சிறந்த Face Mask டிப்ஸ் – முகத்திற்கு சரியான தேர்வு!

சிறந்த Face Mask டிப்ஸ் | Best Face Mask Tips for Glowing Skin

சிறந்த Face Mask டிப்ஸ் : முகங்களை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வதற்கு ஷீட் மாஸ்க் பயன்படுகிறது. இந்த ஷீட் மாஸ்க்-கள் முகத்திற்குத் தேவையான ஹைட்றேசனைக் (Hydration) கொடுப்பது மட்டுமில்லாமல், சருமத்தில் இருக்கும் வயதான அறிகுறிகளைப் போக்கி மென்மையாக்குகிறது.

முகத்திற்கு Face Mask தேர்வு | How to Choose the Best Face Mask
முகம் பளிச்சென்று இருக்க சிறந்த முகமூடியை தேர்வு செய்யும் டிப்ஸ்
ஷீட் மாஸ்க் டிப்ஸ்

சிறந்த Face Mask டிப்ஸ் – ஷீட் மாஸ்க் முகத்திற்குப் பல நன்மைகளைத் தந்தாலும், இது ஒரே மாதிரியாக உருவாக்கப்படுவதில்லை.  ஷீட் மாஸ்க்  ஒவ்வொரு முக சருமத்திற்கும் ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. ஷீட் மாஸ்க்-களில் உங்களின் சருமத்திற்கேற்ற பொருட்கள் என்னென்ன இருக்கின்றன என்பவற்றைக் கவனித்து வாங்க வேண்டும். இந்த விவரத்தைத் தெரிந்து கொண்டால், உங்களுக்கு ஏற்ற சரியான ஷீட் மாஸ்க்-களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் வசதியாக இருக்கும். இந்தப் பதிவில் சரும வகைகள் பற்றியும், அவற்றிற்கான மாஸ்க்-கள் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

சருமத்தில் தேவையான ஈரப்பதம் இல்லாததால் வறண்ட சருமம் ஏற்படும். இதன் காரணமாக சருமம் அடர்த்தியாகக் காணப்படும். உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் “ஹைலூரோனிக் ஆசிட் (Hyaluronic acid) மற்றும் கிளிசரின் (Glycerin)” கொண்ட Face Mask-கைப் பயன்படுத்தலாம்.

  • இதில் இயற்கையான ஈரப்பதத்தின் பண்பு உள்ளது.
  • இதனால், உங்களின் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும். 
தலைப்புமுழு விவரம்
மூக்கில் Blackheads நீங்க 100% இயற்கை தீர்வுகள்!Click here…
உடல் எடையைக் குறைக்கும் சிறந்த 5 தினைகள்Click here…
6 மாத குழந்தைக்கு திட உணவு – முழு வழிகாட்டி!Click here…
முடி அடர்த்தியாக வளர சிறந்த 5 இயற்கை முறைகள்!Click here… 
கிளிசரின் (Glycerin)
  • இது மிகுந்த ஈரப்பதம் உடைய பராமரிப்புப் பொருளாகும். 
  • இது சருமத்தில் இருக்கும் நீர்ச்சத்தை பாதுகாக்கிறது.

வறண்ட சருமத்திற்காக சிறந்த Face Mask டிப்ஸ், ஹைலூரோனிக் ஆசிட் மற்றும் கிளிசரின் கொண்ட Face Mask-க்குகளை வாரம் 2-3 முறை பயன்படுத்தினால், உங்களின் சருமம் மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.  

முகத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருந்தால் “எண்ணெய்ப் பசை நிறைந்த சருமம்” (Oily skin) என்று கூறுவர். இதை சரி செய்வதற்கு “சார்கோல் மாஸ்க்-கள் மற்றும் கிளே மாஸ்க்-களைப்” பயன்படுத்தலாம்.

சார்கோல் மாஸ்க் (Charcoal Mask)  
  • சார்கோல் ஒரு இயற்கையான “அப்சார்பன்ட்” (Absorbent) பொருளாகும். 
  • இது சருமத்தில் இருக்கும் அதிக எண்ணெயை எடுத்துக்கொண்டு, முகத்தை சீராக மாற்ற உதவுகிறது. 
  • இது முகத்திற்குக் குளிர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும். 
  • இது முகத்தில் உள்ள துளைகளில் (Pores) இருக்கும் அழுக்கு, மாசு மற்றும் எண்ணெயை உறிஞ்சுகிறது.
கிளே மாஸ்க் (Clay Mask)   
  • கிளே மாஸ்க்-கள், எண்ணெயை விரைவாக உறிஞ்சி, சருமத்தைப் பளிச்சென்று காட்டுகிறது. 
  • இது சருமத்தின் ஆழத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. 
  • இது முகத்தின் எண்ணெய்ப் பசையை சமநிலைப்படுத்தி, சருமத்தை மென்மையாகவும், சுத்தமாகவும் வைக்க உதவுகிறது.
  • உங்களுக்கு மிகவும் சென்சிடிவான சருமம் இருந்தால், கடுமையான பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. 
  • கற்றாழை, காலண்டுலா (மரிகோல்ட் பூ), கிரீன் டீ, கெமோமில் (மூலிகைச் செடி) கொண்ட ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்த வேண்டும். இது உங்களின் உணர்திறன் (sensitive) கொண்ட சருமத்திற்கு மென்மையை அளிக்கும். 
  • அதைப் போல், வாசனைத் திரவியங்கள் கொண்ட  ஷீட் மாஸ்க்-களை சருமத்திற்குப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லதாகும்.
  • உங்கள் முகம் முகப்பருக்களால் பாதிக்கப்பட்டிருந்தால், “சாலிசிலிக் ஆசிட் (Salicylic acid) மற்றும் டீ ட்ரீ ஆயிலைக் (Tea Tree)” கொண்ட ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்துவது நல்லதாகும். இந்தப் பொருட்கள் முகத்தில் உள்ள வீக்கத்தைத் தனித்து, சரும வெடிப்புகள் வராமல் தடுக்கின்றன. 
  • சருமத் துளைகள் அடைபடுவதைத் தடுப்பதற்கு ஹெவியான எண்ணெய்கள் மற்றும் செயற்கை வாசனைத் திரவியங்கள் கொண்ட ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லதாகும்.
  • உங்கள் சருமத்திற்கு ஏற்ற சரியான  ஷீட் மாஸ்க்-களைத் தேர்வு செய்வதற்கும், சருமத்தில் ஏற்படும் அலர்ஜியைத் தடுப்பதற்கும், சருமத்தில் அல்லது கைகளின் சிறிய பகுதியில் “பேட்ச் டெஸ்ட்” செய்துகொள்வது நல்லதாகும். 
  • வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே  ஷீட் மாஸ்க்-களைப் பயன்படுத்துவது நல்லது. அதிகமாகப் பயன்படுத்தினால் அதுவே சருமத்தைப் பாதிக்கக்கூடும்.

தினசரி செய்திகள், உண்மை தகவல்கள் – உங்கள் கையில்!

தினசரி செய்திகள், வேலைவாய்ப்பு செய்திகள், தகவல்கள், மற்றும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் உண்மை தகவல்களை நாங்கள் தருகிறோம்!
உலகம் முழுவதும் நடக்கும் முக்கியமான விடயங்களை நேர்மையாகவும், தெளிவாகவும், உங்கள் கையில் எட்டச்செய்வதே எங்களது நோக்கம்.

நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!

தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com

எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox

  • Choosing the right Face Mask depends on your skin type and specific needs.
  • Natural face masks offer the best results for soft and glowing skin.
  • Always cleanse your face properly before applying any face mask.
  • Regular use of suitable face masks enhances skin brightness and health.
  • Consistent skincare routine is key to achieving naturally radiant skin.

Comment Box

    Scroll to Top