித்து, முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

இது தலையில் ஏற்படும் டான்ட்ரஃப் (Dandruff) மற்றும் பாதிப்புகளைக் குறைத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

உணவில் சேர்த்துக்கொள்ளும் முறை:

முட்டையைத் தினமும் காலை வேளையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

முட்டை ஆம்லெட் (Omlet), ஸ்கிரம்பிள் ஏக் (Scrambled Egg) போன்ற உணவுகளாக செய்து சாப்பிடலாம். 

முட்டையின் வெள்ளைக் கருவை கூந்தலுக்குப் பயன்படும் ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.

முடி அடர்த்தியாக வளர – பாதாம் மற்றும் எள் விதைகள்

முடி அடர்த்தியாக வளர பாதாம் முடி சத்து நன்மைகள் - Almonds for Hair Nutrition
பாதாமில் உள்ள வைட்டமின் E மற்றும் மினரல்கள் முடி வளர்ச்சிக்கு உதவுகின்றன.

நீண்ட மற்றும் பளபளப்பான தலைமுடிக்கு பாதாம் மற்றும் எள் விதைகள் முக்கிய பங்குகள் வகிக்கின்றன. இவற்றில் முடி வளர்ச்சிக்குத்  தேவையான புரதங்கள் (Proteins), வைட்டமின்கள் (Vitamins), கொழுப்பு அமிலங்கள் (Fatty acids) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

A) பாதாம்

பாதாம் நம்முடைய உடலுக்கு மட்டுமில்லாமல், முடிக்கும் சிறந்த ஊட்டச்சத்துக்களை வழங்கும் உணவாக இருக்கிறது. 

i) புரோட்டின் (Protein)

பாதாமில் முடி வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டின் உள்ளது. 

ii) வைட்டமின் E (Vitamin E)

பாதாமில் உள்ள வைட்டமின் E முடியின் வேர்களைப் பலப்படுத்தி, கூந்தலின் பளபளப்பை அதிகரிக்கிறது. 

iii) வைட்டமின் B (Vitamin B)

பாதாமில் இருக்கும் வைட்டமின் B முடி வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. 

iv) கொழுப்பு அமிலங்கள் (Fatty acids)

பாதாமில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

B) எள் விதைகள்

எள் விதைகள் (Sesame seeds) உடலுக்கு மட்டுமில்லாமல், முடிக்கும் நல்ல சக்தியைத் தரும். 

i) தாமிரம் (Copper)

எள் விதைகளில் உள்ள தாமிரம், முடியின் நிறத்தை அதிகரிக்கும் மெலனின் (Melanin) உற்பத்தியைத் தூண்டி, நரை முடியை வரவிடாமல் தடுக்கிறது.  

ii) துத்தநாகம் (Zinc)

இது முடி வளர்ச்சிக்குத் தேவையான செல்களை உறுதிப்படுத்தி, கூந்தல் விரைவாக வளர உதவுகிறது.

iii) கொழுப்பு அமிலங்கள் (Fatty acids)

இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள், தலையில் உள்ள தோல் உலர்வதைத் தடுக்கும். 

உணவில் சேர்த்துக்கொள்ளும் முறை

காலை உணவுடன் 5-6 பாதாம்களை நன்கு ஊறவைத்து சாப்பிடலாம்.

எள் விதைகளை சாதத்தில் அல்லது ரசத்தில் சேர்த்துச் சாப்பிடலாம்.

பதஞ்சலி ஆயுர்வேதம் – இயற்கை முடி பராமரிப்பு..

அவகேடோ பழம் (Avocado fruit)

முடி அடர்த்தியாக வளர அவகேடோ ஹேர் மாஸ்க் மூலம் முடி அடர்த்தி - Avocado Hair Mask for Thick Hair
அவகேடோ – ஹேர் மாஸ்க் இயற்கையான – சதைப்புப் பொருளாக முடியை ஈரமாக வைத்திருக்க உதவுகிறது.

இது உங்கள் கூந்தல் வலுவாகவும், பளபளப்பாகவும் மாறும். இதில் முடி அடர்த்தியாக வளர தேவையான வைட்டமின்கள் (Vitamins), தாதுக்கள் (Minerals) மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

i) ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் (Healthy fatty acids)

அவகேடோ பழத்தில் மோனோ அன்சாசுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (Mono unsaturated Fatty acids) நிறைந்துள்ளது.

இது தலையில் உள்ள தோலுக்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி, முடியை உலர்வதிலிருந்து பாதுகாக்கிறது.

இது முடியை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும்.

ii) வைட்டமின் C & E (Vitamin C & E)

முடி வளர்ச்சிக்குத் தேவையான கல்லாஜன் (Collagen) உற்பத்தியை  வைட்டமின் C அதிகரிக்கிறது.

முடி செல்களை ஆக்கிரமிக்கும் மொத்த மூலக்கணுக்கள் (Free Radicals)  பாதிப்பிலிருந்து வைட்டமின் E பாதுகாக்கிறது, இதனால் முடி ஆரோக்கியமாக வளரும்.

iii) ஃபோலேட் (Vitamin B9)

இது முடி செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.

இது தலையில் உள்ள தோலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சென்றடைய உதவுகிறது.

iv) வைட்டமின் K (Vitamin K)

இது முடி வேர்களை (hair follicles) வலுப்படுத்தி, முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது.

இது தலையில் உள்ள தோலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

உணவில் சேர்த்துக்கொள்ளும் முறை

அவகேடோ பழத்தைக் காலை உணவுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.ஸ்மூத்திகளில் சேர்த்துப் பருகலாம்.

முடியை மென்மையாக மாற்ற, “அவகேடோ பழத்துடன் தேங்காய் எண்ணெய்” சேர்த்து ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம்.

மேயோ கிளினிக் – முடி வளர்ச்சி & முடி உதிர்வு தடுப்பு..

கொழுப்பு நிறைந்த மீன்கள்

முடி அடர்த்தியாக வளர கொழுப்பு மீன் நன்மைகள் - Fatty Fish Benefits for Hair Growth
ஓமெகா-3 கொழுப்புச்சத்து கொண்ட மீன்கள் முடியின் வேர்களை ஊட்டுகின்றன.

முடியை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள கொழுப்பு நிறைந்த மீன்கள் (Fatty fish) முக்கிய பங்கு வகிக்கிறது. கொழுப்பு நிறைந்த மீன்களில்  முடிக்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (Omega 3 fatty acids), புரதம் (Protein) மற்றும் முக்கியமான வைட்டமின்கள் (Vitamins) நிறைந்துள்ளன.

i) ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega 3 fatty acids)

முடி வேர்கள் (Hair follicles) ஆரோக்கியமாக இருக்க, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இது தலைமுடிக்குத் தேவையான ஈரப்பதத்தை வழங்கி, முடியை உலர்வதிலிருந்து பாதுகாக்கிறது.

தலையில் உள்ள தோலின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய முடி வளர்வதை அதிகரிக்கும்.

ii) வைட்டமின் B (Biotin & B12)

முடி வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வைக் குறைக்க  பயோட்டின் (Biotin) உதவுகிறது.

தலைமுடி செல்களின் வளர்ச்சியை ஊக்குவித்து, முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை வைட்டமின் B12 வழங்குகிறது.

iii) வைட்டமின் D (Vitamin D)

புதிய முடி வளர்ச்சிக்கு வைட்டமின் D முக்கியமானது.

முடி வேர்களைத் (Hair follicles) தூண்டி, முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.

எந்த மீன்கள் சிறந்தவை?

சால்மன் (Salmon):  இதில் அதிக அளவு ஒமேகா-3, புரோட்டீன் மற்றும் வைட்டமின் D உள்ளது.

ரோஹு (Rohu): இதில் ஒமேகா-3 மற்றும் வைட்டமின் B12 அதிகமாக உள்ளது.

பாம்ஃப்ரெட் (Pomfret): இது முடி ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல கொழுப்புகளால் நிறைந்துள்ளது.

உணவில் சேர்த்துக்கொள்ளும் முறை

வறுக்காமல் கிரில் (Grill) அல்லது ஸ்டீம் (Steam) செய்து சாப்பிடலாம்.

மீன் குழம்பு செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வாரத்திற்குக் குறைந்தபட்சம் 2-3 முறை கொழுப்பு நிறைந்த மீன்களை சேர்த்துக் கொள்வது முடிக்கு நல்லது.

NCBI – அலோவேரா முடி வளர்ச்சிக்கு தரும் நன்மைகள்..

கீரை வகைகள்

கீரை வகைகளில் குறிப்பாக பசலைக் கீரையை எடுத்துக் கொண்டால் முடி அடர்த்தியாக வளர தேவையான சத்துக்கள் இருக்கும். இதில் இரும்புச் சத்து (Iron), ஃபோலேட் (Folate), வைட்டமின் A மற்றும் C போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

3 சிறந்த மருத்துவ கீரைகள் – உடல்நலத்திற்கு கவசம்! 3 சிறந்த மருத்துவ கீரைகள் தேர்வு - Best Medicinal Greens for Health

i) இரும்புச்சத்து (Iron)

இரத்த ஓட்டத்தை அதிகரிக்க இரும்புச்சத்து உதவுகிறது. இது தலைமுடிக்குத் தேவையான ஆக்ஸிஜனை (Oxygen) எடுத்துச்செல்ல உதவுகிறது.

இதனால் முடியின் வேர்கள் (Hair follicles) பலம் பெற்று, முடி உதிர்வைக் குறைக்கும்.

ii) ஃபோலேட் (Folate / Vitamin B9)

முடி வளர்ச்சிக்கு முக்கியமான கேரட்டின் (Keratin) மற்றும் புரதங்களை உருவாக்க ஃபோலேட் உதவுகிறது.

இது தலைமுடி செல்களின் வளர்ச்சியை அதிகரித்து முடியை வலுவாக்குகிறது.

உணவில் சேர்த்துக்கொள்ளும் முறை

கீரை குழம்பு அல்லது கீரை கடைசல் செய்து சாப்பிடலாம்.கீரை சப்பாத்தி அல்லது கீரை சேர்த்த சாலட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

கீரை ஜூஸ் அல்லது ஸ்மூத்தி செய்து பருகலாம்.முடி உதிர்வதற்கான காரணங்கள் இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வது சாதாரணமாகிவிட்டது.

முடி உதிர்வதால் அதன் அடர்த்தி குறைந்து, சில நேரங்களில் வழுக்கைப் பிரச்சனையும் ஏற்படுகிறது.

இந்த முடி உதிர்வுக்குப் பல்வேறு வகையான காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் சிலவற்றை பற்றிப் பார்ப்போம்.

முடி அடர்த்தியாக வளர சிறந்த இயற்கை எண்ணெய்கள்..

i) பரம்பரைக் காரணிகள் (Genetic Hair Loss):

பெண்கள் வழுக்கை (Female Pattern Baldness) என்பது மரபு ரீதியாக வரும் முடி உதிர்வு ஆகும்.இது பொதுவாக முடி மெலிந்து போவதையும், அடர்த்தி குறைவதையும் ஏற்படுத்துகிறது.இது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வயதானதால் ஏற்படும்.தீர்வு: பயோட்டின் (Biotin), இரும்புச்சத்து, ஒமேகா-3 நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும்.

அடல் பென்ஷன் யோஜனா-மாதம் ₹5000 வரை ஓய்வூதியம்! அடல் பென்ஷன் யோஜனா ஓய்வூதிய திட்டம் - Atal Pension Yojana Pension Scheme

ii) ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மருத்துவக் காரணங்கள்:

கர்ப்பம், பிரசவம், மெனோபாஸ் (Menopause), பொலிசிஸ்டிக் ஓவேரி சிண்ட்ரோம் (Polycystic ovary syndrome – PCOS) போன்ற ஹார்மோன் மாற்றங்கள் முடி உதிர்வை அதிகரிக்கும். அலோபீசியா அரேட்டா (Alopecia Areata) போன்ற நோய்கள், தலையில் உள்ள தோலில் சிறு வெற்று இடங்களைத் தோன்றவைத்து முடி உதிர்வை ஏற்படுத்தும்.

தீர்வு: மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சீரான உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

iii) மருந்துகள் மற்றும் பக்க விளைவுகள்:

சில புற்றுநோய், இதய நோய், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கும் மருந்துகள் முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.

சில நேரங்களில் அதிகமான வைட்டமின் A (Vitamin A) மருந்துகள் கூட முடி உதிர்வை அதிகரிக்கலாம்.

தீர்வு: மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

iv) மன அழுத்தம் (Stress & Anxiety)

நீண்ட நாட்களாக மன அழுத்தம் இருந்தால், தற்காலிக முடி உதிர்வு ஏற்படும்.இதை டெலோஜன் எஃப்ளுவியம் (Telogen Effluvium) எனக் குறிப்பிடுவர்.தீர்வு: தினமும் யோகா, மெடிடேஷன் செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

v) ரசாயனங்கள் & ஹேர் ட்ரீட்மென்ட் (Chemicals & Hair Treatments):

முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்பதற்காக ப்ளீச்சிங் (Bleaching), ஸ்டிரெய்ட்னிங் (Straightening), ஹெவி ஹேர் கலர் (Heavy Hair colour) போன்றவை பயன்படுத்தப்படுகிறது இது முடியைப் பலவீனப்படுத்தும்.ஹேர் ஸ்ப்ரே (Hair spray),  ஹேர் ஜெல் (Hair gel), ஹேர் விக்ஸ் (Hair Wigs) போன்ற பொருட்கள் தலைமுடிக்குத் தீங்கு விளைவிக்கலாம்.தீர்வு: இயற்கையான எண்ணெய்களைப் (தேங்காய், பருத்தி, கஸ்தூரி மஞ்சள்) பயன்படுத்தி தலைமுடியைப் பராமரிக்க வேண்டும்.

கோடைக்கால உணவுகள் : உடலுக்கு நல்ல 12 தேர்வுகள்! கோடைக்கால உணவுகள்- Healthy & Cooling Foods – Best Hydrating Fruits & Drinks for Summer

முடி உதிர்வைக் குறைக்க என்ன செய்யலாம்?

i) நன்மை தரும் உணவுகள்: முடி அடர்த்தியாக வளர தேவையான புரதம் (Protein), இரும்புச்சத்து (Iron), ஒமேகா-3 (Omega – 3) போன்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ளலாம்.

ii) தினசரி எண்ணெய் மசாஜ்: தேங்காய் எண்ணெய் அல்லது கொடிமூங்கில் எண்ணெய் மூலம் தலையை மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளரும்.

iii) மருத்துவரை அணுகுதல்: அதிக முடி உதிர்வு இருந்தால், உடல்நிலை சோதனை செய்து ஹார்மோன் (Hormone), இரும்புச்சத்துக் குறைபாடு (Iron deficiency) இருக்கிறதா என்பதைப் பரிசோதித்துக் கொள்வது நல்லதாகும்.

முடி அடர்த்தியாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் அட்டவணை

உணவுஊட்டச்சத்துக்கள்பயன்கள்சேர்க்கும் வழிமுறைகள்
முட்டைபுரோட்டீன், பயோட்டின், வைட்டமின் A & D, ஃபோலேட், துத்தநாகம், செலினியம்முடியை வலுப்படுத்தி, பளபளப்பாக மாற்றும்ஆம்லெட், ஸ்கிரம்பிள், ஹேர் மாஸ்க்
பாதாம் & எள் விதைகள்வைட்டமின் E & B, துத்தநாகம், கொழுப்பு அமிலங்கள்முடி வேர்களை வலுப்படுத்தி, உதிர்வைக் குறைக்கும்காலை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்
அவகேடோ பழம்வைட்டமின் C, E, K, ஃபோலேட், கொழுப்பு அமிலங்கள்முடியை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும்ஸ்மூத்தி, சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்
கொழுப்பு நிறைந்த மீன்கள்ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B12 & Dமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, உதிர்வைத் தடுக்கும்கிரில், ஸ்டீம், மீன் குழம்பு
கீரை வகைகள்இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் A & Cமுடியை வலுவாகவும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும்கீரை குழம்பு, சப்பாத்தி, ஜூஸ்
பளபளப்பான சருமம் – 5 வீட்டு நிவாரணங்கள் 2025 பளபளப்பான சருமம் பெற வீட்டு நிவாரணங்கள் | 2025 Glowing Skin Home Remedies in Tamil
  • அழகான மற்றும் ஆரோக்கியமான முடி என்பது ஒரே நாளில் கிடைக்காது. நாம் செய்யும் சிறிய மாற்றங்களின் மூலம் பெரிய மாற்றங்கள் ஏற்படும். 
  • “சரியான உணவுப் பழக்கம், சரியான முடி பராமரிப்பு மற்றும் மன அழுத்தம் இல்லாமல் இருத்தல்” ஆகியவை மூலம் உங்கள் முடி இயற்கையாகவே வளரும். எனவே, தினமும் நம் முடியைப் பொக்கிஷம் போல் பார்த்துக் கொண்டு, முடியை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்வோம்! இது குறித்து முக்கியக் கேள்விகளுக்கான பதில்களைப் பின்வருமாறு பார்ப்போம்

FAQs

1) முடி உதிர்வை எப்படித் தடுக்கலாம்?

முடி உதிர்வைத் தடுப்பதற்குப் புரதம், இரும்புச்சத்து, ஒமேகா – 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது வேண்டும். மேலும், தினமும் தேங்காய் எண்ணெயால் தலையை மசாஜ் செய்ய வேண்டும். அதிக முடி உதிர்வு இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது.

2) முடி உதிர்வை ஏற்படுத்தும் வைட்டமின் குறைபாடு எது?  

முடி உதிர்வை ஏற்படுத்தும் முக்கியமான வைட்டமின் குறைபாடுகளில் வைட்டமின் D, B7 (பயோட்டின்), B12, மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவை அடங்கும். இந்தக் குறைபாடுகளை சரி செய்ய, உணவில் சரியான ஊட்டச்சத்துக்களை சேர்த்துக் கொள்வது நல்லது.

3) முடி அடர்த்தியாக வளர எத்தனை நாட்கள் ஆகும்?

முடி அடர்த்தியாக வளர இயற்கையான முறையில் குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் ஆகலாம். உணவுமுறை, உடல் ஆரோக்கியம் மற்றும் முடி பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் முடி வளர்ச்சி இருக்கும்.

இதுபோன்ற சிறந்த தகவல்களை பெற எங்களுடன் இணைந்திருங்கள் -tnnewsbox.com

TN NEWS BOX – YouTube link

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Aloe Vera Gel deeply nourishes the scalp, fights dandruff, and stimulates healthy hair regrowth with its natural enzymes and anti-inflammatory properties.
  • Hibiscus Leaves & Flowers are excellent for thickening hair, reducing hair fall, and adding shine by strengthening roots naturally.
  • Coconut Oil Massage improves scalp blood circulation and strengthens hair roots, preventing breakage and promoting long-term growth.
  • Fenugreek (Vendhayam) Paste is protein-rich, strengthens follicles, and reduces hair thinning when used regularly as a mask.
  • Egg Hair Mask is loaded with biotin and protein, making hair stronger, shinier, and visibly thicker.
  • Bonus Tips: Almonds, sesame seeds, avocado, and fatty fish provide internal nourishment essential for dense and healthy hair growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *