போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் : இன்றைய காலகட்டத்தில் மக்கள் என்னதான் சம்பளம் வாங்கினாலும், அதற்கான செலவுகள் தாமதிக்காமல் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் மக்கள் தங்களின் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு பல சேமிப்புத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ஏற்றவாறு, மக்களுக்காக வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் போன்ற பல நிறுவனங்களும் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றவாறு பல திட்டங்களைத் தந்து கொண்டு இருக்கின்றன.
அந்த வகையில், சாமானிய மக்களுக்கும் கைகொடுக்கும் வகையில் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியா போஸ்டின் “கிசான் விகாஸ் பத்ரா” திட்டம் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இது எந்தவித ஆபத்தும் இல்லாமல் 115 மாதங்களில் முதலீட்டை இரட்டிப்பாக வழி வகுக்கின்றது. இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்றும், இதன் வட்டி விகிதம், வரி மற்றும் இது குறித்த கூடுதல் தகவல்களைப் பற்றியும் இங்கு விரிவாகப் பார்ப்போம்.
Table of Contents
போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் -Best Post Office Scheme

கிசான் விகாஸ் பத்ரா – Kisan Vikas Patra
Kisan Vikas Patra Post Office Scheme – கிசான் விகாஸ் பத்ரா(KVP) என்ற திட்டமானது மத்திய அரசின் ஒரு சிறப்பு வாய்ந்த திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் மக்களுக்கு அதிக வருமானம் கிடைக்கின்றது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் திட்டத்தில் 115 மாதங்களில் ஒருவரின் சேமிப்பு இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ரூ. 1000 முதல் தொடங்குகின்றது. அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. 100-இன் மடங்குகளில் முதலீட்டாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம்.
இந்தியாவின் பொருளாதாரத்தை அதிகரிக்க முடியுமா?
வட்டி முறை –Post Office “Interest Rate”
KVP திட்டத்தின் வட்டி விகிதம் 7.5%. இது காலாண்டின் அடிப்படையில் கூட்டு வட்டியாக வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டி ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படுகின்றது. மேலும், நிலுவையில் இருக்கும்போது முதலீட்டாளர்களுக்குப் பணம் செலுத்தப்படுகின்றது. இந்தத் திட்டத்தில் 10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளும் சேரலாம்.
KVP திட்டத்தில் வருமானம் எப்படி இரட்டிப்பாகிறது?
உதாரணமாக, ஒரு முதலீட்டாளர் KVP திட்டத்தில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்கள் முழுவதும் அந்த முதலீட்டை ஒருவர் வைத்திருக்கும் பட்சத்தில், 7.5% கூட்டு வட்டியுடன் திட்டம் முதிர்ச்சி அடையும்போது ரூ. 10 லட்சம் கிடைக்கின்றது.
போஸ்ட் ஆபீஸ் முதலீட்டு திட்டம் வரி அமைப்புகள்
இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்கு “வருமான வரி” பொருந்தும். மத்திய அரசு சார்பில் பல ஆண்டுகளாக இந்தத் திட்டத்தின் கால மாதங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றது.
முதலில் 123 மாதங்களாக இருந்த இந்தத் திட்டம், பின்பு 120 மாதங்களாக குறைக்கப்பட்டு, தற்போது 115 மாதத் திட்டமாக மாறியுள்ளது.
SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்!
இது முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மக்கள் விரைவான முறையில் வாங்கிக் கொள்ள வழி வகுக்கின்றது.
இந்தத் திட்டம் தனிநபர் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்குகளைத் தொடங்கிக் கொள்ளவும் அனுமதிக்கின்றது. அது மட்டுமில்லாமல், ஒருவர் தங்களின் விருப்பப்படி பல KVP கணக்குகளைத் திறந்து கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கவர்ச்சியான வட்டி விகிதம், விருப்பத்திற்கு ஏற்ப கணக்கு தொடங்கும் எண்ணிக்கைகள் மற்றும் பெரிய தொகைகளை முதலீடு செய்யும் திறன் போன்ற பண்புகளுடன் இது முதலீட்டாளர்களுக்கு ஆபத்து இல்லாத ஒரு உத்தரவாதமான திட்டமாக அமைந்துள்ளது.
அதிகாரப்பூர்வ தளம் : இந்திய அஞ்சல் அலுவலக திட்டங்கள்
மேலும், இதுபோன்ற தகவல்களை அறிந்துகொள்ள – tnnewsbox.com -ஐ தேர்ந்தெடுங்கள்…
YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox
Quick English Recap – Key Insights & Best Takeaways!
- Post Office Investment Plans offer secure & high returns for investors.
- Find out how your investment can double with safe government-backed schemes.
- Explore the best Post Office saving plans and maximize your profits!
10ம் வகுப்பு அரசு வேலை – அஞ்சல் துறையில் வேலை!














