- போலி பாதாம் என்பது நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
- தற்போது, அதிகமான பாதாம்கள் மக்கள் வாங்குவதால் சந்தையில் உண்மையான பாதாம்களுடன் “போலியான பாதாம்களும்” அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
- தரக் குறைவான பாதாம் அல்லது பாதாமே இல்லாத ஆப்ரிகார்ட், பீச் விதகைகளை சாயம் பூசி பாதாம் என விற்பனை செய்வது பெருகி வருகிறது.
- இந்நிலையில், உண்மையான பாதாம்களையும், பொய்யான பாதாம்களையும் கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால், போலி பாதாம்களை உட்கொள்வதால் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
- பார்ப்பதற்கும், சுவைக்கும் உண்டான சிறிய மாற்றங்களைக் கண்டறிந்து கொண்டால், நாம் போலி பாதாம்களை எளிதாகக் கண்டறிந்து உடல் நலத்தைப் பாதுகாக்க முடியும்.
- இந்தப் பதிவில் பாதாம் சோதனை முறைகள் குறித்தும், அவற்றின் முக்கிய அடையாளங்கள் குறித்தும் விரிவாகப் பார்ப்போம்.
போலி பாதாம்களை கண்டறிய டிப்ஸ்

வடிவம்
- தரமான பாதம் ஒரு பக்கம் அரை வட்டமாகவும், மறுபக்கம் கூர்மையான முனையுடனும் இருக்கும். போலியான பாதாம் சரியான வடிவில் இருக்காது. மேலும் அது பளபளப்போடு காணப்படும்.
- இப்படி, போலியான பாதாமை எளிதாகக் கண்டறிய முடியும்.
நிறம்
- உண்மையான பாதாம் லேசான பழுப்பு அல்லது பீச் (Peach) நிறத்தில் இருக்கும். போலி பாதாமோ, கண்ணைக் கவரும்படியாகவும், இயற்கைக்கு மாறான நிறத்திலும் இருக்கும்.
- காரணம், இதில் வேதிப்பொருட்களால் நிறங்கள் பூசப்படுகின்றன. இதை எளிதாகக் கண்டறிவதற்கு வெள்ளைத் துணியில் தேய்த்துப் பார்க்கலாம். இதன் மூலம் போலியான பாதாமைக் கண்டறிய முடியும்.
தோல்
- பாதாமின் மேல் புறத்தில் கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கும். போலி பாதாமின் மேல் புறத்தோல் வழவழப்பாக இருக்கும்.
- இல்லையென்றால், அதில் மெழுகு பூசப்பட்டிருக்கும். இதை வைத்துப் போலி பாதாமைக் கண்டறியலாம்.
சுவை
- உண்மையான பாதாமில் இயற்கையான விதையின் சுவை அதிகமாக இருக்கும்.
- ஆனால், போலி பாதாமோ சுவையில்லாமல் அல்லது அதிக இனிப்பாக இருக்கும்.
- இதை வைத்துப் போலி பாதாமை சுலபமாகக் கண்டறியலாம்.
Latest Tamil Health Tips (23.12.2025)
| தலைப்பு | முழு விவரம் |
|---|---|
| மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்! | Click here… |
| உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள் | Click here… |
| 6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி! | Click here… |
| முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்! | Click here… |
விலை
- பாதாமின் விளைவித்தல் செலவுகள், தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி செலவுகள் அனைத்தும் அதிகம் என்பதால் உண்மையான பாதாம் அதிக விலையில்தான் கிடைக்கும்.
- ஆனால், நம்ப முடியாத அளவிற்குக் குறைந்த விலையில் பாதாம் கிடைத்தால் அதை சோதித்துப் பார்ப்பது மிகவும் அவசியமாகும். அதே சமயம், அதிக விலைக்கு வாங்குகிற பாதாம்கள் அனைத்தும் தரமானதாக இருக்கும் என்பதைக் கூற முடியாது.
- அதனால், அவற்றையும் சோதித்துப் பார்ப்பது நல்லதாகும்.
போலி பாதாம் சோதனை
- பாதாம்களைத் தண்ணீரில் போடும்போது பாதாமின் மேல் ஏதாவது பூசப்பட்டிருந்தால், அது மிதக்கும். உண்மையான பாதாம் விதை தண்ணீரில் மூழ்கும்.
- மேலும், செயற்கையாக நிறம் பூசப்பட்ட பாதாம்கள் தண்ணீரில் நிறத்தைக் கலக்கும். இதை வைத்துப் போலியான பாதாம்களைக் கண்டறியலாம்.
தெரிந்துகொள்ள வேண்டியவை
- தொடர்ந்து பாதாம் சாப்பிடும் நபர், பாதாமை சாப்பிடும்போது, சுவையை வைத்து அதன் தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
- விலை உயர்ந்த உணவுப் பொருட்களை நம்பகத்தன்மையான கடைகளில் வாங்குவது நல்லதாகும்.
- மேலும், பாக்கெட்களில் பாதாம்களை வாங்கும்போது அதில் தர உத்தரவாதச் சான்றிதழ்கள் இருக்கிறதா என்பதைச் சரி பார்த்துக் கொள்வது நல்லதாகும்.
இந்த பதிவில்,
போலி பாதாம் எப்படி தெரிஞ்சிக்கலாம்?
பாதாம்களைத் தண்ணீரில் போடும்போது பாதாமின் மேல் ஏதாவது பூசப்பட்டிருந்தால், அது மிதக்கும். உண்மையான பாதாம் விதை தண்ணீரில் மூழ்கும்.
மேலும் இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com தேர்ந்தெடுங்கள்..
எங்கள் YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
அதிகாரப்பூர்வ தகவல்: FSSAI உணவு முறைகேடு வழிகாட்டிகள்
(குறிப்பு: இந்தப் பதிவு தகவலின் அடிப்படையில் மட்டுமே கொடுக்கப்பட்டது).
Key Insights & Best Takeaways!
Worried about fake almonds? Learn easy tricks to identify adulterated almonds and protect your health. Discover simple home tests, expert identification tips, and safe buying practices to ensure purity. Stay aware, stay healthy!











