Lenovo Rollable Laptop 2025 – ThinkBook Plus Gen 5 அறிமுகம்!

Lenovo Rollable Laptop 2025 Tamil முன்னோட்டம்

Lenovo Rollable Laptop 2025 :

  • மார்ச், 2025-யில் சந்தைக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இதில் குறைந்த எண்ணிக்கையிலான போர்ட்டுகள் (Ports) மட்டுமே இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மனிதர்களின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான பங்களிப்பாக இருக்கின்றது. இது வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களில் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. கணினிகள், இணையம், செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ் போன்ற பல தொழில்நுட்பங்கள் உலக அளவில் தனித்துவமான மாற்றங்களை உருவாக்கி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது மடிக்கணினி நிறுவனமான “லெனோவா” 360 டிகிரி ரோலபில் லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக வெளியிட்டுள்ளது.

Lenovo ThinkBook Plus Gen 5 ஸ்பெக் & டிசைன்
ThinkBook Plus Gen 5 – ரோலபில் டிசைன் மற்றும் அம்சங்கள்

லெனோவா நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான “ரோலபில் லேப்டாப்பை” அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது “நீட்டிக்கக்கூடிய திரை” கொண்ட ஒரு சாதனமாக அமைய உள்ளது. இந்த வகை லேப்டாப்கள் தற்போது உள்ள மடிக்கக்கூடிய லேப்டாப்கள் மற்றும் 360 டிகிரியுடன் கூடிய லேப்டாப்களை விட மிகவும் வசதியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது நவீன தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான வடிவமைப்பின் கலவையாக அமைந்துள்ளது.

Lenovo Rollable Laptop சிறப்பம்சங்கள்

1) ரோலபில் டிஸ்ப்ளே:

லேப்டாப்பின் ஸ்கிரீன் முதலில் 14 இன்ச் அளவில் இருக்கும். அதில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தும் போது, மோட்டார் இயக்கத்தின் மூலம் திரையின் அளவு 16.7 இன்ச் அளவிற்கு நீட்டிக்கப்படும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் வேலை செய்யும் போதும், படிக்கும் போதும் விரிவான திரையைப் பெற முடியும்.  இந்த டிஸ்ப்ளே தொழில்நுட்பம் அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Realme-யின் புதிய 14 Pro & Pro+5G Smart  ஃபோன்கள்!  Realme 14 Pro 5G புதிய போன் – 2025 Launch Tamil

2) லேப்டாப்பின் செயல்திறன்:

இந்த லேப்டாப்பில் “இன்டெல் கோர் அல்ட்ரா ப்ராசசர்” (Intel Core Ultra Processor) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உயர்ந்த செயல்திறனை வழங்கி ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

மேலும், இந்த வகை லேப்டாப்கள் சிம்பிளாகவும், ஸ்லிம்மாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இதில் குறைந்த எண்ணிக்கையிலான போர்ட்டுகள் (Ports) மட்டுமே இருக்கும்.

3) லேப்டாப்பின் அமைப்பு:

லேப்டாப்பின் மேல் ஒரு பட்டன் இருக்கும். இதன் மூலமாக ரோலபில் திரையை இயக்கலாம். அது மட்டுமில்லாமல், லேப்டாப்பின் வடிவமைப்பு ஸ்லிம்மாகவும், எளிமையானதாகவும் இருப்பதால் இந்த வகை லேப்டாப்களை ஈசியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இது லெனோவா நிறுவனத்தின் பிரபலமான “திங் புக்” (Think Book) தொடரில் உள்ள புதிய மாடலாக அறிமுகமாகும் என்று வெளியிட்டுள்ளது.

OnePlus 13 & 13R: புதிய மொபைல்கள் அறிமுகம்! OnePlus 13 & 13R வெளியீடு (OnePlus 13 and 13R Launch)

4) லேப்டாப்பின் விலை:

இந்த லேப்டாப்பின் விலை சுமார் $ 3500 (இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சம்). இந்த விலையானது அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் இல்லை என்றாலும், இது தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஒரு முக்கியமான தயாரிப்பாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

Lenovo Rollable Laptop அறிமுகம்

லெனோவா நிறுவனம் தங்களது ரோலபில் லேப்டாப்பை கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ, 2025 (CES 2025) நிகழ்வில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பின்பு, மார்ச், 2025-யில் சந்தைக்குக் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ரோலபில் லேப்டாப்களின் மூலம் லெனோவா நிறுவனம் சமூகத்திற்குப் “புதிய தொழில்நுட்பத்தை வழங்கிய முன்னோடி” என்ற பெயரைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் வடிவமைப்பு மற்றும் நவீன அம்சங்கள் மூலமாகத் தொழில்நுட்ப உலகில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. இத்தகைய தயாரிப்புகள் உலகளாவிய சந்தைகளுக்கும் ஒரு புதிய பாதையை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இருக்கின்றன.

OnePlus offer 2025 – ரூ.4500 வரை தள்ளுபடி! OnePlus Offer 2025 - ரூ.4500 தள்ளுபடி

Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Lenovo launched its rollable laptop – ThinkBook Plus Gen 5 in 2025, showcasing a revolution in laptop design
  • The rollable display allows vertical screen expansion, enhancing multitasking and portability
  • Performance powered by next-gen Intel Core Ultra processor, large RAM, and SSD storage
  • Combines dual-screen innovation with modern aesthetics – great for creators and professionals
  • Perfect example of how AI and form factor innovation are shaping the future of laptops
  • Lenovo sets a benchmark in foldables to rollables transformation journey

மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…

YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox 

ThinkBook Plus Gen 5 Hybrid (14″ Intel) Station & Tablet – Click Here..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *