Ather 450 Electric Scooter – அம்சங்கள் & விலை விவரம்!

Ather 450 Electric Scooter முன் தோற்றம் – எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய மாடல்

2025-ஆம் ஆண்டு Ather 450 Electric Scooter இந்தியாவில் சனிக்கிழமை (ஜனவரி 4. 2025) அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது 3 வகைகளில் வெளியாகியுள்ளன.

Ather 450 series-இன் வகைகள்

1) Ather 450
2) Ather 450X
3) Ather 450 Apex

இந்தப் புதிய மாடல்கள் இந்தியாவில் விலை உயர்வாக இருந்தாலும், இவை முந்தைய மாடல்களை விடப் புதிய சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன. அவை,

Ather 450 Electric Scooter

1) மல்டி-மோட் டிராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம்:
இது ஓட்டும்போது ஸ்கூட்டரைப் பாதுகாப்பாகக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தொழில்நுட்பமாகும்.

2) மேஜிக் ட்விஸ்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்:
இது ஸ்டாண்டர்டாக அனைத்து மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பம். இது தானாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்து பேட்டரியை சேமிக்க உதவியாக இருக்கும்.

3) ஹை ரேஞ்ச்:
இது பழைய மாடல்களை விட அதிக தூரம் பயணம் செய்யக்கூடிய திறனைக் கொண்டது.

இது Ather நிறுவனத்தின் முந்தைய மாடல்களை விட உயர்ந்த தொழில்நுட்பத்தையும், அதிக பயன்களை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

2025 Ather 450 Series Features and Price!

Ather 450 Electric Scooter விலை விவரங்கள்

Ather 450 Electric Scooter அம்சங்கள் மற்றும் டெக்னிக்கல் விவரம்
Ather 450 – அம்சங்கள் மற்றும் ரேஞ்ச் விவரம்

இந்தியாவில் 2025 Ather 450 series மாடல்களின் விலை விவரங்கள்,

1) Ather 450S:
விலை: ரூ.1,29,999 (எக்ஸ்-ஷோரூம்).

2) Ather 450X:
2.9kWh பேட்டரி: ரூ. 1,46,999 (எக்ஸ்-ஷோரூம்).
3.7kWh பேட்டரி: ரூ. 1,56,999 (எக்ஸ்-ஷோரூம்).

3) Ather 450 Apex:
விலை: ரூ. 1,99,999 (எக்ஸ்-ஷோரூம்).

இந்த மாடல்களை வாங்கும்போது pro-pack என்று கூறப்படும் கூடுதல் அம்சங்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதன் விலை ரூ. 14,001 முதல் ரூ. 20,000 வரை இருக்கும். இது தேர்ந்தெடுக்கும் மாடலின் அடிப்படையில் விலை வித்தியாசம் இருக்கும். மேலும்,  இந்த pro-pack சிறப்பம்சம் பயனர்களுக்கு அதிக சலுகைகளை அளிக்கும் வகையில் இருக்கும்.

Ather 450 Electric Scooter சிறப்பம்சங்கள்:

1) புதிய மல்டி மோட் ட்ராக்சன் கண்ட்ரோல் சிஸ்டம்:
2025 Ather 450 series-இன் அனைத்து மாடல்களும் இந்த சிறப்பம்சத்துடன் வருகின்றன. இதில் 3 விதமான டார்க் இன்டர்வென்ஷன் மோடுகள் உள்ளன.

“Top 13 Laptops ₹20K – ₹50K for Students & Work – முழு தகவல்!” "Top Laptops ₹20000-₹50000 for Students and Office Use – Tamil Laptop Guide"

i) Rain mode:
மழைக்காலத்தில் சாலையின் பாசி அல்லது ஈரப்பதமானது வண்டியைப் பாதிக்காமல் பாதுகாப்பாக ஓட்டுவதற்கு “லிமிடெட் ஆக்ஸிலரேஷன்” வழங்கபட்டுள்ளது.

ii) Rally mode:
குண்டு குழியுமான சாலைகளில் ஓட்டுவதற்கு சில சீரமைப்புகளுடன் அதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

iii) Road mode:
நிதானமாக மற்றும் வேகமாக ஓட்டுவதற்கு இந்த மோடு அமைக்கப்பட்டுள்ளது.

2) மேஜிக் ட்விஸ்ட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்:
இந்த சிறப்பம்சத்தின் மூலம் ஒரே திராட்டில் மூலமாக ஸ்கூட்டரைக் கட்டுப்படுத்த முடியும். முன்பு திராட்டிலை முன்னோக்கித் திருப்பினால் வேகம் அதிகரிக்கும். ஆனால், தற்போது திராட்டிலைப் பின்னோக்கித் திருப்பினால் வாகனத்தின் வேகம் சற்று குறையும். இந்த பிரேக்கிங் முறையில் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.

3) Pro-pack -ல் கிடைக்கும் சிறப்பம்சங்கள்:  
Pro-pack-ஐத் தேர்வு செய்பவர்களுக்குப் புதிய Ather stack வழங்கப்படுகின்றது. இது முக்கிய சிறப்பம்சங்களுடன் வருகின்றது.

WhatsApp on Dash: ஸ்கூட்டர் திரையில் வாட்ஸ்அப் தகவல்களை பார்வையிட முடியும்.

Share Live Location: ஒருவர் தன்னுடைய இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

Ping My Scooter: ஸ்கூட்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவும்.

Alexa Skills: அமேசான் அலெக்ஸா வழியாக வாகனத்தைக் கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டது.

OnePlus 13 & 13R: புதிய மொபைல்கள் அறிமுகம்! OnePlus 13 & 13R வெளியீடு (OnePlus 13 and 13R Launch)

4) நிறங்கள்:
Ather இப்போது 2 புதிய நிறங்களில் வருகின்றது,

i) Stealth Blue

ii) Hyper Sand

ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் நேரம்

1) Ather 450S:
IDC (Indian Driving Cycle) Range: அதிகபட்சம் 122 கி.மீ வரை பயணிக்க முடியும்.

சார்ஜிங் நேரம்:
0% முதல் 80% வரை சார்ஜ் செய்ய 5 மணி 30 நிமிடங்கள் தேவைப்படும்.

2) Ather 450X (2.9kWh மாடல்):
IDC Range: 126 கி.மீ வரை பயணிக்க முடியும்.

சார்ஜிங் நேரம்: 3 மணி நேரத்தில் சார்ஜ் ஏற்றப்படும்.

3. Ather 450X (3.7kWh மாடல்):
IDC Range: அதிகபட்சம் 161 கி.மீ வரை பயணிக்க முடியும்.

சார்ஜிங் நேரம்: 4 மணி 30 நிமிடங்கள் தேவைப்படும்.

இந்தப் புதிய சிறப்பம்சங்கள் Ather 450 series-ஐ ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மூலம் ஆபத்து! வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

Key Insights & Best Takeaways

  • EV scooters with fast charging and smart dashboard are in high demand.
  • Ather 450X electric scooter 2025 features are now revealed with impressive upgrades.
  • Ather 450 range and mileage makes it a top EV choice in India.
  • Ather 450 price in India 2025 is competitive for the performance offered.
  • Best electric scooters in India 2025 list includes this latest Ather launch.

இதுபோன்ற சிறந்த தகவல்களைப் தொடர்ந்து பெற, எங்களுடன் இணைந்திருங்கள் – tnnewsbox.com

TN NEWS BOX – YouTube Channel

Ather 450X electric scooter 2025 official Website Click here..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *