மக்களே உஷார்! வாய்ஸ் மெயில் மோசடியால் ஆபத்து!

வாய்ஸ் மெயில் மூலம் மோசடி – Voice Mail Scam Warning 2025

வாய்ஸ் மெயில் மோசடி : தற்போதைய காலகட்டத்தில் என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், அதே அளவு மோசடிகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக சில மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதைத் தெரிந்து கொள்ளாத மக்கள் மோசடி வலைகளில் விழுந்து பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். தற்போது, ஆர்பிஐ என்ற பெயரில் சில கும்பல்கள் மக்களின் வங்கிக் கணக்கைத் திருடி, அதில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கின்றார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

சமீபத்தில், இந்தியன் ரிசர்வ் வங்கி (RBI) என்ற பெயரில் மக்களுக்கு வாய்ஸ் மெயில் (Voice mail) அனுப்புகின்றனர். இந்த செய்தியில் உங்களின் வங்கிக் கணக்கு மூடப்படும் என்றும், உங்களின் விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வங்கி கணக்கின் விவரங்கள் மற்றும் ஓடிபி-கள் தேவைப்படுகிறது என்றும் கூறப்படும். ஆனால், ஆர்பிஐ இவ்வாறு எந்த ஒரு வாய்ஸ் மெயில்களும் அனுப்பாது. இந்த வாய்ஸ் மெயில் வருவதன் மூலம் ஒருவரின் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. மேலும், உங்களின் விவரங்கள் பிற மோசடிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

வாய்ஸ் மெயில் மோசடி

வாய்ஸ் மெயில் மோசடி அபாயம் – Voice Mail Scam Alert India
மக்களே கவனம்! வாய்ஸ் மெயில் மூலம் வரும் மோசடியில் விழிக்க வேண்டியது அவசியம்

Fake voice mail message – வாய்ஸ் மெயிலில் போலியான செய்தி

ஆர்பிஐ-யின் பெயரில் அனுப்பப்படும் இந்த வாய்ஸ் மெயிலில், “வணக்கம், இது இந்திய ரிசர்வ் வங்கி. உங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதால் அடுத்த 2 மணி நேரத்தில் அனைத்து வங்கிக் கணக்குகளும் பிளாக் செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு எண் 9-ஐ அழுத்தவும்” என்று கூறப்படும். ஒரு நபர் எண் 9-ஐ அழுத்தினால், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மோசடிக்காரர்களிடம் சென்றுவிடும். எனவே, இது போன்று வரும் வாய்ஸ் மெயில்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“2025 புதிய விதிகள் – மக்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றம்!”  2025 புதிய விதிகள் – Indian Citizens Daily Life Changes

PIB Fact Check – பிஐபி ஃபேக்ட் செக்

சமீபத்தில் இது குறித்து எக்ஸ் பக்கத்தில் “பிஐபி ஃபேக்ட் செக்” என்ற அக்கவுண்ட்டில், “உங்கள் கிரெடிட் கார்டு மோசடி செயலில் ஈடுபட்டுள்ளதால், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று கூறி, இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளதா #PIBFactCheck செய்யவும். ஜாக்கிரதை! இது ஒரு மோசடி” என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இன்றைய நவீன உலகில் சைபர் கிரைம் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. மோசடிக்காரர்களும் மக்களை ஏமாற்ற புதிய யுத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும்.

உங்களை காப்பாற்ற எவ்வாறு எச்சரிக்கை இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

வாய்ஸ் மெயில் மோசடி – தப்பிக்க சில வழிமுறைகள்

1) அடையாளத்தை உறுதிப்படுத்துதல்

உங்களுக்கு வங்கி அதிகாரி அல்லது அரசு அதிகாரி என்று யாராவது தொடர்பு கொண்டால், அவர்கள் உண்மையாகவே அந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை அதிகாரப்பூர்வ இணையதளங்களின் மூலம் சரி பார்த்துக் கொள்ளலாம்.

2) தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருத்தல்

உங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஓடிபி, கிரெடிட் கார்டு விவரங்கள், பாஸ்வேர்டுகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை யார் கேட்டாலும் வழங்க வேண்டாம். ஏனென்றால், அரசு அல்லது வங்கியில் பணிபுரிபவர்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களைத் தொலைபேசி மூலமாக கேட்க மாட்டார்கள்.

Successful SIP investments சிறிய முதலீடு, அதிக லாபம்! "Successful SIP முதலீடு – Wealth Growth & High Returns"

3) அவசரப்பட வேண்டாம்:

யாரேனும் உங்களை அவசரப்படுத்தித் தகவல்களை வாங்க முற்பட்டால், அவர்களை நம்ப வேண்டாம். அந்த நேரத்தில் சிறிது நேரம் யோசித்து, அந்த விஷயத்தை நம்பிக்கைக்குரியவர்களிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது.

4) சந்தேகத்திற்குரிய அழைப்புகளை பிளாக் செய்தல்:

உங்களுக்கு சந்தேகத்திற்குரிய எண்ணில் இருந்து ஏதாவது அழைப்பு வந்தால், அந்த எண்ணை உடனடியாக பிளாக் செய்து விடவும். மேலும் அந்த எண்ணைப் பற்றி டெலிகாம் நிறுவனத்தில் புகார் செய்யலாம்.

5) பாதுகாப்பான வைஃபை-களைப் பயன்படுத்திக் கொள்ளுதல்:
பொது இடங்களில் ஃப்ரீ வைஃபை-களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். இதன்மூலம், தனிப்பட்ட நபரின் டேட்டாவை ஹேக் செய்யாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இந்திய இணைய குற்றவியல் போர்டல் – அரசு அதிகாரப்பூர்வ இணையம் – Click here..

PIB Fact Check – போலி செய்திகள் மற்றும் மோசடி எச்சரிக்கைகள்Click here..

Google பாதுகாப்பு மையம் – Phishing & Scam பாதுகாப்பு தகவல்கள் Click here..

CERT-In அதிகாரப்பூர்வ இணையதளம் – இணைய பாதுகாப்பு வழிகாட்டிகள்Click here..

RBI இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு – வங்கிப் பணி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான பாதுகாப்பு – Click here..

“Quick English Recap – Key Insights & Best Takeaways!

  • Voice Mail Scam is Rising! Cybercriminals use Phishing & Spoofing to steal your personal data.
  • How It Works? Fake voice mails trick users into revealing sensitive information.
  • Dangers: Your privacy, bank details, and identity could be compromised.

Comment Box

    Scroll to Top