Bank Holidays List February 2025 – முழு விடுமுறை விவரம்!

பிப்ரவரி 2025 வங்கி விடுமுறை பட்டியல் | February 2025 Full Bank Holidays List

Bank Holidays List : உங்களுக்கு பிப்ரவரி மாதத்தில் வங்கி சம்பந்தப்பட்ட வேலைகள் இருக்குதா? அப்போ இதப் பத்தி தெரிஞ்சிக்கோங்க மக்களே!

ஏனென்றால், பிப்ரவரி மாதத்தில் பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் காரணமாக பல நகரங்கள் மற்றும் மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

தமிழ்நாடு அல்லாமல் பிற மாநிலங்களில் மகா சிவராத்திரி, சரஸ்வதி பூஜை, குரு ரவிதாஸ் ஜெயந்தி, சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி போன்ற பல விழாக்கள் காரணமாக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை, 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் இருக்கும் வழக்கமான விடுமுறைகளைத் தவிர இந்தப் பண்டிகை நாட்களில் வங்கிகள் இருக்காது.

அதனால், வங்கி விடுமுறைகளை நாம் நினைவில் வைத்துக் கொண்டு வங்கி சம்பந்தப்பட்ட வேலைகளைத் திட்டமிடுவது நல்லதாகும். இந்தப் பதிவில் வங்கி சம்பந்தப்பட்ட விடுமுறை நாட்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

புதிய Realme Buds 360 டிகிரி சவுண்ட் குவாலிட்டி! 360 டிகிரி சவுண்ட் குவாலிட்டி கொண்ட புதிய ரியல்மி பட்ஸ் | Realme Buds 360 Sound

விடுமுறை நாட்கள் – Bank Holidays List

  • பிப்ரவரி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே, அந்த மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாகும்.
  • அதற்குதான் ரிசர்வ் வங்கி, “வங்கி விடுமுறைப் பட்டியலை” முன்கூட்டியே வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகின்றன.
  • இதில் பல்வேறு மாநிலங்களுக்கு வெவ்வேறு நாட்களில் விடுமுறை இருக்கும். விடுமுறைப்  பட்டியலை பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.
2026 தேர்தல் வியூகம்! எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு? 2026 தேர்தல் வியூகம் – எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

பிப்ரவரி மாதம் – Bank Holidays List

விடுமுறை நாட்கள்விடுமுறைக்கான காரணம்
பிப்ரவரி 2, 2025ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 3, 2025சரஸ்வதி பூஜை காரணமாக அகர்தலாவில் (Agartala) வங்கிகளுக்கு விடுமுறை (திங்கட்கிழமை).
பிப்ரவரி 8, 2025மாதத்தின் 2-வது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
பிப்ரவரி 9, 2025ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 11, 2025தைப்பூசம் என்பதால் தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் (செவ்வாய்க்கிழமை). 
பிப்ரவரி 12, 2025குரு ரவிதாஸ் ஜெயந்தி என்பதால் சிம்லாவில் (Shimla) வங்கிகளுக்கு விடுமுறை (புதன்கிழமை). 
பிப்ரவரி 15, 2025Lui-Ngai-Ni காரணமாக இம்பாலில் (Imphal) வங்கிகளுக்கு விடுமுறை (சனிக்கிழமை). 
பிப்ரவரி 16, 2025ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை. 
பிப்ரவரி 19, 2025சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி என்பதால் பேலாப்பூர் (Belapur), மும்பை (Mumbai), நாக்பூர் (Nagpur) ஆகிய நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை (புதன்கிழமை). 
பிப்ரவரி 20, 2025மாநில தினம் என்பதால் ஐஸ்வால் (Aizawl), இட்டாநகரில் (Itanagar) வங்கிகளுக்கு விடுமுறை (வியாழக்கிழமை).
பிப்ரவரி 22, 2025மாதத்தின் 4-வது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
பிப்ரவரி 23, 2025ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை. 
பிப்ரவரி 26, 2025மகா சிவராத்திரி என்பதால் நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை (புதன்கிழமை). 
பிப்ரவரி 28, 2025லூசர் பண்டிகை என்பதால் காங்டாக்கில் (Gangtok) வங்கிகளுக்கு விடுமுறை (வெள்ளிக்கிழமை).

வங்கி சேவைகள் தொடரும்

  • வங்கிகள் மூடப்பட்டாலும், வங்கி தொடர்பான பணிகளை வாடிக்கையாளர்கள் “ஆன்லைன் பேங்கிங்” மூலம் செய்து கொள்ள முடியும்.
  • வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் பயன்பாட்டின் மூலமாக உங்கள் வேலையைச் செய்து கொள்ளலாம்.
  • மேலும். ஏடிஎம் (ATM) மூலமாகவும் வங்கி விடுமுறை நாட்களில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமில்லாமல், “யுபிஐ ட்ரான்ஸாக்க்ஷன்கள்” (UPI Transactions) மூலமாக பணப் பரிவர்த்தனைகளைச் செய்து கொள்ளலாம்.
பெண்கள் காப்பீட்டுத் திட்டம் – 5 கோடி வரை காப்பீடு! பெண்கள் காப்பீட்டுத் திட்டம் - Udyam Bima Policy மூலம் upto 5 crore insurance பெறும் திட்டம்

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்களை!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

Key Insights & Best Takeaways

In February 2025, banks across India will observe holidays on 14 different days due to festivals and regular weekends. Customers are advised to plan their bank-related work accordingly to avoid inconvenience. Online banking, mobile apps, ATMs, and UPI transactions will continue to operate during these holidays. Staying informed about the February 2025 Bank Holidays List helps in better financial planning!

Comment Box

    Scroll to Top