திமுக பாஜக ரகசிய கூட்டணி: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஒரு அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையேயான ஒப்பந்தம் குறித்து அவர் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, தேசிய அளவில் மற்றும் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
உள்ளடக்கம்
திமுக பாஜக ரகசிய கூட்டணி
மம்தாவின் இந்த கோபத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் தேர்தலுக்காக நடத்தப்பட்ட நிர்வாக நிர்வாக நடவடிக்கைகளே என்று கூறப்படுகிறது. மேற்கு வங்கத்திலிருந்து மட்டும் சுமார் 510 ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை, தேர்தல் பணிக்காக தமிழ்நாடு மற்றும் தேர்தல் நடக்கும் பிற மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் திடீரென மாற்றியுள்ளது. இதற்குத்தான் மம்தா அவர்கள் இவ்வளவு அதிகமான அளவில் அதிகாரிகளை மேற்கு வங்கத்திலிருந்து மட்டும் மற்றம் செய்வது ஏன்? அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் மாற்றம் செய்வதால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, குடிநீர், உணவு போன்ற அத்தியாவசியத் தேவைகளை யார் கவனிப்பார்கள்? என்று மம்தா அவர்கள் சரமாரியாக கேள்வி தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியுள்ளார்.
அவர் பேசிய அந்த உரையில் “தமிழகத்தின் மீது மட்டும் மோடி அரசாங்கத்திற்கு ஏன் இவ்வளவு பாசம்? காங்கிரஸ் மற்றும் மு.க.ஸ்டாலினுடன் நிச்சயமாக ஒரு உள்ளூர் ரகசிய ஒப்பந்தத்தை (Secret Deal) செய்திருக்க வேண்டும் ,” என்று தனது பரபரப்பான உரையில் மம்தா பானர்ஜி கடுமையாக சாடினார். அதுதவிர, மேற்கு வங்கத்தில் இருக்கும் முக்கிய அதிகாரிகளை கட்டாயமாக தமிழகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு, உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பணியாற்றும் நிர்வாகிகளை ‘வெளிநபர்களை’ மேற்கு வங்கத்திற்கு கொண்டு வந்து தேர்தல்களில் தில்லுமுல்லு செய்ய சதி செய்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Read also: தமிழ்நாடு தேர்தல் திமுக vs அதிமுக கூட்டணியில் இஸ்லாமிய வேட்பாளர்கள்
மம்தா பானர்ஜியின் அதிரடியான இந்த ‘ஸ்டாலின் – மோடி டீல்’ குற்றச்சாட்டு தமிழக தேர்தல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திமுக பாஜக ரகசிய கூட்டணி இருப்பதாக மம்தா பானர்ஜி நேரடியாக குற்றம் சட்டியுள்ளதால், தற்போதைய தேர்தல் களத்தில் பெரும் புயல் வீசத் தொடங்கியுள்ளது. மம்தா பானர்ஜியின் இந்த கடுமையான குற்றச்சாட்டுக்கு திமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து என்ன மாதிரியான எதிர்வினை வரப்போகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.
முக்கியக் குறிப்புகள்!
திமுக பாஜக ரகசிய கூட்டணி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடி இடையே ரகசிய ஒப்பந்தம் உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 510 ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் திடீரென பணியிட மாற்றம் செய்ததே மம்தாவின் இந்தக் கடும் கோபத்திற்குக் காரணமாகும். இவ்வளவு அதிகாரிகளை கூண்டோடு மாற்றினால் மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசியப் பணிகளை யார் கவனிப்பார்கள் என அவர் தேர்தல் ஆணையத்தைக் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உள்ளூர் அதிகாரிகளைத் தமிழகத்திற்கு அனுப்பிவிட்டு, வடமாநில அதிகாரிகளை உள்ளே கொண்டுவந்து மேற்கு வங்கத் தேர்தலில் தில்லுமுல்லு செய்ய பாஜக சதி செய்வதாகவும் அவர் பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
நம்பகமான தகவல்கள் – ஒரே இடத்தில், உங்கள் மொழியில்!
தினமும் அறிந்துகொள்ளுங்கள் – உண்மை சார்ந்த தகவல்கள்!
எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள் – tnnewsbox.com
எங்களது YouTube channel-ஐ பார்வையிட – www.youtube.com/@TNNewsBox










