மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!

மூக்கில் Blackheads நீங்குவதற்கான இயற்கை வழிகள் | Natural Blackhead Removal Tips in Tamil

மூக்கில் Blackheads : மூக்கில் கரும்புள்ளிகள் (Blackheads) மற்றும் வெண்புள்ளிகள் (Whiteheads) வந்து அழகைக் கெடுக்கிறதா? இனி கவலை வேண்டாம்! உங்கள் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே, இந்தத் தலைவலியைப் போக்கி, முகத்தை மீண்டும் மென்மையாக்க சில சுலபமான மற்றும் பயனுள்ள வழிமுறைகளைப் பார்க்கலாம்.

மூக்கில் பிளாக் ஹெட்ஸ் நீக்கும் இயற்கை டிப்ஸ் | Natural Blackhead Removal Home Remedies in Tamil
மூக்கில் பிளாக் ஹெட்ஸ்? சமையலறையில் உள்ள இயற்கை வைத்தியங்கள் இதோ!

வால்நட்கள் (Walnut)

  • ஒரு கைப்பிடி அளவு வால்நட்களைப் பொடி செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு, ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் வால்நட் பொடியுடன் 1/2 ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
  • அதை முகத்தில் தடவி உலர வைத்த பின்பு தண்ணீர் தொட்டு மென்மையாக மசாஜ் செய்தால் மூக்கில் உள்ள பிளாக் ஹெட்ஸ் நீங்கும்.

மூக்கில் Blackheads நீங்க Tipsபச்சைப் பயறு

  • பச்சைப் பயறை அரைத்து, மாவு செய்து கொள்ள வேண்டும். பின்பு, அந்த மாவைக் கொண்டு தினமும் முகத்தைத் தேய்த்துக் கழுவி வர வேண்டும்.
  • இதன் மூலம் மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கும்.

கிரீன் டீ (Green Tea)

  • கிரீன் டீயின் சிறிய பையில் உள்ள பொடியை வைத்தும் கரும்புள்ளிகளை அகற்றலாம். அதற்கு, கிரீன் டீ பொடியைத் தேனுடன் சேர்த்துக் கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • அதை மூக்கில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின்பு குளிர்ந்த நீரால் தடவிய இடத்தைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்து வர மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் அகலும்.

வேர்க்கடலை 

  • வேர்க்கடலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் சிறிது பால் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்தக் கலவையை மூக்கின் மேல் தடவி மென்மையாக 10 நிமிடம் ஸ்கிரப் செய்து கழுவ வேண்டும்.
  • இப்படிச் செய்தால், மூக்கில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி மென்மையாக காணப்படும்.

ஓட்ஸ் பொடி மற்றும் பட்டை 

  • 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன் 1 டீஸ்பூன் பட்டைத் தூளைக் கலந்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின்பு, அதை முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு, அதை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • இப்படிச் செய்யும்போது மூக்கில் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள் அகலும். பட்டை, சருமத் துளைகளை விரிவடையச் செய்து சுத்தம் செய்யும் ஆற்றலைக்  கொண்டது.
  • இதனால், மூக்கில் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள் நீங்கி பளபளவென்று காணப்படும்.
தலைப்புமுழு விவரம்
மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!Click here…
உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள்Click here…
6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி!Click here…
முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்!Click here… 

பேக்கிங் சோடா 

  • 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அதை வெள்ளைப் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு அதைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் வெள்ளைப் புள்ளிகள் நீங்கி சருமத் துளைகள் சுத்தமாகும்.

எலுமிச்சை 

  • எலுமிச்சையில் இருக்கும் “வைட்டமின் சி (Vitamin – C) மற்றும் ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha hydroxy acid)”, சருமத்தில் இருக்கும் எண்ணெய்ப் பசையை நீக்கி, வெள்ளைப் புள்ளிகள் வருவதைத் தடுக்கிறது.
  • அதற்கு எலுமிச்சை சாறினைக் காட்டனில் நனைத்து, அதை வெள்ளைப் புள்ளிகள் வரும் இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு, அதைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வர வெள்ளைப் புள்ளிகள் நீங்கும்.

மூக்கில் Blackheads நீங்க Tips – மஞ்சள் மற்றும் வேப்பிலை

  • மஞ்சள் மற்றும் வேப்பிலையில் நோய் எதிர்ப்புப் பொருள் இருப்பதால் இது வெள்ளைப் புள்ளிகளை நீக்கும். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • அத்தோடு மஞ்சள்தூள் சேர்த்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு அதைக் கழுவ வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் மூக்கில் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள் நீங்கும்.
1) மூக்கில் Blackheads-ஐ நீக்கப் பயன்படுத்தப்படும் 2 பொருட்கள் யாவை?

வால்நட்கள், பச்சைப் பயறு மாவு, வேர்க்கடலை போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

2) வெள்ளைப்புள்ளிகளை நீக்க பேக்கிங் சோடாவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதைத் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

3) எலுமிச்சை சாறில் உள்ள எந்த அமிலம் வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கிறது?

எலுமிச்சையில் உள்ள ஆல்ஃபா ஹைட்ராக்சி ஆசிட் (Alpha Hydroxy Acid) வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கிறது.

Key Insights & Best Takeaways

Blackheads and whiteheads form due to clogged pores and excess oil. Natural remedies like walnut scrub, green tea, baking soda, and lemon juice help remove them. Regular skincare with natural ingredients keeps skin clear and smooth.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Comment Box

    Scroll to Top