ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? ஆதார் கார்டில் புதிய மொபைல் எண்ணை இணைப்பதற்கோ அல்லது பழைய எண்ணை மாற்றுவதற்கோ இனி இ-சேவை மையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை! புதிய Aadhaar மொபைல் செயலி (App) மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியேவெறும் 5 நிமிடங்களில் மொபைல் எண்ணை ஆன்லைனிலேயே எளிதாக மாற்றிக்கொள்ளலாம். ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது குறித்து இங்கே முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.
உள்ளடக்கம்
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி?
Aadhaar App இன்ஸ்டால் செய்யும் முறை
உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் Google Play Store-ஐ திறந்து, ‘Aadhaar’ என டைப் செய்து, அந்த ஆப்பை (App) இன்ஸ்டால் (Install) செய்யவும். ஆப் இன்ஸ்டால் ஆனதும் அதை ஓபன் செய்யவும்.
முதல் முறை திறக்கும் போது, ஆப் சில அனுமதிகளைக் (Permissions) கேட்கும். அதில் ‘Only this time’ என்பதைத் தேர்ந்தெடுத்து, அடுத்தடுத்து வரும் திரைகளில் ‘Allow’ என்பதைக் கிளிக் செய்து ஆப்பிற்குள் நுழையவும்.
ஆதார் எண்ணை உள்ளீடு செய்தல் (Login Process)
ஆப்பின் முகப்புப் பக்கத்தில் சிலமுறை ‘Next’ கொடுத்த பிறகு, ‘Enter Aadhaar Number’ என்ற ஆப்சன் திரையில் தோன்றும். அதில் உள்ள ‘Enter your Aadhaar Number’ என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் 12 இலக்க [Aadhaar Redacted] ஐ சரியாக என்டர் செய்து, கீழே உள்ள ‘Confirm Aadhar Number’ என்ற பட்டனை அழுத்தவும்.
அடுத்ததாக ‘Terms and Conditions’ பேஜ் வரும்; அதை முழுமையாகப் படித்துவிட்டு, ஸ்க்ரோல் செய்து கீழே உள்ள ‘I Agree’ பாக்சில் டிக் செய்துவிட்டு ‘Continue’ என்பதைக் கிளிக் செய்யவும்.
Read also: 18+ வயதினருக்கு Aadhar Card இனி கிடையாது! அசாம் அரசின் அதிரடி உத்தரவு!
பழைய மொபைல் எண்ணை சரிபார்த்தல் (Verification)
அடுத்தபடியாக, உங்களது பழைய மொபைல் நம்பர் எந்த சிம் கார்டில் (SIM 1 அல்லது SIM 2) உள்ளதோ, அந்த சிம்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும். செலக்ட் செய்த பிறகு, கீழே உள்ள ‘Continue to Send SMS’ பட்டனை அழுத்தினால், உங்கள் மொபைல் எண்ணைச் சரிபார்க்க உங்கள் போனில் இருந்து ஒரு மெசேஜ் தானாகவே அனுப்பப்படும். ‘Send’ என்பதைக் கிளிக் செய்து நம்பர் சரிபார்க்கப்பட்டதும், அடுத்த நிலைக்குச் செல்லலாம்.
முதல் கட்ட முக அங்கீகாரம் (Face Authentication)
மொபைல் நம்பர் வெரிஃபை ஆனதும், திரையில் ‘Continue to Face Authentication’ என்று ஒரு ஆப்ஷன் காட்டும். அதைக் கிளிக் செய்யும் முன், நீங்கள் கண் கண்ணாடி அணிந்திருந்தால் அதைக் கழற்றிவிடவும். இப்போது ‘Initiate Face Authentication’ என்பதைக் கிளிக் செய்தால், மொபைலின் முன்பக்க கேமரா (Front Camera) ஓபன் ஆகும்.
நல்ல வெளிச்சமான இடத்தில் உங்கள் முகத்தைக் கேமராவின் வட்டத்திற்குள் நேராகக் காட்டுங்கள். சர்க்கிள் பச்சை (Green) நிறமாக மாறியதும் ஒருமுறை கண்களைச் சிமிட்டுங்கள் (Blink). ஸ்கேன் வெற்றிகரமாக முடிந்தால் ‘Green Tick’ வந்துவிடும். அடுத்து ‘Proceed’ என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆப்-பிற்கான PIN எண் செட் செய்தல்
பாதுகாப்பு வசதிக்காக, இந்த ஆப்பில் நீங்கள் மீண்டும் லாகின் செய்வதற்கு ஒரு 6 இலக்க ரகசிய எண்ணை (PIN Number) உருவாக்க வேண்டும். உங்களுக்கான 6 இலக்கப் பின் நம்பரை என்டர் செய்து, மறுபடியும் அதே நம்பரை என்டர் செய்து ‘Confirm your PIN’ என்பதைக் கிளிக் செய்யவும். இடையில் வரும் தேவையற்ற ஆப்ஷன்களை ‘Skip’ செய்துவிடலாம். இப்போது நீங்கள் வெற்றிகரமாக Aadhaar ஆப்-பிற்குள் நுழைந்துவிடுவீர்கள்! அங்கு ‘Tap to review your Aadhaar Card’ என்பதைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கலாம்.
Read also: ஜூலை 2025 முதல் புதிய Money Rules : UPI, Aadhaar, PAN மாற்றங்கள்!
புதிய மொபைல் எண்ணை மாற்றுதல் (Update Process)
மொபைல் நம்பரை மாற்ற, ஆப்பின் கீழே உள்ள ‘Services’ பகுதிக்குச் செல்லவும். அதில் ‘My Aadhaar Update’ என்பதைக் கிளிக் செய்து, அடுத்து ‘Mobile Number Update’ என்ற முதல் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த அப்டேட் பிராசஸ் முடிவடைய தோராயமாக 5 நிமிடங்கள் ஆகும் மற்றும் இதற்குக் கட்டணமாக ரூ.75 ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்ற தகவல் திரையில் தோன்றும்.
புதிய நம்பர் என்டர் செய்தல் & OTP சரிபார்ப்பு
இப்போது நீங்கள் உங்கள் ஆதாருடன் புதிதாக லிங்க் செய்ய விரும்பும் மொபைல் எண்ணைச் சரியாக என்டர் செய்து, ‘Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த புதிய நம்பருக்கு ஒரு ஒன்-டைம் பாஸ்வேர்டு (OTP) வரும். அந்த OTP-யை என்டர் செய்து ‘Verify’ என்பதைக் கிளிக் செய்தால், உங்கள் புதிய நம்பர் வெற்றிகரமாக வெரிஃபை ஆகிவிடும்.
இறுதி கட்ட முக அங்கீகாரம் & கட்டணம் செலுத்துதல்
OTP சரிபார்க்கப்பட்டதும், மீண்டும் ஒருமுறை ‘Face Authenticate’ செய்ய வேண்டும். முந்தைய முறையைப் போலவே, கண்ணாடியைக் கழற்றிவிட்டு, ‘Proceed’ கொடுத்து முகத்தை ஸ்கேன் செய்யுங்கள். கிரீன் டிக் வந்ததும், கீழே உள்ள ‘Confirm and Pay’ ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
ஜிபே (GPay), போன்பே (PhonePe), டெபிட் கார்டு (Debit Card) அல்லது கிரெடிட் கார்டு (Credit Card) மூலமாக ரூ.75 கட்டணத்தைச் செலுத்துங்கள். பேமெண்ட் செலுத்தப்பட்டவுடன், ‘Your mobile update request has been submitted successfully’ என்ற மெசேஜ் திரையில் தோன்றும்.
கடைசியாக, ‘Download Acknowledgment’ என்பதைக் கிளிக் செய்து, அப்டேட் செய்ததற்கான ஒப்புகைச் சீட்டை (Receipt) டவுன்லோடு செய்து அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மொபைல் நம்பர் அப்டேட் ஆனதற்கான கன்ஃபர்மேஷன் மெசேஜ் உங்களது புதிய எண்ணிற்கு எஸ்எம்எஸ் (SMS) ஆக வந்துவிடும்.
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? – FAQs
1) ஆதார் கார்டில் மொபைல் நம்பரை ஆன்லைனில் மாற்ற முடியுமா?
ஆம், இ-சேவை மையத்திற்குச் செல்லாமல் ‘Aadhaar’ மொபைல் செயலி மூலம் உங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
2) ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எவ்வளவு கட்டணம்?
ஆதார் ஆப் (App) மூலமாகப் புதிய மொபைல் எண்ணை அப்டேட் செய்வதற்கு ஆன்லைனில் ரூ.75 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
3) ஆன்லைனில் ஆதார் மொபைல் எண்ணை மாற்ற எவ்வளவு நேரம் ஆகும்?
புதிய ‘Aadhaar’ ஆப்பில் உள்ள முக அங்கீகார (Face Authentication) வசதியைப் பயன்படுத்தி வெறும் 5 நிமிடங்களில் இந்த மாற்றத்தை நீங்கள் செய்துவிடலாம்.
முக்கியக் குறிப்புகள்!
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி? ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது இனி சுலபம். ஆதார் அட்டையில் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு இனி இ-சேவை மையங்களுக்குச் செல்லாமல், ‘Aadhaar’ செயலி மூலம் வீட்டிலிருந்தபடியே எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இந்த நவீன முறையில் முக அங்கீகார (Face Authentication) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், எவ்வித ஆவணங்களும் இன்றி வெறும் 5 நிமிடங்களில் உங்களால் அப்டேட் செய்துவிட முடியும். இதற்கு ஆன்லைன் மூலமாக 75 ரூபாய் மட்டுமே கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பது பொதுமக்களுக்கு மிகச் சிறந்த நேர மற்றும் பண மிச்சமாகும். பழைய சிம் கார்டு மற்றும் OTP சரிபார்ப்பு மூலம் மிகவும் பாதுகாப்பாக நடக்கும் இந்த அப்டேட் நடைமுறை முடிந்தவுடன், உங்கள் புதிய நம்பருக்கு உடனடியாக உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி வந்துவிடும்.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox











